உருகா உருமாற்றம்
|
உருகா உருமாற்றம் (Metasomatism). மெட்ட மார்பி என்னும் கிரேக்கச் சொல்லுக்கு உருமாற்றம் என்பது பொருள். பாறைகள் வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு உருமாற்றம் அடைகின்றன. பாறைகள் உருமாறுதல் என்பது அவற்றின் கடினத்தன்மை, புரை, துகள்கள் அளவு, இராசயனங்கள், செய்கைகள், கரையும் தன்மை இவற்றைப் பொறுத்தது.[1][2][3][1][2][3][1][4][2]
சில தருனங்களில் அமிலம் கலந்த நீர் பாறைகளின் விரிசல்களில் நுழைந்து பக்கச் சுவர்களை உருமாற்றுகிறது. இச்செயலுக்கு மெட்டா சோமாடிஸம் என்கிறோம்.
ங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் இம்முறையில்தான் தோன்றுகிறது.
பாறைகள் உருமாற்றம் அடையும்போது இரண்டு பண்புகளைத் தோற்றுவிக்கிறது.
- படிகமாதல்
- கடினமாதல்
படிகமற்ற பாறைகள் படிகப்பாறைகளாகவும், மென்மையான பாறைகள் கடினப்பாறைகளாகவும் உருமாற்றம் பெறுகின்றன.
மணற்பாறைகள் உருமாறும்போது குவார்ட்ஸ் தூகளில் மறு அணு அமைப்பு ஏற்பட்டு பின்னிப் பிணைந்து மாற்றுரு கொண்ட குவார்சைட் பாறையாக உருமாகிறது.
குவார்சைட் பாறைகள் உடைப்பட்டால் துகள்களை இணைக்கும் பொருட்களான களிமண் மற்றும் இரும்பு ஆக்ஸைடு அதிக அளவில் இருத்தல் மற்பாறை ஹிமடைட் குவார்ட் சைட்டாகவும், மாக்னைடைட் குவார்சைட்டாகவும் மாற்றம் அடைகிறது.
சுண்ணாம்புக்கல் உருமாறும்போது அவற்றின் கால்சைட் அல்லது கால்சியம் கார்பனேட் படிகங்கள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து சலவைக்கல்லாக உருமாற்றம் பெறுகிறது.
களிப்பாறை குறைவான வெப்பம், அமுக்கம் இவற்றால் பாதிக்கப்பட்டு கடினமாக மாறி பலகைப்பாறையாக மாறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Harlov, D.E.; Austrheim, H. (2013). Metasomatism and the Chemical Transformation of Rock: Rock-Mineral-Fluid Interaction in Terrestrial and Extraterrestrial Environments. Berlin: Springer. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-28394-9_1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-28393-2.
- ↑ 2.0 2.1 2.2 "metasomatosis". Merriam-Webster.com Dictionary. Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
- ↑ 3.0 3.1 Zharikov V.A.; Pertsev N.N.; Rusinov V.L.; Callegari E.; Fettes D.J. "9. Metasomatism and metasomatic rocks" (PDF). Recommendations by the IUGS Subcommission on the Systematics of Metamorphic Rocks: Web version 01.02.07. British Geological Survey.
- ↑ Putnis, A.; Austrheim, H. (2010-12-23). "Fluid‐Induced Processes: Metasomatism and Metamorphism". Frontiers in Geofluids: 254–269. doi:10.1002/9781444394900.ch18. http://dx.doi.org/10.1002/9781444394900.ch18.