உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே

தொல்காப்பியர் உரிப்பொருள் பற்றிக் கூறும் ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ என்ற இந்நூற்பாவில் குறிப்பிடப்பெறும் உரிப்பெறும் ‘உரிப்பொருள் அல்லன’ பற்றி உரையாசிரியர்கள் கருத்து மாறுபடுகின்றனர்.

இளம்பூரணர்

அகத்திணையில் வரும் முதல், கரு, உரிப்பொருள்களுள், உரிப்பொருள் அல்லன மற்ற முதல்பொருளையும் கருப்பொருளையும் கொள்கிறார் இளம்பூரணர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார்

கொண்டு தலைக்கழிதல், பிரிந்தவண் இரங்கல், கலந்தபொழுது காட்சி ஆகிய துறைகளைக் கருதுகின்றார் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

பிற உரைகாரர்கள்

நச்சினார்க்கினியர், புலவர் குழந்தை, அருணாச்சலம் பிள்ளை ஆகியோர் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இவற்றைக் கருதுகின்றனர்.

இவற்றுள் இளம்பூரணர் கருத்தே ஏற்புடையதாகத் தோன்றுகிறது. பாடலுள் பயின்றுவருகின்ற மூன்று பொருள்களுள் உரிப்பொருள் அல்லாத பொருள்களான முதலும் கருவுமே எனலாம்.

[1]

  1. தொல்காப்பியம், பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை