உயுகிகோ கோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயுகிகோ கோகா (Yukiko Koga) நியூயார்க் நகர பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அண்ட்டர் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த ஒரு மானுடவியலாளர் ஆவார். [1][2] சட்டப்பூர்வ மானுடவியல், நகர்ப்புற இடம், காலனித்துவத்திற்கு பிந்தைய மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு பிந்தைய உறவுகள், வரலாறு மற்றும் நினைவகம், நாடுகடந்த கிழக்கு ஆசியா (சீனா மற்றும் சப்பான்) ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவராக உயுகிகோ கோகா இருந்தார்.

கல்வி[தொகு]

பிரவுன் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஆசிய ஆய்வுகளில் ஒரு முதுகலை அறிஞராக கோகா இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேரடியாக மஞ்சூரியா மற்றும் சீன முதன்மை நிலப் பகுதிகள் போன்ற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் காலனித்துவ மற்றும் காலனித்துவ கலாச்சாரத்தில் இவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். [3] இந்த பணியை முடிக்க மனிதநேய மானியத்திற்கான தேசிய உதவித்தொகையை கோகா பெற்றார். [4] மரபுவழி இழப்பு: சீனா, ஜப்பான் மற்றும் பேரரசுக்கு பின்னர் மீட்கப்பட்ட அரசியல் பொருளாதாரம் (சிகாகோ பல்கலைக்கழக பதிப்பகம், 2016) என்ற புத்தகத்தை கோகா எழுதினார். [1][5] 2017 ஆம் ஆண்டு அமெரிக்க மானுடவியல் கழகத்தின் பிரான்சிசு எல். கே. அசு மற்றும் அந்தோனி லீட்சு புத்தக பரிசுகளை உயுகிகோ கோகா வென்றார். [6][7] தற்போது இவர் ரைசு பல்கலைக்கழக பத்திரிகையில் ஆசிய விமர்சனம் என்றத் தலையங்கப் பகுதியில் பணியாற்றுகிறார். [8]

விருதுகள்[தொகு]

 • 2018-2019 – பிரின்சுடன் பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் பொதுவிவகார அறிஞர் விருது[9]
 • 2018 – அண்ட்டர் கல்லூரியின் சிறந்த ஆளுமை என்ற தலைமை விருது [10]
 • 2017 – பிரான்சிசு எல் அசு புத்தகப் பரிசு[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Yukiko Koga — Hunter College". www.hunter.cuny.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-31. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
 2. "Yukiko Koga's Study of the WEAI "Inheritance of Loss" Receives AAA's 2017 Francis L. K. Hsu and Anthony Leeds Book Prizes". weai.columbia.edu (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-05-21. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
 3. "Accounting for silence: Inheritance, debt, and the moral economy of legal redress in China and Japan | American Ethnological Society". American Ethnological Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
 4. "NEH grant products: Accounting for Silence: Narration, Nation, and the Politics of Redress in China and Japan". securegrants.neh.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
 5. "Yukiko Koga". weai.columbia.edu (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-06-21. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
 6. "Yukiko Koga's book has received the AAA's 2017 Francis L. K. Hsu and Anthony Leeds Book Prizes". academy.wcfia.harvard.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
 7. "Yukiko Koga's Study of the WEAI "Inheritance of Loss" Receives AAA's 2017 Francis L. K. Hsu and Anthony Leeds Book Prizes". weai.columbia.edu (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-05-21. பார்க்கப்பட்ட நாள் 2018-07-31.
 8. "About Us | History | Rice University". history.rice.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2018-10-24. பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
 9. "W&M law professor selected as LAPA Fellow | William & Mary". www.wm.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
 10. "Professors Yukiko Koga and Michael Steiper Receive 2018 Presidential Awards for Excellence — Hunter College". www.hunter.cuny.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
 11. "Past SEAA Awards". Society for East Asian Anthropology (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயுகிகோ_கோகா&oldid=3545153" இலிருந்து மீள்விக்கப்பட்டது