உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர்சார் கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்சார் கூறு (Biotic component) என்பது, சூழல் மண்டலம் ஒன்றை உருவாக்குகின்ற உயிரினம் சார்ந்த கூறுகளுள் ஒன்றைக் குறிக்கும். பொதுவாக, உயிர்சார் கூறுகளுள், உற்பத்தி செய்வன, நுகர்வன, சிதைப்பன என்பன அடங்குகின்றன.[1]

  • "உற்பத்தி செய்வன" அல்லது "தன்னூட்ட உயிரிகள்" சூரிய ஒளி, நீர், காபனீரொட்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளித்தொகுப்பு மூலம் உணவைத் தாமே உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் இவற்றுக்கான எடுத்துக்காட்டுகள்.
  • "நுகர்வன" அல்லது "சார்பூட்ட உயிரிகள்" உணவுக்காக உற்பத்தி செய்யும் உயிரிகள் மீதோ அல்லது பிற நுகர்வனவற்றின் மீதோ தங்கியிருப்பவை. விலங்குகள் இவ்வகையின.
  • "சிதைப்பன" அல்லது "மக்குண்ணிகள்", முதல் இரு உயிர்சார் கூறுகளான தாவரங்கள், விலங்குகளின் இறந்த உடல்களில் இருக்கும் வேதிப்பொருட்களை உடைத்து மீண்டும் பயன்படத்தக்க வகையில் எளிய வடிவங்களாக்குகின்றன.

சூழல் மண்டலமொன்றின் உயிர்சார் கூறுகளிலிருந்து வேறுபட்ட கூறுகள் உயிர்சாராக் கூறுகள் எனப்படுகின்றன. வெப்பநிலை, ஒளிச்செறிவு, ஈரத்தன்மை, நீர் மட்டம், காற்றோட்டம், காபனீரொட்சைட்டு அளவு, நீரினதும் மண்ணினதும் pH அளவுகள் என்பன உயிர்சாராக் கூறுகளுள் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்சார்_கூறு&oldid=2224032" இலிருந்து மீள்விக்கப்பட்டது