உயிர்சக்தி பொருள்
உயிர்வழிப் பொருள் (biogenic substance) பொதுவாக உயிரின வழிதோறியப் பொருட்களாகும். இந்த உயிர்வழிப் பொருட்கள் தாவரங்கள், விலங்கினங்களின் பகுதிகள், கழிவுகள், சுரப்புகளாகக்கூட இருக்கலாம். உயிர்வழிப் பொருட்கள் பல்வேறு உயிர்மூலக்கூறுகளாகும்.
நிலக்கரி, எண்ணெய் ஆகியவை புவியியல் காலக் கணக்கில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் உருவாகியுள்ள உயிர்வழிப் பொருட்களாகும். சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புச் சிப்பிகள் (கடல் சார் விலங்கினங்களின் ஓடுகள் மூலம்) புவியியல் காலக் கணக்கில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் உருவாகியுள்ள உயிர்வழிப் பொருட்களாகும்.[1][2][3]
புல் வகைகள், மரம், செடி, கொடிகள், இதர தாவர இனங்கள் பூமியில் நன்னீர் தோற்றம் மழையின் மூலமும் பிற்காலத்தில் தோன்றிய உயிர்சார் கூறுகளாகும்.
முத்து, பட்டு, கோந்து போன்றவை பின்னால் கடல்சார் உயிர் மற்றும் நில வாழ் உயிர் மற்றும் தாவரங்களில் தண்டுப்பகுதியில் பிற்காலத்தில் தோன்றிய முக்கிய சுரப்புகளாகும். இந்த சுரப்புகளும் உயிர்வழிப் பொருள்களாகவே கருதப்படுகின்றன.
உயிர்சாரா பொருட்கள்: இவை தற்போதைய அல்லது கடந்த கால உயிரினங்களின் செயல்பாடுகளால் தோன்றியனவல்ல. மாறாக, பல்வேறு காலகட்டங்களில் மண்ணில் பல்வேறு மாற்றங்களுக்குப் பின்னால் இவை உருவாகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Francis R, Kumar DS (2016). Biomedical Applications of Polymeric Materials and Composites. John Wiley & Sons.
- ↑ "New York Academy of Sciences. Section of Geology and Mineralogy" (in en). Science 18 (468): 789–790. 1903-12-18. doi:10.1126/science.18.468.789. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. https://zenodo.org/record/1518304.
- ↑ "Biogenic substances in sediments and fossils". Angewandte Chemie 10 (4): 209–25. April 1971. doi:10.1002/anie.197102091. பப்மெட்:4996804.