உயிரே (கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உயிரே
உயிரே (கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைகாதல்
குடும்பம்
நாடகம்
இயக்குனர்மௌரிய குப்தன்
நடிப்பு
 • மனிஷா ஜித்
 • அம்ருத்
 • வீரேந்திர சௌத்ரி
 • கௌரவ் குப்தா
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
சீசன்கள்1
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ராடான் மீடியாவொர்க்ஸ்
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2 சனவரி 2020 (2020-01-02) –
ஒளிபரப்பில்

உயிரே சனவரி 2, 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்தாண்டின் முதல் தொலைக்காட்ச்சி தொடர் என்ற பெருமை இந்த தொடரையே சேரும்.[2]

இந்த தொடர் ஹிந்தி மொழித் தொடரான சோடி சர்தாரி என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். புதுமுக நடிகர் மற்றும் பிரபல நடிகை நமிதா வின் கணவனான வீரேந்திர சௌத்ரி[3] என்பவர் அத்தியாயம் 1 முதல் 37 வரை செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தற்பொழுது அவளும் நானும், தாழம்பூ போன்ற தொடர்களின் நடித்த அம்ருத் என்பவர் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமிழ் திரைப்பட நடிகை மனிஷா ஜித் என்பவர் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[4][5]

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை பவித்ரா என்ற இளம் பெண் தனது தாயின் அரசியல் ஆசையால் தன் காதலனைப் பறிகொடுத்துவிட்டு சந்தர்ப்பவசத்தால் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை கணவனிடம் சொல்லுகிறாள். இதற்க்கு பிறகு இவளின் வாழ்வில் நடக்கும் போராட்டங்களை எப்படி கடந்துவருகிறாள் என்பதே கதை.

நடிகர்கள்[தொகு]

 • மனிஷா ஜித் - பவித்ரா
  • குடும்பத்தின் மீதும் பாசமும் உயிரோடு இல்லாத தன் தந்தையின் சொல்லே வேதவாக்கு என நினைத்து நேர்மையான வழியில் போராடத் துடிக்கும் ஒரு இளம் பெண்.
 • வீரேந்திர சௌத்ரி (1-37) → அம்ருத் (37-) - செழியன்
  • வேளாண்துறை அமைச்சர் மற்றும் மனைவியை இழந்துவிட்டு 5 வயது குழந்தைக்குத் தகப்பன்.
 • கௌரவ் குப்தா - வருண் (1-40)
  • குடிமைப்பணி தேர்வு எழுதுவதற்கான காத்திருக்கும் ஒரு சாதாரண குடுமத்தை சேர்ந்தவன். பவித்ராவை காதலித்தற்காக வீரலட்சுமியால் இருக்கின்றான்.
 • சோனா நாயுடு - வீரலட்சுமி
  • நான்கு பிள்ளைகளின் தாய் மற்றும் திமிர் பிடித்த அரசியல் வாதி, தாய்ச் சொல்லைத் தட்டாத மூன்று சகோதரர்கள்.
 • நிரோஷா
 • பெரோஸ் கான் -
  • வீரலட்சுமியின் மூத்த மகன் மற்றும் பவித்ராவின் அண்ணன்.
 • பாவாஸ் சயனி
  • வீரலட்சுமியின் இரண்டாவது மகன்.
 • யாழினி ராஜன்
 • தமிழ்
 • ஜீவா ரவி
 • சாத்வீக்

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரின் கதையின் நாயகியாக மனிஷாஜித் நடிக்கின்றார். இவர் தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 2015 இல் விந்தை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாயும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் மற்றும் நடிகை நமிதாவின் கணவன் வீரேந்திர சௌத்ரி என்பவர் செழியன் என்ற கதாபாத்திரத்தில் 5 வயது குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ளார். பவித்ராவின் காதலனாக புதுமுக நடிகர் கௌரவ் குப்தா என்பவர் வருண் என்ற கதாபாத்திரத்திலும், தாய் கதாபாத்திரத்தில் மலையாள தொலைக்காட்சி நடிகை சோனா நாயுடு என்பவர் வீரலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றார். தமிழ் நடிகை நிரோஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள்
Previous program உயிரே
(2 சனவரி 2020 - ஒளிபரப்பில்)
Next program
பேரழகி
(20 பெப்ரவரி 2018 - 21 திசம்பர் 2019)
-