உயிரியல் வானிலையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியல் வானிலையியல் (Biometeorology) என்பது உயிர்க்கோளம், புவி வளிமண்டலம் இரண்டின் ஊடாட்டத்தை ஒரு பருவம் அல்லது அதற்கும் குறைவான கால அளவில் பயிலும் பல துறையிடை அறிவியல் புலமாகும். கால அளவு இதை விடக் கூடும்போது இத்துறையே உயிரியல் காலநிலையியல் எனப்படுகிறது. இத்துறை தாவரங்கள்,விலங்குகள் மீதான வானிலையின் விளைவுகளைக் கண்டறியும் அறிவியலாகும்.

தோற்றம்[தொகு]

உலக உயிரியல் வானிலையியல் கழகம் 1956 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது பின்வரும் 5 வகை உட்பிரிவுகளைக் கொண்டது.

  • தாவர வானிலையியல்
  • விலங்கின வானிலையியல்
  • மனித வானிலையியல்
  • விண்வெளி உயிரியல் வானிலையியல்
  • தொல் உயிரியல் வானிலையியல்.

இத்துறை மனிதன் உட்பட அனைத்து உயிரிகளின் நல்வாழ்வு நிலையிலும்,நோயுற்ற நிலையிலும் வானிலை சார்ந்த காரணிகளின் விளைவுகளைக் கண்டறிகிறது.

வானிலை, உயிர்க்கோள ஊடாட்ட நிகழ்வுகள்[தொகு]

வானிலை நிகழ்ச்சிகள் குறுங்கால அலவில் உயிரியல் நிகழ்வுகளின்பால தாக்கம் செலுத்துகின்றன. எடுத்துகாட்டாக, தொடுவானில் இருந்து சூரியன் காலையில் மேலெழ எழ, தாவர இலைகளில் ஒளிச்சேர்க்கை நடைபெற போத்துமான ஒளி மட்டம் கிடைக்கிறது. பின்னர், பகலில், காற்றின் வெப்பநிலையும் ஈரப்பதமும் பகுதியாக அல்லது முழுவதுமாக இலைத்துளைகள் தூண்டி மூடவைக்கின்றன. இத்தாவரத் துலங்கல் இலைகளில் ஆவிப்போக்கு வழியாக நீர் ஆவியாகி இழப்பதைத் தவிர்க்கிறது. மிகப் பொதுவாக அன்றாட வானிலையியல் மாறிகளின் படிமலர்ச்சிதவர, விலங்கின பருவமுறை சீரிசைவைக் கட்டுபடுத்துகிறது.

வாழும் உயிரிகளும் ஒருங்கிணைந்து வானிலை பாணிகளை ஓரளவு மாற்றுகின்றன. காடுகளின் ஆவிப்போக்கு வீதம், அல்லது செறிவான தாவரத்திணைப் பொருண்மம் வளிமண்டலத்தில் நீரை ஆவி வடிவத்தில் விடுவிக்கிறது. இந்தக் கள நிகழ்வு தொடர்ந்து வேகமாக நிகழும்போது அப்பகுதியில் மழைப்பொழிவை உருவாக்குகிறது.மேலும், இன்னொரு எடுத்துகாட்டாக, தாவரங்கள் வாடும்போது இளையின் கோணம் மாறிடுவதால், சுரிய ஒளியின் எதிர்தெறிப்பும் கட்த்தலும் உட்கவர்தலும் மாறுகிறது. இது தரையில் இருந்து வளைமண்டலம் வரை சூழலின் ஒளிகவர் வீதத்தையும் உணர்வெப்ப, மறைவெப்பப் பெருக்குகளின் சார்பு முதன்மையினையும் மாற்றுகிறது . கடலியல் சார்ந்த எடுத்துகாட்டாக, கடல்நீர் உயிரியல் செயல்பாட்டால் வெளியிடப்படும் இருமீதைல் கந்தகியின் வளிமண்டல காற்றுத்தூசிப் படலத்தின்பாலான தாக்கத்தையும் கருதலாம்.

மனிதர்பால் வானிலையின் விளைவுகள்[தொகு]

உயிரியல் வானிலையியலின்முறைகளும் அளவீடுகளும் மற்ற உயிர்க்கோளபகுதிகளுக்கு அமைவதைப் போலவே மாந்தருக்கும் வளிமண்டல ஊடாட்டத்துக்கும் பொருந்துகின்றன.சில மாந்தரினக் கூறுபாடுகள் மேலும் ஆழ்ந்த ஆய்வினைக் கோருகின்றன. எடுத்துகாட்டாக, காற்றுச் சில்லிப்பு ஆய்வு மாந்தரின் மீது தொடர்ந்த காற்று, வெப்பநிலை ஏற்படுத்தும் விளைவை அவர்கள் எவ்வளவு நேரம் தாங்க இயலும் என்பதை ஆய்கிறது. அடுத்த முதன்மையான ஆய்வு, மாந்தர்பல் காற்றூடே நிலவும் ஒவ்வாமை ஈனிகள், பொலன் துகள்கள், காற்றுத்தூசுப் படலம் ஆகியவற்றின் தாக்கம் பற்றிய ஆய்வாகும்: வானிலை நிலைமைகள் இந்த ஒவ்வாமை ஈனிகள் வெளியிடப்படுவதையும் படிதலையும் ஊக்குவிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சிலவேளைகளில் மக்களது உடல்நலத்தைக் கடுமையாக இவை தாக்கலாம்.

மேலும் காண்க[தொகு]

வானிலையின் உடல்நல விளைவுகள்:

மேற்கோள்கள்[தொகு]

  • R. E. Munn (1970) Biometeorological Methods, Academic Press, New York, 336 pp., Library of Congress Catalog Card Number 71-97488.
  • உலோ.செந்தமிழ்க்கோதை, சுற்றுச்சூழல் அறிவியல், தென்னக ஆய்வு மையம்,சென்னை-2012

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_வானிலையியல்&oldid=2388742" இலிருந்து மீள்விக்கப்பட்டது