உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரியல் ஆய்வுசுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியல் சுருக்கம் (Biological Abstracts) என்பது கிளாரிவேட் அனலிட்டிக்சு தயாரித்த தரவுத்தளமாகும். இது உயிரியல், உயிர் வேதியியல், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், மருத்துவமுன் மற்றும் பரிசோதனை மருத்துவம், மருந்தியல், விலங்கியல், வேளாண்மை,கால்நடை மருத்துவம் ஆகிய துறைகளில் வெளியாகும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ் கட்டுரைகளின் சுருக்கங்களை உள்ளடக்கிய தரவுத்தளமாகும். இது 1926 முதல் வெளிவருகிறது.[1][2]

எபிஸ்கோ, ஓவிட் [3] மற்றும் அறிவியல் வலை உள்ளிட்ட பல சேவைகளின் மூலம் இதை அணுக முடியும்.[1]

வரலாறு[தொகு]

இந்த சேவை 1926ஆம் ஆண்டில் அச்சு வெளியீடாகத் தொடங்கியது. இது பாக்டீரியாலஜி சுருக்கம் (1917-1925), மற்றும் தாவரவியல் சுருக்கம் (1919-1926) ஆகிய ஆய்வுச்சுருக்க இணைப்பால் உருவாக்கப்பட்டது. இவை இரண்டும் பால்டிமோர் நகரில் வில்லியம்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்டன. இது அமெரிக்காவின் விஞ்ஞானிகளால் வழக்கமாக எழுதப்பட்ட சுருக்கங்களுடன், மென் அட்டை வெளியீடாக வந்தது. அந்தக் காலத்தில் ஏராளமான கட்டுரைகள் பிற மொழிகளிலிருந்தது குறிப்பிடத்தக்கது. துவக்கப்பட்ட நேரத்தில், இது சூரிச்சில் உள்ள கான்சிலியம் பிப்லோகிராஃபிக்கத்தின் வகைப்படுத்தப்பட்ட குறியீட்டுச் சேவையுடன் போட்டியிட்டது. [4] [5] [6]

முதல் இணையப் பதிப்பு காந்த நாடாவில் வெளியிடப்பட்டது. இது சுருக்கங்களின் உரை இல்லாமல் நூலியல் தகவல்களை மட்டுமே கொண்டிருந்தது. மேலும் இது விரைவான சேவையாகக் கருதப்பட்டது. 

மேலும் காண்க[தொகு]

 • கல்வி தரவுத்தளங்கள் மற்றும் தேடுபொறிகளின் பட்டியல்
 • கல்வி இதழ்களின் பட்டியல்கள்
 • திறந்த அணுகல் பத்திரிகைகளின் பட்டியல்
 • அறிவியல் பத்திரிகைகளின் பட்டியல்
 • கூகிள் ஸ்காலர்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Biological Abstracts on the Web of Science". Web of Science. Archived from the original on 2020-09-22. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.
 2. "Biological Abstracts". Ovid Technologies. Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.
 3. "Wolters Kluwer | Ovid - Home". Archived from the original on 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
 4. Curtis, W. C. (May 15, 1931). "The Washington Conference of March 7, 1931". Science (journal) (American Association for the Advancement of Science) 73 (189): 509–512. doi:10.1126/science.73.1898.509. பப்மெட்:17778395. Bibcode: 1931Sci....73..509C. 
 5. Schramm, J. R. (May 15, 1931). "Biological Abstracts". Science (journal) (American Association for the Advancement of Science) 73 (1898): 512–516. doi:10.1126/science.73.1898.512. பப்மெட்:17778396. Bibcode: 1931Sci....73..512S. https://archive.org/details/sim_science_1931-05-15_73_1898/page/512. 
 6. Mcclung, C. E. (May 15, 1931). "The Union and Biological Abstracts". Science (journal) (American Association for the Advancement of Science) 73 (1898): 517–518. doi:10.1126/science.73.1898.517. பப்மெட்:17778397. Bibcode: 1931Sci....73..517M. https://archive.org/details/sim_science_1931-05-15_73_1898/page/517. 

பிற குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]