உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரிக்குறிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரிக்குறிகாட்டி (Bio-marker) அல்லது உயிரியல் குறிப்பான் (Biological marker) என்பது உயிரியல் மருத்துவச் சூழல்களில், சில நோய்நிலைகள் அல்லது இயல்புநிலை, இயல்பிருந்து மாறுபட்ட நிலைகளின் தன்மையை அளவிடக்கூடிய குறிகாட்டியாகும். உயிரிக்குறிகாட்டிகள் பெரும்பாலும் இரத்தம், சிறுநீர் அல்லது மென்மையான திசுக்களைப் பயன்படுத்தி அளவிடப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. சாதாரண உயிரியல் செயல்முறைகள், நோய்க்கிருமி செயல்முறைகள் அல்லது ஒரு சிகிச்சைமுறையில் மருந்துகளால் ஏற்படும் விளைவுகளை ஆராய்தல் உள்ளிட்ட பல நோக்கங்களுக்காக உயிரிக்குறிகாட்டிகள் அறிவியல் துறைகளில் பயன்படுகின்றன.[1][2]

வரலாறு

[தொகு]

"உயிரியல் குறிப்பான்" என்ற சொல் 1950களில் அறிமுகப்படுத்தப்பட்டது.[3][4]

பயோமார்க்கர் என்ற ஆங்கில வார்த்தையின் பரவலான பயன்பாடு 1980ஆம் ஆண்டிலேயே தொடங்குகிறது.[5] 1980களின் இறுதியில் சுற்றுச்சூழல் ஆய்வுகள் நீர், வண்டல்கள், நீர்வாழ் உயிரினங்களில் மிதமிஞ்சிய அளவில் காணப்பட்ட ஆபத்தான அல்லது நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களை குறித்ததாகவே இருந்தது.[6] இந்த வேதிப்பொருட்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் முறைகள் நிறப்பிரிகைமானி, அலைமாலை ஒளிஅளவியல், மின்வேதியியல், கதிர்வீச்சு வேதியியல் ஆகும்.[6] இந்த முறைகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் வேதிப்பொருட்களின் பங்கினைத் தெளிவுபடுத்துவதில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டப்போதிலும், எந்த ஒரு ஒரு குறிப்பிட்ட மாசுபடுத்தியின் தாக்கம் குறித்த முழுமையான தரவை வழங்கவில்லை. எனவே சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த செயல்பாடுகளை அளவிடவும் எச்சரிக்கை செய்யவும் உயிரிக்குறிகாட்டிகளைப் பயன்படுத்தலாம் என்று முன்மொழியப்பட்டது. இப்போது ஆய்வுகளின் வளர்ச்சி காரணமாக, மனித மருத்துவத் துறைகளிலும் நோய்களைக் கண்டறிவதிலும், அவற்றின் தீவிரத்தை அளவிடவும் உயிரிக்குறிகாட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.[6]

வரையறை

[தொகு]

உயிரிக்குறிகாட்டி என்பது இயல்பான அல்லது இயல்பிற்கு மாறுபட்ட நிலைகளையோ, அல்லது நோயைநிலையையோ அளவிடப் பயன்படும் உயிரியல் மூலக்கூறு அல்லது பண்பாகும். இது சூழலியல், மருத்துவம் மற்றும் பல அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A Comprehensive Review of Biomarker Use in the Gynecologic Tract Including Differential Diagnoses and Diagnostic Pitfalls". Advances in Anatomic Pathology 27 (3): 164–192. May 2020. doi:10.1097/PAP.0000000000000238. பப்மெட்:31149908. 
  2. Biomarkers Definitions Working Group (March 2001). "Biomarkers and surrogate endpoints: preferred definitions and conceptual framework". Clinical Pharmacology and Therapeutics 69 (3): 89–95. doi:10.1067/mcp.2001.113989. பப்மெட்:11240971.  as cited in "Biomarkers for cognitive impairment in Lewy body disorders: Status and relevance for clinical trials". Movement Disorders 33 (4): 528–536. April 2018. doi:10.1002/mds.27355. பப்மெட்:29624752. 
  3. "Effect of homologous bone marrow injections in x-irradiated rabbits". British Journal of Experimental Pathology 38 (4): 401–412. August 1957. பப்மெட்:13460185. 
  4. "Sex chromatin as a biologic cell marker in the study of the fate of corneal transplants". American Journal of Ophthalmology 49 (3): 513–515. March 1960. doi:10.1016/0002-9394(60)91653-6. பப்மெட்:13797463. https://archive.org/details/sim_american-journal-of-ophthalmology_1960-03_49_3/page/n154. 
  5. "Biomarkers and surrogate endpoints". British Journal of Clinical Pharmacology 59 (5): 491–494. May 2005. doi:10.1111/j.1365-2125.2005.02435.x. பப்மெட்:15842546. 
  6. 6.0 6.1 6.2 Amiard-Triquet C, Amiard JC, Rainbow PS, eds. (April 19, 2016). Ecological Biomarkers. CRC Press. doi:10.1201/b13036. ISBN 978-0-429-11149-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரிக்குறிகாட்டி&oldid=4214632" இலிருந்து மீள்விக்கப்பட்டது