உயிரணு வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரணுக்களின் செயல்களை குறிப்பாக உயிரணுவில் உள்ள மிகப்பெரிய மூலக்கூறுகளின் செயல்களைப் பற்றியும், உயிரணு கட்டமைப்பு பற்றியும் அறிய உதவும் உயிர் வேதியியல் துறையின் ஓர் பிரிவே உயிரணு வேதியியல் ஆகும். இது உயிரணுவில் உள்ள உயிர் வேதிப் பொருள்களின் செயல்பாடுகளை விளக்கவும் பயன்படுகிறது. உயிரணு மற்றும் உயிரணு நுண்ணுறுப்புகளில் அடங்கியுள்ள உயிர் வேதிப் பொருள்களை ஆய்வு செய்ய நொதி பரவல், நுண் எரித்தல், நுண் நிறப்பிரிகை, X கதிர் நுண்முறை மற்றும் நிறப்பிரிகை முறைகள் பயன்படுகின்றன.[1]

உசாத்துணை[தொகு]

  1. Nagata, T (2001). "Special cytochemistry in cell biology". International review of cytology 211: 33-151. பப்மெட்:11597006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரணு_வேதியியல்&oldid=2527076" இலிருந்து மீள்விக்கப்பட்டது