உயர்ந்த குங்கிலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயர்ந்த குங்கிலியம்[தொகு]

போஸ்வெல்லியா கார்டிரி

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : போஸ்வெல்லியா கார்டிரி Boswellia carteri

குடும்பம் : பார்சிரேசியீ (Burseraceae)

இதரப் பெயர்கள் : சாலா, பரங்கிச் சாம்பிரானி.

மரத்தின் அமைவு[தொகு]

இம்மரம் 10 முதல் 20 அடி உயரம் வளரக் கூடியது. இதன் மரப்பகுதி சிவப்பாக இருக்கும். இம்மரத்தில் வெள்ளை நிற பூக்கள் மலர்கிறது. இம்மரத்தின் பட்டையிலிருந்து வாசனையுடன் கூடிய பிசின் வருகிறது. இது மினுமினுப்பாக இருக்கும். இதைச் சுடவைத்து குங்கிலியம் எடுக்கிறார்கள். உலகில் உள்ள எகிப்திய, கிரேக்க, ரோமானிய, யூத, சீன, பாரசீக, கிறிஸ்துவ, இந்து ஆகிய பல சமயங்களிலும் குங்கிலியத்தை தமது தெய்வ வழிபாட்டிற்கு உபயோக்கிறார்கள். இதை சாம்பிராணி போல் தூபம் போடுகிறார்கள். நறுமணத்துடன் புகையும் வெளிவருகிறது. இதன் புகை சுவாச நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உலகின் மிகச் சிறந்த தூபம் போடும் குங்கிலியம் இந்த மரத்திலிருந்தே கிடைக்கிறது.

காணப்படும் பகுதிகள்=[தொகு]

இம்மரம் தென் ஆப்பிரிக்கா, சோமாலியா மற்றும் இந்தியாவில் வளர்கிறது.

போஸ்வெல்லியா கார்டிரி வாசனை திரவியம்

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்ந்த_குங்கிலியம்&oldid=2749229" இருந்து மீள்விக்கப்பட்டது