உயர்நில மாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயர்நில மாடுகள்
இங்கிலாந்தின் டாட்மூரில் உள்ள ஒரு உயர்நிலப் பசு
இங்கிலாந்தின் டாட்மூரில் உள்ள ஒரு உயர்நிலப் பசு
நிலைவீட்டு விலங்கு
தோன்றிய நாடுஇசுக்காட்லாந்து
பரவல்உலகம் முழுவதும் (பெருமளவில் இசுக்காட்லாந்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும்)
பயன்இறைச்சி
பண்புகள்
எடைஆண்: 800 கிகி
 பெண்: 500 கிகி
உயரம்ஆண்: 106-120 சமீ (3.5-4அடி)
 பெண்: 90-106 சமீ (3-3.5அடி)
மாடுகள்
Bos primigenius
கறுப்பு உரோமப் படையுடன் கூடிய உயர்நிலப் பசுக்கள்
உயர்நில மாடுகளில் காணும் உரோமங்கள் குளிரான மாரிகாலத்தில் பாதுகாப்புக் கொடுக்கின்றன.

உயர்நில மாடுகள் (Highland cattle) என்பன, இசுக்காட்டிய (Scottish) மாட்டினம் ஆகும். நீண்ட கொம்புகளைக் கொண்ட இவை, கறுப்பு, கலப்பு நிறம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை, வெள்ளி நிறம் ஆகிய நிறங்களைக் கொண்ட அலை வடிவ நீண்ட உரோமப் படையைக் கொண்டவை. பெரும்பாலும் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன.[1] இசுக்கட்லாந்தின் உயர்நிலப் பகுதியிலும், ஏர்பிரைட்சு தீவுகளிலும் தோற்றம் பெற்ற இவ்விலங்குகள், முதன் முதலாக கிபி 6 ஆம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் மந்தை நூல், இரண்டு வகையான உயர்நில மாடுகள் பற்றி விபரிக்கின்றது. ஆனால், இவற்றிடையே ஏற்பட்ட இனப்பெருக்கத் தொடர்பு காரணமாகத் தற்போது ஒரு இனம் மட்டுமே எஞ்சிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அப்போதிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இசுக்காட்டிய உயர்நில நிலைமைகளைத் தாங்கும் வகையில் வளர்வதால், இவை பல்வேறு நிலைமைகளைத் தாங்கும் ஆற்றல் உள்ளவையாகக் காணப்படுகின்றன. இவற்றின் நீளமான உரோமங்கள் கடுமையான குளிரைத் தாங்கும் வல்லமையை இவற்றுக்குக் கொடுக்கின்றன. இவ்வகைப் பசுக்களின் பால் மிக அதிகமான வெண்ணெய்க் கொழுப்பைக் கொண்டது. இறைச்சி மிக உயர்ந்த தரத்தைக் கொண்டதாகக் கருதப்படுவதுடன், பிற இனங்களில் இறைச்சியை விடக் குறைவான "கொலஸ்ட்ரோல்" ஐக் கொண்டிருப்பதால், இது பரவலாக விரும்பப்பட்டு வருகிறது.

இன இயல்புகள்[தொகு]

வழமைக்கு மாறாக இவற்றுக்கு இரட்டை உரோமப் படைகள் காணப்படுகின்றன. பிற மாட்டினங்களில் காணப்படுவதை விட மிக நீளமான உரோமங்களைக் கொண்ட வெளிப்படை, கீழ்ப்படையில் உள்ள மென்மையான நுண்ணிய உரோமங்களை மூடியுள்ளது.[2] This makes them well suited to conditions in the Highlands, which have a high annual rainfall and sometimes very strong winds.[3] இது இவ்விலங்குகளை, அதிக ஆண்டுக்கான மழை வீழ்ச்சியுடனும், பலமான காற்றுடனும் கூடிய உயர்நில நிலைமைகளுக்கு ஏற்றதாக ஆக்கியுள்ளது. இவ்வகையின் மேய்ச்சல் திறைமை இவற்றைச் சரிவு கூடிய மலைப்பகுதிகளில் வாழ்வதற்குத் தகவமைத்துள்ளது. இவை பல பிற மாட்டினங்கள் தவிர்த்துவிடும் தாவர வகைகளை உண்ணக்கூடியவை. கொம்புகளால் பனிப்படலத்தைக் கொம்புகளால் கிண்டிப் புதைந்திருக்கும் தாவரங்களை எடுத்து உண்கின்றன.[4]

எருதுகள் 800 கிலோகிராம் (1,800 இறாத்தல்) வரையும், பசுக்கள் 500 கிலோகிராம் (1,100 இறாத்தல்) வரையும் எடை கொண்டவை. இவ்வினப் பசுக்கள் 90-106 சதமமீட்டர்கள் (3-3.5 அடிகள்) வரை வளர்கின்றன.[5] ஆண்டு முழுதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் இவ்விலங்குகளின் கருக்காலம் 277-290 நாட்கள் ஆகும். பொதுவாகவே ஒரு கன்றை மட்டுமே பசுக்கள் ஈனுகின்றன எனினும், இரட்டைக் கன்றுகளையும் ஈனுவது உண்டு. 18 மாதங்களில் இவை பால் முதிர்ச்சியை அடைகின்றன. உயர்நில மாட்டினம், பெரும்பாலான பிற மாட்டினங்களை விடக் கூடிய, 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட, வாழ்க்கைக் காலத்தைக் கொண்டவை.[6]

அடக்கமான தன்மை கொண்டவையாகவும், பால் கூடிய வெண்ணெய்க் கொழுப்புடன் கூடியதாகவும் இருப்பதால், இவை வீட்டு வளர்ப்புப் பசுக்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக நல்ல பண்புகளைக் கொண்ட பசுக்கள் எனினும், கன்றுகளைப் பாதுகாப்பதில் கவனம் கொண்டவை.[7]

குளிர் தாங்குதன்மை[தொகு]

எல்லா ஐரோப்பிய மாட்டினங்களும் குறைந்த வெப்பநிலையைத் தாங்கக்கூடியவையாகக் காணப்பட்டாலும், உயர்நில மாட்டினம், ஏறத்தாழ ஆர்க்டிக் பகுதிகளில் வாழும் கரிபு, துருவ மான்கள் போன்றவற்றின் அளவுக்குக் குளிரைத் தாங்கக்கூடியவை.[8] எதிர்மறையாக, அவற்றின் தடித்த உரோமப் படை காரணமாக, தென்னாசியாவுக்கு உரியதும், சூடான காலநிலைக்குத் தகவமைவு கொண்டதுமான செபு மாட்டினத்தை விடக் குறைவாகவே வெப்பத்தைத் தாங்கக்கூடியது.[9] இசுக்காட்லாந்தைவிடக் கூடுதலான குளிர்க் காலநிலை கொண்ட நார்வே, கனடா போன்ற நாடுகளிலும் உயர்நில மாட்டினம் வெற்றிகரமாக வளர்க்கப்படுகிறது.[10]

சமூக நடத்தை[தொகு]

ஒரு அரைகுறைக் காட்டினத்தைச் சேர்ந்த உயர்நில மாட்டினக் குழு ஒன்று 4 ஆண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதிலிருந்து, இம்மாட்டினம் ஒரு சமூக அமைப்பையும், ஆதிக்கப் படிநிலையையும் கொண்டிருப்பது அறியப்பட்டது. இது குழு உறுப்பினரிடையே சண்டைக் குணத்தைக் குறைத்தது. சமூகநிலை வயது, பாலினம் ஆகியவற்றில் தங்கியிருந்தது. மூத்த மாடுகள், கன்றுகள் மீதும், இளம் மாடுகள் மீதும் ஆதிக்கம் கொண்டிருந்தன. ஆண் விலங்குகள் பெண் விலங்குகள் மீது ஆதிக்கம் செலுத்தின. தாய்ப்பசுவின் தலையீடு இல்லாவிட்டாலும், உயர் சமூகத் தகுதி கொண்ட பசுக்களின் கன்றுகளுக்கும் உயர்வான சமூக நிலை காணப்பட்டது. விளையாட்டுக்காகச் சண்டையிடல், நக்குதல், ஒன்றன்மீது ஒன்று ஏறுதல் என்பன நட்புக்குரிய செயற்பாடுகளாகக் காணப்பட்டன.[11][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Highland Cattle Society breed standard". Highlandcattlesociety.com. Archived from the original on 10 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
 2. "Highland Cattle in Alberta". The Alberta Beef Magazine. April 2006. 
 3. "Highland cattle — Britannic Rare Breeds". Archived from the original on 5 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. "Highland cattle and their landscape". A to Z Animals. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
 5. "Highland Cattle Characteristics – TC Permaculture". TCPermaculture. பார்க்கப்பட்ட நாள் 24 June 2015.
 6. "Highland Cattle – Sea World". seaworld.org. Archived from the original on 8 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "Breeds – Highland". The Dairy Site. Archived from the original on 1 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. Campbell, John R; Douglas Kenealy, M.; Campbell, Karen L. (2009). Animal Sciences: The Biology, Care, and Production of Domestic Animals (4th ). Waveland Press. பக். 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781478608219. 
 9. Serif, S. M.; Johnson, H. D.; Lippincott, A. C. (March 1979). "The effects of heat exposure (31°C) on zebu and Scottish Highland cattle". International Journal of Biometeorology 23 (1): 9–14. doi:10.1007/BF01553372. பப்மெட்:500248. Bibcode: 1979IJBm...23....9S. 
 10. Porter, Valerie; Alderson, Lawrence; Hall, Stephen J. G.; Sponenberg, Phillip (2016). Mason's World Encyclopedia of Livestock Breeds and Breeding. CAB International. பக். 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781845934668. 
 11. Reinhardt, Catherine (28 February 1985). "Social behaviour and reproductive performance in semi-wild Scottish Highland cattle". Applied Animal Behaviour Science 15 (2): 125–136. doi:10.1016/0168-1591(86)90058-4. http://www.appliedanimalbehaviour.com/article/0168-1591(86)90058-4/abstract. பார்த்த நாள்: 26 August 2015. 
 12. Clutton-Brock, T. H.; Greenwood, P. J.; Powell, R. P. (1976). "Ranks and Relationships in Highland Ponies and Highland Cows". Zeitschrift für Tierpsychologie 41 (2): 206–216. doi:10.1111/j.1439-0310.1976.tb00477.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1439-0310.1976.tb00477.x/abstract. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்நில_மாடுகள்&oldid=3615853" இலிருந்து மீள்விக்கப்பட்டது