உயர்கல்வித் துறை (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


உயர்கல்வித் துறை (தமிழ்நாடு)
TamilNadu Logo.svg
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு 1811
ஆட்சி எல்லை தமிழ்நாடு
தலைமையகம் சென்னை
பொறுப்பான அமைச்சர் கே. பி. அன்பழகன், உயர் கல்வித்துறை அமைச்சர்
அமைப்பு தலைமைs எ.கார்த்திக், இ.ஆ.ப., அரசுச் செயலர்
ஆர்.லில்லி,இ.ஆ.ப., இணைச் செயலர்
மூல நிறுவனம் தமிழ்நாடு அரசு
இணையத்தளம்
Higher Education Department

உயர்கல்வித் துறை (தமிழ்நாடு)

தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறை ஆகும். இத்துறை உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

 • 1957 அக்டோபர் 14ம் நாள் தொழில்நுட்பக் கல்வித்துறை தொடங்கப்பட்டுள்ளது.
 • கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிரு்நது உயர்கல்வித்துறை தனியே 1997-ல் உருவாக்கப்பட்டுள்ளது.[1]

குறிக்கோள்கள்[தொகு]

உயர்கல்வித் துறையானது சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் பலவேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.

 • உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்குதல்
 • ஏழை, எளிய குடும்பத்திலுள்ள இளைஞர்களுக்கு உயர் கல்வியை வழங்குதல்
 • உயர்கல்வியின் சமவாய்ப்பினை வழங்குதல்
 • 2020-க்குள் உயர்கல்வி அடைவு நிலையை 25 விழுக்காட்டிற்கு உயர்த்துதல்
 • கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
 • பாடத்திட்டத்தை வளப்படுத்தி மேம்பாடு அடைய செய்தல்
 • உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்
 • கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துதல்
 • மாணவர்களிடையே அறிவியல் மனப்பாண்மையை வளர்த்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை

ஊக்கப்படுத்துதல்.[2]

துணை - துறைகள்[தொகு]

 • கல்லூரிக் கல்வி இயக்குநரகம் - கல்லூரிக் கல்வி இயக்குநரின் தலைமையில் செயல்படுகிறது.
 • தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம்
 • ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை [3]

செயல்கள்/அமைப்புகள்[தொகு]

 • தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம்
 • தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
 • தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கழகம்
 • தமிழ்நாடு மாநில உருது அகாடமி
 • தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்
 • அறிவியல் நகரம், சென்னை.[4]

கல்லூரிக்கல்வி இயக்குநர்கள்[தொகு]

 • வி. டி. டைடஸ், 1972 [5]

உயர் கல்வித்துறை அமைச்சர்கள்[தொகு]

தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் - கே.பி.அன்பழகன்

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் (2011-2016) - பி.பழனியப்பன்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]