உள்ளடக்கத்துக்குச் செல்

உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது
நாடுசீன மக்கள் குடியரசு
வழங்குபவர்சீன மக்கள் குடியரசின் தலைவர்
வெகுமதி(கள்)8 மில்லியன்
முதலில் வழங்கப்பட்டது2000; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (2000)
பரிசு பெற்றவர்களின் எண்ணிக்கை29 as of 2017

உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது என்பது சீனாவில் பணியாற்றும் அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய அறிவியல் விருதாகும். இந்த விருதை சீன மக்கள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இது **சீனாவின் நோபல் பரிசு** என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]

இந்த விருது 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இது சீன மக்கள் குடியரசின் மாநில மன்றத்தால் நிறுவப்பட்ட ஐந்து மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பரிசுகளில் ஒன்றாகும்.

இந்த விருதுடன் 8 மில்லியன் ரென்மின்பி அளவிலான பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இதில் பத்து விழுக்காடு தொகை அறிவியலாளருக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகை அவர்களின் அறிவியல் ஆய்வுகளை ஆதரிப்பதற்காக வழங்கப்படுகிறது.[3]

விருது பெற்றவர்கள்

[தொகு]

2000

* யுவான் லோங்பிங் – வேளாண்மை அறிஞர்

* வு வென்ஜுன் – கணிதவியலாளர்

2001

* வாங் சுவான் – கணினி அறிவியலாளர்

* ஹுவாங் குன் – இயற்பியலாளர்

2002

* ஜின் யிலியான் – கணினி அறிவியலாளர்[4]

2003

* லியூ தோங்ஷெங் – புவியியல் அறிஞர்

* வாங் யோங்ஜி – விண்வெளி அறிவியலாளர்

2004

* வழங்கப்படவில்லை

2005

* யே டூஜெங் – வானிலை அறிவியலாளர்

* வு மெங்சாவ் – கல்லீரல் மற்றும் பித்தநாள அறுவை சிகிச்சை அறிஞர்

2006

* லி ழென்ஷெங் – தாவர மரபியல் அறிஞர்

2007

* மின் என்ஜே – பெட்ரோவேதியியல் பொறியாளர்

* வு ழெங்யி – உயிரியல் அறிஞர்

2008

* வாங் ஜோங்செங் – நரம்பியல் மருத்துவர்

* சூ குவாங்சியான் – வேதியியலாளர்

2009

* கு சாவோஹாவ் – கணிதவியலாளர்

* சுன் ஜியாதோங் – செயற்கைக்கோள் பொறியாளர்

2010

* ஷி சாங்சு – பொருள் அறிவியல் அறிஞர்

* வாங் ழென்யி – நோயியல் உடலியல் அறிஞர்

2011

* ஷியே ஜியாலின் – இயற்பியலாளர்

* வு லியாங்யோங் – கட்டிடக் கலைஞர்

2012

* ழெங் ழெமின் – இயற்பியலாளர்

* வாங் சியாவோமோ – ரேடார் பொறியாளர்

2013

* ழாங் சுன்ஹாவ் – இயற்பியல் வேதியியலாளர்

* செங் கைய்ஜியா – அணு இயற்பியலாளர்

2014

* யூ மின் – அணு இயற்பியலாளர்

2015

* வழங்கப்படவில்லை

2016

* ழாவோ ழோங்சியான் – இயற்பியலாளர்

* டு யோயோ – மருந்து வேதியியலாளர்

2017

* வாங் சேஷான் – வெடிபொருள் நிபுணர்[5]

* ஹோ யுன்தே – வைரஸ் அறிவியலாளர்

2018

* லியூ யோங்தான் – ரேடார் தொழில்நுட்பம் மற்றும் சிக்னல் செயலாக்க நிபுணர்

* சியான் கிஹு – இராணுவ பாதுகாப்பு பொறியியல் நிபுணர்

2019

* ஹுவாங் சுஹுவா – அணு நீர்மூழ்கிக் கப்பல் பொறியாளர்[6]

* செங் சிங்க்சுன் – வானிலை அறிவியலாளர்

2020

* கு சோங்ஃபென் – காற்றியக்கவியல் அறிஞர்

* வாங் தாசோங் – அணு உலை பொறியாளர்

2023[7]

* லி தெரென் – ஒளிப்பட அளவியல் மற்றும் தொலை உணர்தல் நிபுணர்

* ச்யூ கிகுன் – செறிந்த பொருள் இயற்பியலாளர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "国家最高科学技术奖". Chinese Academy of Sciences. Retrieved 2018-02-18.
  2. "What are the two academicians who won the highest science and technology award in the country?". news.cbt9.com. Archived from the original on 2018-02-19. Retrieved 2018-02-18.
  3. Cong Cao (June 2004). "Chinese Science and the 'Nobel Prize Complex'". Minerva: A Review of Science, Learning and Policy 42 (2): 158. doi:10.1023/B:MINE.0000030020.28625.7e. 
  4. Senior Scientists Win China's Top Award
  5. "What China's top science prizes reveal about the country's priorities" (in en). South China Morning Post. https://www.scmp.com/news/china/society/article/2127573/guns-germs-and-rice-how-winners-chinas-top-science-prizes-point. 
  6. "China honors distinguished scientists to drive innovation". Xinhua. 2020-01-11. Archived from the original on January 11, 2020. Retrieved 2020-01-13.
  7. "国家最高科学技术奖揭晓". 2024-06-24.