உயரமான மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயரமான மரம்[தொகு]

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : சிடோட்சுகா மென்சிசீ Pseudotsuga menziesil

குடும்பம் : பைனேசியீ

இதரப் பெயர் : டோக்லாஸ் பிர் (Douglas Fir)

மரத்தின் அமைவு[தொகு]

மிகவும் உயரமாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. இது 330 அடி (100 மீ) உயரம் வளரக்கூடியது. மிகவும் பசுமையாக இருக்கும.; இம்மரம் உருளையாக இருக்கும். மரத்தின் பட்டை முதலில் சாம்பல் நிறத்திலும், பிறகு சிகப்பு நிறமாக மாறும். இம்மரம் மிகவும் வேகமாக வளரும் மரம். மிகவும் கடினமானதும், உறுதியானதும் ஆகும். கூம்புகள் தொங்கிக் கொண்டு இருக்கும். செதிலுக்கு இடையில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் உள்ளன. ஆண் பூக்கள் ஊதா நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திலும், பெண் பூ ஊதா சிவப்பிலிருந்து பச்சையாகவும் இருக்கும்.

 இவற்றை காடுகளின் ராஜா எனவும் அழைப்பார்கள்.  417 அடி உயரம் கொண்ட ஒரு மரம் 1895 ஆண்டு வெட்டியுள்ளார்கள்.  இம்மரங்களை அழகுக்காகவும் வளர்க்கிறார்கள்.  மேலும் இதை இரயில் தண்டவாளங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
சிடோட்சுகா மென்சிசீ

காணப்படும் பகுதிகள்[தொகு]

இம்மரம் வட அமெரிக்காவில் கனடா முதல் மெக்சிகோ வரை காணப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயரமான_மரம்&oldid=2749213" இருந்து மீள்விக்கப்பட்டது