உம்சியாங் இரண்டடுக்கு வேர் பாலம்

உம்சியாங் இரண்டடுக்கு வேர் பாலம் (Umshiang Double-Decker Root Bridge) என்பது இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உயிருள்ள வேர் பாலமாகும். சிரபுஞ்சியிலிருந்து 45 கிலோமீட்டர் (28 மைல்) பயணம் செய்தோ அல்லது 6500 படிகளை மலையேற்றம் மூலம் கடந்தும் இப்பாலத்தினை அடையலாம். இப்பாலத்தின் அருகில் ஓர் அருவி உள்ளது .[1]
சுற்றுலா காரணமாக, வேர் பாலத்தின் ஆரோக்கியம் சீரழிந்துள்ளது.[2] மேகாலயா தனது 70வது குடியரசு தின விழாவில் வேர் பாலத்தை வழங்கியது. கான்சி மற்றும் ஜெய்டியா மக்கள், இரண்டாம் நிலை மரங்களின் வேர்களைப் பயன்படுத்திப் பாலங்களைக் கட்டும் கைவினையை உலகிற்குத் தெரிவிக்க சிரபுஞ்சியில் உள்ள நோங்ரியட்டில் பாலத்தின் மாதிரி போன்று இப்பாலம் தயாரிக்கப்பட்டுள்ளது.[3] இந்த உயிருள்ள பாலங்கள் ஒரு சிறப்பு வகை இரப்பர் மரத்திலிருந்து வளர்க்கப்படுகின்றன. வேர்கள் வளரும்போது, பாலத்தின் வலிமை அதிகரிக்கிறது. வேர் பாலங்கள் மேகாலயாவின் தாஜ்மகால் என்று மதிக்கப்படுகின்றன. இவை வளரவும் செயல்படவும் சுமார் 25 ஆண்டுகள் ஆகும். ஆனால் 50 பேரின் எடையைத் தாங்கி 500 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட முடியும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Exploring Umshiang, Home To The Double Decker Living Roots Bridges". outlookindia.com. 28 September 2018. Retrieved 28 May 2021.
- ↑ "Explained: In Meghalaya living root bridges, study sees global potential. Can it work?". The Indian Express. 24 November 2019. Retrieved 28 May 2021.
- ↑ "Meghalaya to showcase root-bridge on R-day". 23 January 2020. Retrieved 28 May 2021.
- ↑ "Trail Of The Unexpected: The root masters of India". The Independent. 22 October 2011. Retrieved 28 May 2021.