உமியம் ஏரி
உமியம் ஏரி Umiam Lake | |
---|---|
அமைவிடம் | மேகாலயா |
ஆள்கூறுகள் | 25°39′12″N 91°53′03″E / 25.6532°N 91.8843°E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநிலப் பரப்பு | 220 km2 (85 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | சில்லாங் |
உமியம் ஏரி (Umiam Lake) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் சில்லாங்கிற்கு வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் ஆகும். உள்ளூரில் இதை தாம் சைட்டு என்று அழைக்கிறார்கள். 1960 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உமியம் நதியை அணைத்து இந்நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்ட்து ஏரி மற்றும் அணையின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதி 220 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும்.[1]
வரலாறு
[தொகு]ஏரியை அடைத்துக் கொண்டுள்ள உமியம் அணை 1960 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அசாம் மாநில மின்சார வாரியத்தால் கட்டப்பட்டது. அணையின் அசல் நோக்கம் நீர்மின்சார உற்பத்திக்கு தண்ணீரை சேமிப்பதாக இருந்தது. ஏரியின் வடக்கே உள்ள உமியம் நிலை I மின்னுற்பத்தி நிலையத்தில் நான்கு 9 மெகாவாட் விசையாழி – மின்னாக்கிகள் உள்ளன, அவை 1965 ஆம் ஆண்டில் வணிக நடவடிக்கைகளுக்கு உற்பத்தியைத் தொடங்கின. உமியம் நிலை I மின்னுற்பத்தி நிலையம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைக்கப்பட்ட முதலாவது நீர்த்தேக்க - நீர் மின் திட்டம் ஆகும். 1957 ஆம் ஆண்டு முதல் செயல்படும் 8.4 மெகாவாட் திறன் கொண்ட உம்த்ரு நீர்மின் திட்டம் நீர் சேமிப்பு இல்லாமல் ஆற்றின் ஓட்டத்தில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகும். உமியம் திட்டத்தில் மேலும் மூன்று கட்டங்கள் பின்னர் கீழ்நிலையில் கட்டப்பட்டன[2].
சுற்றுலா
[தொகு]இந்த ஏரி மேகாலயா மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. நீர் விளையாட்டு மற்றும் சாகச வசதிகள் கொண்ட பிரபலமான இடமாகவும் இது கருதப்படுகிறது. படகு சவாரி, நீர் சைக்கிள் ஓட்டுதல், நீரில் விரைதல் மற்றும் படகு சவாரி செய்வதற்காக சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.
சுற்றுச்சூழல் விளைவு
[தொகு]மின் உற்பத்திக்கு தண்ணீரை சேமிப்பதைத் தவிர, இந்த ஏரி மைக்ரோ, மீசோ மற்றும் மேக்ரோ மட்டங்களில் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குகிறது. கீழ்நிலை நீர்ப்பாசனம், மீன்வளம் மற்றும் குடிநீர் ஆகியவை உள்ளூர் மானுடவியல் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
வண்டல் மற்றும் நச்சாதல்
[தொகு]சில்லாங்கின் மக்கள் தொகை பெருகி வரும் காரணத்தால் ஏரியின் தூய்மை மிகவும் கெட்டு மாசுபடத் தொடங்கியது. மேலும் வண்டல் உருவாக்குதலில் கடுமையான பிரச்சினை ஏற்படுகிறது. ஆண்டுதோறும் 40000 கன அடி வண்டல் உமியம் ஏரியில் நுழைகிறது. ஆக்ரமிப்புகள், காடழிப்பு, இயற்கை வடிகால் அமைப்புகளின் அடைப்பு மற்றும் விஞ்ஞானத்தனமற்ற சுரங்கங்கள் போன்ற மற்றும் பல இதற்கான காரணங்களாகும். நீர்பிடிப்பு பகுதியில் சேரும் வண்டல் நீர் கொள்ளளவை குறைக்கிறது . '
படக்காட்சியகம்
[தொகு]-
உமியம் ஏரியின் சாலையோர காட்சி
-
உமியம் ஏரியின் தோற்றம்
-
உமியம் ஏரியில் சூரியன் மறைவு
-
உமியம் ஏரியின் தோற்றம்
-
உமியம் ஏரியின் பெரிதாக்கப்பட்ட தோற்றம்
-
உமியம் ஏரியின் கரையோரப் படகுகள்
-
உமியம் ஏரியின் தோற்றம்
பகுப்பு:தமிழக ஆசிரியர்
சான்றுகள்
[தொகு]- ↑ "Umiam Lake - Background". www.rainwaterharvesting.org (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.