உள்ளடக்கத்துக்குச் செல்

உமா வரதராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமா வரதராஜன்

உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்) கிழக்கிலங்கை, பாண்டிருப்பு, கல்முனை, இலங்கை ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப்படுகின்றவர். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதலெழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

சிங்கர் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றியவர்.

எழுத்துலக வாழ்வு

[தொகு]

உமா வரதராஜன் ஈழத்துச் சிற்றிதழ்கள் சிலவற்றின் ஆசிரியர். தனது 17வது வயதிலேயே காலரதம் என்ற என்ற சிற்றிதழை மீலாத்கீரன் உடன் இணைந்து நடாத்தியவர். அன்டனி பால்ராஜ் என்ற புனைபெயரில் களம் என்ற சிற்றிதழின் இணை ஆசிரியராக இருந்தவர். வியூகம் என்ற இதழைத் தொடங்கியவர். வியூகம் நான்கு இதழ்கள் வெளி வந்தன. திரைப்படங்கள் தொடர்பில் பத்தி எழுத்துக்களையும் எழுதி வருகிறார். 'மூன்றாம் சிலுவை' இவரது முதல் நாவல். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், சிங்கள மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி

[தொகு]

ரூபவாஹினி தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • உள்மன யாத்திரை (பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு)
  • மூன்றாம் சிலுவை (நாவல், காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு)

விருதுகள்

[தொகு]
  • இலங்கை வடகிழக்கு மாகாணசபை விருது உள்மன யாத்திரை (1989)' நூலுக்கு.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_வரதராஜன்&oldid=3593677" இலிருந்து மீள்விக்கப்பட்டது