உமா மோகன்
உமா மோகன் | |
---|---|
![]() | |
பிறப்பு | உமா மோகன் 27 சனவரி 1966 திருவாரூர் |
இறப்பு | 06 சனவரி 2025 புதுச்சேரி |
இருப்பிடம் | புதுச்சேரி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை (தமிழ்) |
பணி | முதுநிலை அறிவிப்பாளர் |
பணியகம் | புதுச்சேரி வானொலி நிலையம் புதுச்சேரி |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | ஆத்மராம் மோகன் |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
உமா மோகன் (Uma Mohan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவாரூரில் பிறந்த கவிஞரும்[1] எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு சிறப்பு அழைப்பாளராகவும் இருந்தார்.
வாழ்க்கை குறிப்பு
[தொகு]திருவாரூரில் உள்ள கல்லூரியில் உமா மோகன் இளங்கலை படித்தார். 1985-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாளன்று ஆத்மராம் மோகனைத் திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் அனைத்திந்திய வானொலியின் புதுச்சேரி நிலையத்தில் ஆறு ஆண்டுகள் தற்காலிக அறிவிப்பாளராகப் பணி புரிந்தார். பின்னர் பணி நிரந்தரம் பெற்று முதுநிலை அறிவிப்பாளராக பதவி உயர்ந்தார். இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்றுப் பரவலாக அறியப்படாத பெண் போராளிகள் குறித்து, 'விடுதலைக்களத்தில் வீரமகளிர்' என்ற தலைப்பில், ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் மூலம் இவர் வெளியிட்டுள்ள ஏழு கட்டுரைத் தொகுப்புகள் இவருடைய நூல்களில் குறிப்பிடத்தகுந்தவையாகும். 2025-ஆம் ஆண்டு சனவரி மாதம் 6-ஆம் தேதியன்று இவர் காலமானார்.[2].
எழுதிய நூல்கள்
[தொகு]கவிதைகள்
[தொகு]- டார்வின் படிக்காத குருவி[3]
- ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்
- துயரங்களின் பின்வாசல்[4]
- நீங்கள் உங்களைப் போலில்லை
- தழையுணர்த்தும் சிறு வாழ்வு
- கனவு செருகிய எரவாணம்
- சிப்பத்தில் கட்டிய கடல்
- நீ...நான்..நடுவில் ஒரு 'ம்'
- முகம் அழிந்த காலம் (கொரோனா கால அனுபவம் சார்ந்த கவிதைகள்)
- பாசாங்குகளின் அகராதி [5]
- கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்
- மிதக்கும் வரை அலங்காரம்
- தாய்க்குலத்தின் பேராதரவோடு..
பயணக்குறிப்பு
[தொகு]- வெயில் புராணம் (குறுநூல்)
சிறுகதைத் தொகுப்பு
[தொகு]- இராஜகுமாரி வீடு வழியில் இருந்தது[6]
கட்டுரைத் தொகுப்பு
[தொகு]- விடுதலைக்களத்தில் வீரமகளிர். தொகுதி 1-7
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இப்போது படிப்பதும் எழுதுவதும்: உமா மோகன், கவிஞர்". Hindu Tamil Thisai. 2016-07-02. Retrieved 2025-03-12.
- ↑ BookDay (2025-01-08). "அஞ்சலி: உமா மோகன் - எஸ் வி வேணுகோபாலன்". Book Day (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-12.
- ↑ "'டார்வின் படிக்காத குருவி' – புத்தக மதிப்புரை". வல்லமை (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-01-30. Retrieved 2025-03-12.
- ↑ "கவி நுகர் பொழுது- உமா மோகன் – திண்ணை". puthu.thinnai.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-12.
- ↑ "கணங்கள் : சொல்லும் பொருளும் -கவிஞர் உமா மோகனின் கவிதைகள்". நாகரத்தினம் கிருஷ்ணா. 2025-01-24. Retrieved 2025-03-12.
- ↑ நாகராணி, தீபா (2021-08-15). "ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது - விமர்சனம் » Vimarsanam Web". Vimarsanam Web (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-12.