உள்ளடக்கத்துக்குச் செல்

உமா மாதவ ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமா மாதவ ரெட்டி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
29 மே 2000 – 2014
முன்னையவர்அலிமினெட்டி மாதவ ரெட்டி
பின்னவர்பைலா சேகர் ரெட்டி
தொகுதிபோங்கிர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி (2000–2017)
துணைவர்
பிள்ளைகள்1

அலிமினெட்டி உமா மாதவ ரெட்டி (Alimineti Uma Madhava Reddy) தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் போங்கிர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ந. சந்திரபாபு நாயுடுவின் இரண்டாவது அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். தற்போது பாரத் இராட்டிர சமிதி கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

உமா, போங்கிர் தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரான அலிமினெட்டி மாதவ ரெட்டி என்பவரை மணந்தார். இவர்களுக்கு சந்தீப் ரெட்டி என்ற மகன் உள்ளார்.[1] இவரும் அரசியல்வாதியாவார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

உமாவின் கணவர் மாதவ ரெட்டி மார்ச் 2000 இல் மக்கள் போர் குழுவால் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு, இவர் காலியாக இருந்த போங்கிர் தொகுதி இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவின் இரண்டாவது அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2]

பின்னர் இவர் 2004 மற்றும் 2009 ஆந்திரப் பிரதேசசப் பேரவைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு, போங்கிர் தொகுதியின் உறுப்பினராக வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் தெலங்காணா இராட்டிர சமிதியின் பைலா சேகர் ரெட்டியிடம் தோல்வியடைந்தார்.[3][4]

பின்னர், டிசம்பர் 2017 இல், இவர் தனது மகனுடன் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியில் சேர்ந்தார்.[1]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_மாதவ_ரெட்டி&oldid=3847902" இலிருந்து மீள்விக்கப்பட்டது