உமா தாமசு
Appearance
உமா தாமசு (Uma Thomas) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கேரள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருக்கக்கரா சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். உமா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற திருக்காக்கரை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த உமா தாமசின் கணவர் பி. டி. தாமசின் மரணம் காரணமாகத் தேர்தல் நடைபெற்றது.[1] உமா தாமசு கேரள சட்டமன்றத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் ஒரே பெண் உறுப்பினர் ஆவார்.