உமர்ஜி அனுராதா
உமர்ஜி அனுராதா தெலுங்கு திரைப்படம் மற்றும் இதழியல் படைப்புகளுக்காக அறியப்பட்ட ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விநியோகிக்கப்படும் தெலுங்கு திரைப்பட வார இதழான சிதாரா பிலிம் வார இதழுக்கான தி லெஜண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சினிமா என்ற பகுதியில் தொடர்ந்து எழுதினார். அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்புகளுக்காகவும், பென்லி சேசுகுண்டம் ரா போன்ற தினசரி தொடர்களுக்காகவும் ஈ. தொலைக்காட்சிக்காகவும் பல நாடகங்களை எழுதியுள்ளார். ஜீ தெலுங்கிற்கான வைசாலி தொடர், ஈ. தொலைக்காட்சிக்கான கர்ஷ்னா தொடர் ஆகியவை இவரது படைப்புகள் ஆகும். 2010 ஆம் ஆண்டின் சிறந்த உரை எழுத்தாளருக்கான அக்கினேனி அபிநந்தனா விருது மற்றும் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ஏ மாயா சேசாவே படத்திற்காக சூப்பர் ஹிட் பிலிம் வார இதழ் விருது ஆகியவற்றை வென்றார்.[1]
இளமை வாழ்க்கை.
[தொகு]உமர்ஜி அனுராதா மராத்தி மொழி பேசும் மாத்வா குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தைவழி மாமா குப்பு ராவ் ஸ்ரீனிவாச ராவ், (பெடா நன்னா) ஆந்திர ரயில்வேயில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்ததால், ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தின் விஜயவாடாவிலும், பனகலா நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பெயர் பெற்ற குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகரமான மங்களகிரியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். தனது படிப்பைத் தொடரும் அதே வேளையில், பள்ளி நாட்களிலிருந்து முதுகலைப் படிப்பு வரை நாடகம் எழுதும் பழக்கத்தையும் அவர் தொடர்ந்தார். நாகராஜன் - வேமகந்தி சுசீலாவுக்கு மகளாகப் பிறந்த இவர், தனது மாமாவான குப்பு ராவ் ஸ்ரீனிவாச ராவ் வீட்டில் சிறிது காலம் வளர்ந்தார். இலக்கியப் பின்னணியுடன் நன்கு படித்த, குடும்பத்தில் பிறந்த உமர்ஜி, தனது குழந்தை பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கினார். இவரின் தாயார் வேமகந்தி சுசீலாவும் ஒரு எழுத்தாளராகவும், மதராசு(மெட்ராஸ்) அகில இந்திய வானொலியின் கலைஞராகவும் இருந்தார்.மேலும் சென்னையில் உள்ள இந்திய அரசின் மத்தியப் பள்ளியான 'கேந்திரிய வித்யாலயா' வில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். எழுதும் திறமை மற்றும் இலக்கிய ஆர்வத்தில் அவர் சிறந்தவராகவும் தடம்பதித்திருந்தார்.[1]"Interview With Umarji Anuradha - Video Interviews & Specials - CineGoer.com". Archived from the original on 28 May 2012. Retrieved 15 February 2013.</ref>
தொழில் வாழ்க்கை
[தொகு]இதழியல்
[தொகு]உமர்ஜி சென்னையில் உள்ள ஈநாடு செய்தி நாளிதழில் தனது கணவர் கே. வி. ஸ்ரீதர் குமாரோடு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முனைவர் பட்ட ஆய்வு அறிஞரான கே. வி. ஸ்ரீதர் குமார், ஈநாடு நிறுவனத்தில் புகைப்பட பத்திரிகையாளராகப் பணியாற்றினார். பின்னர் அவர் திரைப்பட இயக்கத்தின் பணியைக் கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் திரைப்பட இயக்குனரான பத்மஸ்ரீ பி. பாரதி ராஜாவுடன் இணைந்தார். 2005 ஆம் ஆண்டு சென்னையில் தமிழக ஆளுநரால் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் டாக்டர் கே. வி. ஸ்ரீதர் குமார் என்ற தனது பெயரை திரைப்படங்களுக்காக கௌதம் காஷ்யப் என்று மாற்றிக்க்கொண்டார். உமர்ஜி அனுராதா ஈநாடு செய்தி நாளிதழின் முதல் பெண் செய்தியாளராக அங்கீகரிக்கப்பட்டார். ஈநாடு தமிழ்நாட்டு பதிப்பின் பொறுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர், அவரது கணவர் கௌதம் காஷ்யப் (டாக்டர் கே. வி. ஸ்ரீதர் குமார்) ராமோஜி பிலிம் சிட்டியில் உஷா கிரான் மூவிஸ் பிலிம்ஸ் பிரிவுக்காக திரைக்கதை எழுத்தாளராக இணைக்கப்பட்டதால், அவர் ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டார். உமர்ஜி அனுராதா, டாக்டர் கே. வி. ஸ்ரீதர் குமாரின் மற்றொரு புனைப்பெயரான உமர்ஜி குமாரன் என்ற பெயரில் ஈநாடு சினிமா பக்கத்திற்கும், சிதாரா திரைப்பட இதழுக்கும் பல்வேறு திரைப்பட பிரமுகர்கள் பற்றிய பல கட்டுரைகள், பத்திகள், சிறப்புக்கட்டுரைகளை எழுதினார். பின்னர் இவர் மகாராஷ்டிரா மேசையின் பொறுப்பாளராக பதவி உயர்வு பெற்றார். மும்பை ஈனாடு நிறுவுவதற்காக அவர் ஒரு சிறப்பு பணிக்கு சென்றார். ஈநாடு மும்பை பதிப்பின் தொடக்க விழாவை அவர் மேற்பார்வையிட்டார். ஈநாடு நிறுவனத்தில் பணியாளர் நிருபராகவும், திரைப்படப் பிரிவு பொறுப்பாளராகவும் இருந்ததோடு, மகாராஷ்டிரா திரைப்படப் பொருப்பாளராகவும் பணியாற்றினார். ஈநாடு நாளிதழின் அனைத்து மாவட்ட பதிப்புக்களின் முக்கியப் பக்கங்களுக்கான (பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்) மத்தியப் பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்தார்.[1]"Interview With Umarji Anuradha - Video Interviews & Specials - CineGoer.com". Archived from the original on 28 May 2012. Retrieved 15 February 2013.</ref>
திரைப்படங்கள்
[தொகு]உமர்ஜி அனுராதா கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த ஏ மாயா சேசாவே (விண்ணைத் தான்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்குப்பதிப்பு) திரைப்படத்திற்கான திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
நான்கு தொகைக்காட்சித் தொடர்களை எழுதியுள்ள அனுராதா மஞ்சுளா கட்டமனேனி மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் புகழ்பெற்ற தெலுங்குக் கதாநாயகர்களான கட்டமனேனி கிருஷ்ணா, மகேஷ் பாபு ஆகியோருடைய சகோதரி ஆவார். ஏ மாயா சேசாவே திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படமாகும். கௌதம் மேனன் எழுதி இயக்கி, ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனத்தை உமர்ஜி அனுராதா எழுதியுள்ளார். [1] மஞ்சுளா கட்டமனேனி தயாரித்த இப்படத்தில் நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கின் வெற்றிபெற்ற திரைப்படமாகும். [2] இத்திரைப்பட உரையாடல் மூலம் கவனம் ஈர்த்த அனுராதா புகழ்பெற்ற இயக்குநரான ராதா மோகன் இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்த "ககனம்", ஜெயேந்திரன் இயக்கத்தில் சித்தார்த், நித்யா மேனன் நடித்த 180 ஆகிய திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]உமர்ஜி அனுராதா, தனது 23 வயதில், (1993) கவிஞரும் எழுத்தாளரும், மிமிக்ரி கலைஞரும், உடன் பணியாற்றிய மூத்த பணியாளருமான டாக்டர் காவுரி வெங்கட ஸ்ரீதர் குமாரை (திரைப் பெயர் கௌதம் காஷ்யப்) மணந்தார். இயக்குனர் பத்மஸ்ரீ பி. பாரதி ராஜா மற்றும் இயக்குனர் பத்மஸிரீ கே. விஸ்வநாத் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணக் கல்லூரியின் பேராசிரியர் எல். பி. சங்கரா ராவ் வழிகாட்டுதலின் பேரில் திரைப்படக் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகியவற்றின் அழகியல் முறை குறித்து முனைவர் பட்டம் பெற்றார். அவர்களின் திருமணம் 13 ஆகஸ்ட் 1993 அன்று திருமலை திருப்பதி மலைகளில் தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் சிறீவென்னேலா சீதாராம சாஸ்திரியால் நடத்தப்பட்டது. இந்த தம்பதியினருக்கு 1997 மார்ச் 1 அன்று பிறந்த நாகுசி காவூரி என்ற ஒரு மகன் உள்ளார். ஸ்ரீதர் குமார் பிரசிடென்சி கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 1998 ஆம் ஆண்டில் அவர் ராமோஜி பிலிம் சிட்டியில் உஷாகிரான் திரைப்படக் கதைத் துறையில் திரைப்படக் கதை, திரைக்கதை எழுத்தாளராகச் சேர்ந்தார். இப்போது அவர்கள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் ஹைதராபாத்தில் வசிக்கின்றனர்.
எழுதும் பாணி
[தொகு]உமர்ஜி அனுராதா மிகவும் பொதுவான மொழி மற்றும் பேச்சு பாணியை ஏற்றுக்கொண்டார். தெலுங்கு பேசும் மலையாளிகளின் பாணி, கேரளாவில் உள்ள கிறிஸ்தவ குடும்பங்களின் பாரம்பரியங்கள் குறித்து அவர் தீவிர ஆராய்ச்சி செய்தார். படத்தின் வசனங்கள் குறும்படமாகவும் இனிமையாகவும் இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டினர்.[2]
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு & திரைப்படம் | நடித்தவர். | இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவு | கதை மொழி | எழுத்தாளர். | |
|---|---|---|---|---|---|
| 2010 யே மாயா செசாவே | நாக சைதன்யா சமந்தா ருத் பிரபு, ராகவராவ் சிவகுமார், சுரேகா வாணி,
சுதீர் பாபு, கௌதம் வாசுதேவ் மேனன்,சிலம்பரசன் ராஜேந்தர்-திரிஷா கிருஷ்ணன்-விருந்தினராக "மனசா" படத்தில் கணேஷ் ஜனார்த்தனன் - |
கௌதம் வாசுதேவ் மேனன் | கௌதம் வாசுதேவ் மேனன்
தெலுங்கு |
உமர்ஜி அனுராதா [3] | |
| 2010 மாரோ சரித்ரா | வருண் சந்தேஷ், அனிதா கேலர், ஷ்ரத்தா தாஸ் | ரவி யாதவ்
மிக்கி ஜே மேயர் ரவி யாதவ் |
கே. பாலா சந்தர்
தெலுங்கு |
(உமர்ஜீ உமர்ஜி அனுர்தா [4] | |
| ககனம் | நாகார்ஜுனா, பிரகாஷ் ராஜ், பூனம் கவுர், சனா கான், இக்பால் யாகூப், பிரம்மானந்தம் | ராதா மோகன் | ராதா மோகன் தெலுங்கு | (உமர்ஜீ உமர்ஜி அனுராதா [5] | |
| 180 | அஜய் குமார் என்ற ஏ. ஜே, மனோ, மற்றும் ஹோஸ் * பிரியா ஆனந்த் சித்தார்த் நித்யா மேனன் எஸ். வி. எஸ். மூர்த்தி, லட்சுமி ராமகிருஷ்ணன், மிஷா கோஷல், ஜூலி ஸ்ரீசரன் | ஜெயந்திரன், ஷரீத், பாலசுப்ரமணியம் | சுபா & ஜெயந்திரன்
தெலுங்கு |
உமர்ஜி அனுராதா | |
| இன்டிந்தா அண்ணாமையா | எலமஞ்சிலி ரேவந்த், அனன்யா, தனிகெல்லா பரணி, பிரம்மானந்தம், எம். எஸ். நாராயணன், ஏ. வி. எஸ்., ஜெயப்பிரகாஷ் ரெட்டி, சுப்பராய சர்மா, புஜ்ஜி, ஹேமா, சுரேகவை, ஷியாமலதா, விஸ்வா, கௌசிக், நிகிதா, இஷ்கா [6][7] | கே. ராகா வேந்திரா ராவ் | தெலுங்கு | உமர்ஜி அனுராதா [8][9] | |
| மாலினி 22[10] | நித்யாமேனன், ஸ்ரீனிவாச ராவ் கோட்டா, கோவை சரளா, நரேஷ், வித்யுலேகா ராமன் | ஸ்ரீபிரியா | தெலுங்கு | உமர்ஜி அனுராதா,கௌதம் காஷ்யப் [9][10][11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Interview With Umarji Anuradha - Video Interviews & Specials - CineGoer.com". Archived from the original on 28 May 2012. Retrieved 15 February 2013.
- ↑ "Umarji Anuradha | Ravi Teja | Dialogue Writer Umarji Anuradha | 180 | Gaganam | Ye Maaya Chesave - CineGoer.com". Archived from the original on 22 April 2012. Retrieved 15 February 2013.
- ↑ "Ye Maya Chesave film review - Telugu cinema Review - Naga Chaitanya & Samantha". Archived from the original on 18 September 2018. Retrieved 15 February 2013.
- ↑ "Maro Charitra film review - Telugu cinema Review - Varun Sandesh & Anita". Archived from the original on 7 March 2013. Retrieved 15 February 2013.
- ↑ "Gaganam film review - Telugu cinema Review - Nagarjuna & Prakash Raj". Archived from the original on 24 June 2012. Retrieved 15 February 2013.
- ↑ "Intinta Annamayya Cast and Crew|Telugu Movie Profile". Archived from the original on 1 July 2014. Retrieved 9 September 2013.
- ↑ "澳门娱银河手机网址|首页_欢迎您". Archived from the original on 10 March 2013. Retrieved 15 February 2013.
- ↑ "Annamayya statue erected for KRR film - Telugu Mirchi". Archived from the original on 16 February 2013. Retrieved 15 February 2013.
- ↑ "Telugu Cinema News | Telugu Movie Reviews | Telugu Movie Trailers - IndiaGlitz Telugu". Archived from the original on 16 December 2012. Retrieved 15 February 2013.
- ↑ "IMDb". IMDb. IMDb.
- ↑ "Malini 22 press meet - Telugu cinema news". Archived from the original on 4 April 2014. Retrieved 3 September 2013.
- ↑ "Writing woes for women". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/writing-woes-for-women/article2883914.ece.
- ↑ "Umarji Anuradha". IMDb. Archived from the original on 7 April 2016. Retrieved 1 July 2018.