உள்ளடக்கத்துக்குச் செல்

உமர்கோட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°22′12″N 69°43′48″E / 25.37000°N 69.73000°E / 25.37000; 69.73000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமர்கோட்
  • عمرڪوٽ ضلعو
  • ضلع عمرکوٹ
மாவட்டம்
மேல்: உமர்கோட் கோட்டை
கீழ்:அக்பர் பிறந்த இடம்
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணததில் உமர்கோட் மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணததில் உமர்கோட் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°22′12″N 69°43′48″E / 25.37000°N 69.73000°E / 25.37000; 69.73000
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
கோட்டம்மிர்பூர் காஸ் கோட்டம்
நிறுவிய ஆண்டுApril 1993
கலைக்கப்பட்டதுடிசம்பர் 2000
திரும்ப நிறுவப்பட்டதுடிசம்பர் 2004
தலைமையிடம்உமர்கோட்
வருவாய் வட்டங்கள்
04
  • குன்றி வட்டம்
    பித்தோரோ வட்டம்
    சமாரோ வட்டம்
    உமர்கோட் வட்டம்
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்)
 • நாடாளுமன்றத் தொகுதிNA-213 உமர்கோட்
பரப்பளவு
 • மாவட்டம்5,608 km2 (2,165 sq mi)
ஏற்றம்
21 m (69 ft)
உயர் புள்ளி
90 m (300 ft)
தாழ் புள்ளி
3 m (10 ft)
மக்கள்தொகை
 • மாவட்டம்11,59,831
 • அடர்த்தி206.8/km2 (536/sq mi)
 • நகர்ப்புறம்
2,58,859 (22.32%)
 • நாட்டுப்புறம்
9,00,972
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்
    38.69%
  • ஆண்
    51.17%
  • பெண்:
    25.11%
நேர வலயம்ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
69100
தொலைபேசி குறியீடு238
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:PK
இணையதளம்www.umerkot.gos.pk

உமர்கோட் மாவட்டம் (Umerkot District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் மிர்பூர் காஸ் கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் உமர்கோட் நகரம் ஆகும். உமர்கோட் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 1,330 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. உமர்கோட் நகரத்தில் உள்ள உமர்கோட் கோட்டையில் முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்தார். உமர்கோட் நகரத்தின் சிவன் கோயில் சிந்து மாகாணத்தில் பிரபலமானது.[3]இதன் கிழக்கில் சிந்துவின் தார் பாலைவனம் உள்ளது.

உமர்கோட் சிவன் கோயில்

மாவட்ட நிர்வாகம்

[தொகு]
உமர்கோட் மாவட்டத்தின் 4 வருவாய் வட்டங்கள்

உமர்கோட் மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]அவைகள் பின்வருமாறு:

  • குன்றி வட்டம்
  • பித்தோரோ வட்டம்
  • சமாரோ வட்டம்
  • உமர்கோட் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 222,562 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,159,831.[5] ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 109.73 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகும். இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 406,585 (35.1%) ஆக உள்ளனர்.[1][6]நகர்புபுறங்களில் 258,859 (22.32%) மக்கள் வாழ்கின்றனர்[1].

மொழி

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் சிந்தி மொழியை 95.13%, உருது மொழியை 1.4%, பஞ்சாபி மொழியை 1.8% மற்றும் பிற மொழிகளை 1.67% மக்கள் பேசுகின்றனர்[7].

சமயம்

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 44.83%% மக்களும், இந்து சமயத்தை 54.66%% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.51% மக்களும் பின்பற்றுகின்றனர்.[8]

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
  3. "The thriving Shiva festival in Umarkot is a reminder of Sindh's Hindu heritage". Dawn. https://www.dawn.com/news/1392074. 
  4. DISTRICT GOVERNMENT - Umerkot பரணிடப்பட்டது 2012-02-24 at the வந்தவழி இயந்திரம்
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). [akistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்கோட்_மாவட்டம்&oldid=4325757" இலிருந்து மீள்விக்கப்பட்டது