உமர்கோட் கோட்டை

ஆள்கூறுகள்: 25°21′49″N 69°44′2″E / 25.36361°N 69.73389°E / 25.36361; 69.73389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமர்கோட் கோட்டை
அமர்கோட் கோட்டை
பகுதி: 1947 வரை ராஜபுதனத்தின் அமர்கோட் மாநிலம்
உமர்கோட் மாவட்டம், சிந்து
உமர்கோட் கோட்டையின் கோட்டை கண்காணிப்பு கோபுரம்
ஆள்கூறுகள் 25°21′49″N 69°44′2″E / 25.36361°N 69.73389°E / 25.36361; 69.73389
வகை பாலைவன கோட்டைப் பகுதி
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது பாகிஸ்தான்
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்
இட வரலாறு
கட்டிய காலம் 11 ஆம் நூற்றாண்டு
கட்டியவர் ரானா அமர் சிங்[1]

உமர்கோட் கோட்டை (உருது: قِلعہ عُمَرکوٹ ; சிந்தி: عمر ڪوٽ جو قلعو) என்பது சிந்து பகுதியின் உமர்கோட் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். இப்பகுதி அமர்கோட் (உருது: امَرکوٹ ; சிந்தி:امرڪوٽ) என்றும் அழைக்கப்படுகிறது. 15 அக்டோபர் 1542 ஆம் ஆண்டு சேர் சா சூரியிடம் இராணுவத் தோல்வி அடைந்த உமாயூன் தப்பி இக்கோட்டைக்கு வந்த பொழுது பேரரசர் அக்பர் இங்கு பிறந்தார்.[2] முகலாயப் பேரரசர் உமாயூனுக்கு உமர்கோட்டை சேர்ந்த ரானா பிரசாத் அடைக்கலம் கொடுத்தார்.[3] பிற்காலத்தில் முகலாயப் பேரரசர் அக்பர் இந்துஸ்தானத்தின் ஷாஹின்ஷாவானார். அக்பர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு மதத்தினரிடமும் புகழ் பெற்ற ஒரு நபராக இருந்தார். உமர்கோட்டில் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் இக்கோட்டைக்கு அருகில் உள்ள அக்பர் பிறந்த இடம். தற்போது அக்பர் பிறந்த இடம் வெட்ட வெளியாக உள்ளது. 1746 ஆம் ஆண்டு முகலாய சுபேதார் நூர் முகமது கலோரோ இந்த இடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினார்.[4] பின்னர் பிரிட்டிஷார் இந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அமர்கோட் கோட்டையானது 11 ஆம் நூற்றாண்டில் ரானா அமர் சிங்கால் கட்டப்பட்டது.[1] இது இந்து ராஜ்புத் அரசமரபை சார்ந்த உமர்கோட்டின் ரானாக்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்தது. ஆனால் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் அரசாங்கத்தால் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் ரானா குடும்பமானது அவர்களது ஜாகிர் முறை இடத்தை இந்த இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் கொண்டிருந்தது.[3] கோட்டையை ஆளும் பொறுப்பானது ரானா மெக்ராஜ் என்பவரிடம் இருந்தது.[5]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 https://www.dawn.com/news/1157340
  2. umerkot fort, sindh, பார்க்கப்பட்ட நாள் 13 June 2012
  3. 3.0 3.1 Woman's Triumph By Asha Ranawat. 2006. பக். 63–64. https://books.google.com/books?id=WHr62QxPQSIC&pg=PA63&dq=rana+umerkot+jagir&hl=en&sa=X&ei=UkzzUumdGsGSrgf88YCABw&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=rana%20umerkot%20jagir&f=false. 
  4. Thar: The Great Pakistani Desert, Land, History, People, 2001, p. 79
  5. "The Sacking of 'Umarkot". www.infinityfoundation.com. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்கோட்_கோட்டை&oldid=2933078" இலிருந்து மீள்விக்கப்பட்டது