உமயங்கனா விக்கிரமசிங்க
உமயங்கனா விக்கிரமசிங்க උමයංගනා වික්රමසිංහ | |
|---|---|
| பிறப்பு | 24 அக்டோபர் 1980 பொரளை, இலங்கை |
| கல்வி | ராகம பசிலிக்கா மகா வித்தியாலயம் புனித. பால்சு பெண்கள் பள்ளி, மிலகிரிய |
| பணி | நடிகை, நாடக ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002 முதல் தற்போது வரை |
| பெற்றோர் |
|
| விருதுகள் | மிகவும் பிரபலமான நடிகை |
உமயங்கனா விக்கிரமசிங்க (Umayangana Wickramasinghe) ( அக்டோபர் 24, 1980 ) இலங்கைத் திரைப்படத்துறை, மேடை நாடகம் மற்றும் தொலைக்காட்சி நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார்.[1][2] இதின் இட்டா பசே[3] மற்றும் ஜீவிதே லசனை என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[4][5]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]விக்கிரமசிங்க 24 அக்டோபர் 1980 அன்று பொரளையில், குடும்பத்தின் மூத்த குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை சுனில் விக்கிரமசிங்க இலங்கை இரயில்வேயிலும், தாய் அனுலா காந்தி குமாரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பணியாற்றினர்.[6] இவருக்கு மகேசு விக்கிரமசிங்க என்ற ஒரு தம்பி உள்ளார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை ராகமவில் உள்ள பசிலிக்கா மகா வித்தியாலயத்திலும், பின்னர் கொழும்பின் மிலாகிரியவில் உள்ள புனித பவுல் பெண்கள் பள்ளியிலும் முடித்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், இவர் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அமைச்சகத்தால் நடத்தப்பட்ட மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். மேலும் தெரானா தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராகவும், பின்னர் சிறீ செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராகவும் இருந்தார்.[7]
தொழில் வாழ்க்கை
[தொகு]தயா வயமானின் 2002ஆம் ஆண்டு தயாரிப்பான, சுதர்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட 'நெய்னகே சுதுவா'[8] போன்ற மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும், சேச்சுபியர் நாடகங்களான 'ஒதெல்லோ'வில் "டெசுடெமோனா"வாகவும், 'காம்லெட்'டில் "கெர்ட்ரூட்" ஆகவும் நடித்தார்.[7]
சுதத் ரோஹனா இயக்கிய 'காட்டு இம்புலா' என்ற தொலைக்காட்சி நாடகத்தின் மூலம் இவர் முதன்முதலில் தொலைக்காட்சியில் நடித்தார்.[7] 'ஜீவிதே லசனை'[9][10] தொடரில் "தனஞ்சனா" பாத்திரத்திலும், 'இதின் இட்டா பாசே'[11] தொடரில் "டெடுனு" பாத்திரத்திலும் நடித்துப் பிரபலமானார். 2010ஆம் ஆண்டில், இந்தப் பாத்திரத்திற்காக சுமதி விருது வழங்கும் விழாவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருதை வென்றார்.[12]
சந்திரரத்ன மாப்பிட்டிகம இயக்கிய 'உயனட மல் கென்ன' திரைப்படத்தின் மூலம் இவர் முதன்முதலில் திரைப்படத்தில் நடித்தார்.[7] இருப்பினும், இந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இவரது முதல் திரையிடப்பட்ட திரைப்படம் 2012ஆம் ஆண்டு டென்சில் ஜெயவீரா இயக்கிய வசானே செனகாசா ஆகும்.[13][14]
இவர் ரூபவாகினி ஒளிபரப்பிய ரணவிரு ரியல் சுடார் என்ற தொலைக்காட்சி யதார்த்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Actresses in Sinhala cinema - Umayangana Wickramasinghe". National Film Corporation Of Sri Lanka. Archived from the original on 7 September 2013. Retrieved 30 October 2019.
- ↑ "Society drifting away from TV - Umayangana". srilankamirror. Retrieved 30 October 2019.
- ↑ "'Ithin Eeta Passe' telecast hundredth episode". Sunday Times. Retrieved 25 April 2019.
- ↑ "Chat with Umayangana Wickramasinghe". uslanka. Retrieved 30 October 2019.
- ↑ "Umayangana Wickramasinghe films". IMDb. Retrieved 30 October 2019.
- ↑ "Umayangana Unraveled". uslanka. Retrieved 30 October 2019.
- 1 2 3 4 "News presenter turned actress". The Nation. Retrieved 25 April 2019.
- ↑ "අම්මා නැතිවෙච්ච මුල් කාලයේ ඒ දුක - Umayangana". Hiru FM. Retrieved 25 April 2019.
- ↑ "No regrets". gossiplankahotnews. Retrieved 25 April 2019.
- ↑ "'Jeewithaya Lassanai' records 250th episode". Sunday Times. Retrieved 30 October 2019.
- ↑ "Dedunu-Kelum love story in miniscreen". Sunday Times. Retrieved 25 April 2019.
- ↑ "Star studded tele night". Daily News. Retrieved 25 April 2019.
- ↑ "Umayangana Wickramasinghe films". Sinhala Cinema Database. Retrieved 25 April 2019.
- ↑ "Umayangana and Sandali enter reel". Daily News. Retrieved 25 April 2019.
- ↑ "I like it, but No time". lkactress. Retrieved 25 April 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Visiting celebrities add spice to Sri Lankan I-Day celebrations". The Island. 9 February 2010. http://www.island.lk/2010/02/09/news14.html.
- "Battle Zone on air on CSN from 30th August". Sunday Observer. 24 August 2014. http://archives.sundayobserver.lk/2014/08/24/spo21.asp.
- මිදි ඇඹුල් කියලා නරියෙකුත් කිව්වා... Umayangana Wickramasinghe