உப்பு வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1870-களில் சுங்க வேலியும் (சிவப்பில்) உயிர் வேலியும் (பச்சையில்)

உப்பு வேலி என்பது ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு உப்பு கொண்டு செல்வதைத் தடுக்க ஏற்படுத்தப் பட்டிருந்த சுங்க வேலியாகும். ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்திருந்ததால் அதை மக்கள் கொடாமல் இருப்பதைத் தடுத்து வரி வசூலிக்க இது ஏற்படுத்தப்பட்டது. இது அதிக அளவாக 4000 கிலோ மீட்டருக்கு மேலான நீளமும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது. 1803-ஆம் ஆண்டு வாக்கில் இவ்வேலி அமைத்தல் தொடங்கப்பட்டது.

ஒரு சமயத்தில் இதன் பாதுகாப்பில் 14000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்[1].

உசாத்துணை[தொகு]

  1. எஸ். ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக் 116, உப்புக் கடத்தல். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பு_வேலி&oldid=2076905" இருந்து மீள்விக்கப்பட்டது