உப்பு படர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூடான உப்பு நீரானது குளிர்ந்த நன்னீருடன் கலக்கும் நிகழ்வே உப்பு படர்தல் அல்லது படிதல் ஆகும். சூரியனின் வெப்பத்தை உட்கவர்ந்த உவர் நீரின் ஒரு பகுதி, நீர்மட்டத்திலிருந்து கீழ்நோக்கி இறங்குகிறது. இவ்வாறு உள்நுழையும் உவர் நீரானது உப்பை இழக்கும் முன்பே வெப்பத்தை இழக்கிறது. சூழ்ந்துள்ள குளிர் நன்னீரானது வெப்பத்தை ஏற்று விரிவடைவதால், அடர்த்தி குறைந்து மேலெழுகிறது. இச்செயல்முறை தொடர்ந்து நிகழ்ந்து உப்பானது தொடர்ந்து படிந்து விரல் போன்று வளர்கிறது. வெப்பத்தைவிட உவர் நீரானது மெதுவாகவே விரவுகிறது. 1960 ல் முதன் முதலில் கணக்கீட்டினால் இவ்விளைவை விளக்கியவர் ஃப்ளோரிடா மாநிலப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்த மெல்வின் ஸ்டெர்ன் ஆவார். ரேமண்ட் ஸ்மித், மைக் கிரேக் மற்றும் எரிக் குன்சே போன்றோர் இவ்வாய்விற்கு பேருதவியாக விளங்கினர். கரீபியன் கடலில் பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு உப்பானது படர்ந்து மாடிக்படிக்கட்டு போல் காட்சியளிக்கிறது. அமெரிக்க கடலாராய்ச்சியாளர் திரு. ஹென்றி ஸ்டாமல் (Henry Stommel) ஸ்டெர்னின் ஆய்விற்கு முன்பே தனது ஆய்விதழில் உப்பானது படிந்து ஒரு சவ்வு போன்று சூழ்ந்து வெப்பம் விரவுகிறது எனக் குறிப்பிடுகிறார். உவர் நீர் சுழற்சியால், தானே இயங்கும் உவர் நீரூற்று போல் செயல்பட்டு வெப்பத்தை உறிஞ்சுவதாகக் குறிப்பிடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பு_படர்தல்&oldid=2597936" இருந்து மீள்விக்கப்பட்டது