உப்புகண்டம்
தோற்றம்
உப்புகண்டம் (Dry Mutton), குறிப்பாக வெள்ளாட்டுக் கறித் துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பிசைந்து, ஊசி நூலால் கோர்த்து, நல்ல வெயிலில் உலர்த்தி சேமித்து வைக்கப்படும்.. தேவைப்படும் போது உப்புகண்டத்தை அப்பளம், வத்தல் போன்று எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் உண்ணலாம். இதனை தட்டுக் கறி, காயப் போட்ட கறி என்றும் அழைப்பர்.குழம்பில் உப்புகண்டத்தை கலந்து சமைப்பதும் வழக்கம்.[1][2]பொதுவாக மீன் கருவாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
மலேசியா, இந்தோனேசியா, பர்மா போன்ற நாடுகளில், இசுலாமியர்கள் வணிகம் செய்யச் செல்கையில், ஹலால் உணவு கிடைக்காத போது, எடுத்துச் சென்ற கருவாடு மற்றும் உப்புகண்டத்தை உணவுடன் சேர்த்து உண்பர்,