உப்பிலிடுதல் (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உப்பிலிடுதல் என்பது சமையல் உப்பை பயன்படுத்தி உணவுகளை பதப்படுத்தி வைக்கும் ஒரு முறை. ஊறுகாய் செய்தல், உப்பு நீரை பயன்படுத்தி பதப்படுத்தல் ஆகிய துறைகளில் இது பயன்படுகிறது. இது உணவை பாதுகாக்கும் முறைகளில் பழமையான முறை. மீன்களை உப்பிலிட்டு கருவாடாக மாற்றுதல் மற்றும் இறைச்சி வகைகளை உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கும் முறைகள் பழங்காலம் முதலே மக்கள் பயன்படுத்தி வரும் முறைகள். ரன்னர், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும் இந்த முறையில் பதப்படுத்தி வைக்கலாம். 

கடல் உப்பு சேர்க்கப்பட்டு உணவுகள் பதப்படுத்தப்படுகின்றன.
ப்ராக் உப்புத்தூள் #1 என்பது உப்பு மற்றும் சோடியம் நைட்ரைட் கலந்த ஒரு கலவை. சதாரண உப்பிலிருந்து இதை வேறுபடுத்த இளஞ்சிவப்பு நிறம் சேர்க்கப்படுகிறது

 பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நோய்களை உருவாக்க சாத்தியமுள்ள நுண்ணுயிரிகள் உப்புச்சூழலில் வாழ இயலாது. உப்புச்சூழலில் இவ்வகை நுண்ணுயிரிகள் இறந்து விடும் அல்லது தற்காலிகமாக செயல்படாமல் இருக்கும்.

உப்பிலிடுதல் முரை 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சாதரணமாக சாம்பல்உ நிறத்துக்கு மாறும் இறச்சிகள் உப்பிலிட்டு வைத்தால் சிகப்பு நிறமாக மாறிவிடுகிறது. அந்த கால மக்கள் சிவப்பு நிற உணவை அதிகமாக விரும்பியதால் உப்பிலிடுதல் பிரபலமானது. மேலும் உப்பிலிடுதல் உணவினை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு  தவிர்த்து பாக்டீரியா சிதைவிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.

மத வழக்கம்[தொகு]

 யூத மற்றும் முஸ்லீம் உணவு சட்டங்களின் படி விலங்குகளி இறச்சிகளை அவற்றின் இரத்தத்தை முழுமையாக நீக்கிய பின்பே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இரத்தைத்தை நீக்குவதற்கு உப்பு மற்றும் உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது.  

மேலும் வாசிக்க[தொகு]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பிலிடுதல்_(உணவு)&oldid=2321951" இருந்து மீள்விக்கப்பட்டது