உள்ளடக்கத்துக்குச் செல்

உப்பாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்பாரா 
மைசூரைச் சேர்ந்த உப்பாரா சாதியைச் சேர்ந்த ஒரு அறியப்படாத மனிதனின் உருவப்படம்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
உப்பிலியர்

உப்பாரா (Uppara) (சாகரா என்றும் அழைக்கப்படுகிறது), எனப்படுவோர் இந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கருநாடகா மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்.[1][2][3]

இச்சமூகத்தினரின் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர்.[4] விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த இவர்கள், தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[5] சுங்கலம்மா, திம்மப்பா, ஜம்புலம்மா ஆகிய தெய்வங்கள் இம்மக்கள் வழிபடும் சிறப்புத் தெய்வங்களாகும்.[6] உப்பாரா சமூக மக்கள் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.[7]

சொற்பிறப்பு

[தொகு]

உப்பர, உப்பாரா மற்றும் உப்பாலிகா ஆகிய சொற்களின் வேர் தெலுகு வேராகும். உப்புடன் தொடர்பு கொண்ட சகல தொழில்களையும் இது குறிக்கின்றது.[8]

கலாச்சாரம்

[தொகு]

இந்த சாதியைச் சேர்ந்த சிலர் வைணவர்களாகவும், மற்றவர்கள் சைவர்களாகவும் உள்ளனர். அவர்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். மேலும் இவர்கள் பல்வேறு கிராம தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். உப்பாரார்கள் ஒவ்வொரு ஆண்டும், கங்கா சப்தமி அன்று பகீரத ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.

மக்கள்தொகை

[தொகு]

சின்னப்ப ரெட்டி அறிக்கையில் (1990), கருநாடகாவின் மக்கள் தொகையில், உப்பாரா மக்கள் சுமார் 1.18 சதவீதம் பேர் என்று குறிப்பிடுகிறது.

தொழில்

[தொகு]

உப்பு காய்ச்சுவது, இவர்களது குல தொழிலாகும்.[9]

பிரிவுகள்

[தொகு]

உப்பரா சமூகத்தில் நான்கு உட்பிரிவு குழுக்கள் உள்ளன, அதாவது நக்கா உப்பாரா, குலாய் உப்பாரா, மேட்டி உப்பாரா மற்றும் செட்டி உப்பாரா என்பதாகும். மேலும் கடற்கரை ஆந்திரா மற்றும் தெலங்காணா பகுதிகளில் வசிக்கும் தெலகா உப்பாரா என்ற மற்றொரு இனக்குழுவும் உள்ளது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Specification of OBCs in respect of Andhra Pradesh, Assam, Bihar, Goa, Gujarat, Haryana, Himachal Pradesh, Karnataka, Kerala, Madhya Pradesh, Maharashtra, Punjab, Tamil Nadu and Uttar Pradesh (No. 12011/68/1993-BCC)"" (in Hindi, English). The Gazette of India: Extraordinary (Department of Publication): 38. 13 September 1993. பன்னாட்டுத் தர தொடர் எண்:0254-6779. இணையக் கணினி நூலக மையம்:1752771. https://egazette.nic.in/WriteReadData/1993/E-0450-1993-0186-17135.pdf. 
  2. Srinivasulu, K. "Caste, Class and Social Articulation in Andhra Pradesh: Mapping Differential Regional Trajectories". Overseas Development Institute. Retrieved 27 December 2009.
  3. Thurston, Edgar; Rangachari, K. "'Uppara'". Castes and Tribes of Southern India. Vol. 7. pp. 228 to 241. கணினி நூலகம் 11676577. Reprint. Originally published: Madras : Supt. Govt. Press, 1909
  4. K. Rangachari & Edgar Thurston, ed. (2020). Castes and Tribes of Southern India, Volume VII of VII. the Upparas in the Telugu country, and speak Telugu
  5. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  6. K. M. Venkataramaiah, ed. (1996). A handbook of Tamil Nadu. International School of Dravidian Linguistics. p. 425. ISBN 9788185692203.
  7. உப்பிலிய நாயக்கர் சமுதாயத்தை எம்.பி.சி.,யில் சேர்க்க கோரிக்கை. தினமலர் நாளிதழ். ஜூலை 09,2012. உப்பாரா, உப்பிலிய நாயக்கர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  8. டி . எம் . காளியப்பா, ed. (1992). கோவை நகர வரலாறு. தேவி பதிப்பகம். p. 42.
  9. Jogendra Nath Bhattacharya, ed. (1896). Hindu Castes and Sects: An Exposition of the Origin of the Hindu Caste System and the Bearing of the Sects Towards Each Other and Towards Other Religious Systems. Thacker, Spink. p. 265. Archived from the original on 2021-02-09. Retrieved 2021-02-09. The salt manufacturing caste of the Madras Presidency are called Uppilian, Uppara and Upaliga
  10. Kumar Suresh Singh, ed. (1996). India's Communities: N - Z. Oxford University Press. p. 3540. The Uppara community has four endogamous groups , namely Nakka Uppara , Kulayi Uppara , Matti Uppara and Chetty Uppara . There is also another group called Telaga Uppara who live in the coastal and Telangana areas of Andhra Pradesh . Their traditional occupation is salt - making {{cite book}}: no-break space character in |quote= at position 4 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பாரா&oldid=4306423" இலிருந்து மீள்விக்கப்பட்டது