உப்பல் கலான்
உப்பல்
உப்பல் கமாம் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°23′N 78°33′E / 17.38°N 78.55°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மெட்சல்-மல்கஜ்கிரி |
நகரம் | ஐதராபாத்து |
ஏற்றம் | 455 m (1,493 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 039 |
தொலைபேசி இணைப்பு எண் | 91 040 |
வாகனப் பதிவு | டிஎஸ்-08 |
உப்பல் (Uppal) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள புறநகர் பகுதியாகும். இது மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் கீசரா வருவாய் பிரிவில் உப்பல் மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும். [1] இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் வட்டம் எண் 2 ஐ உருவாக்குகிறது.
பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியில் இணைவதற்கு முன்னர் இது ஒரு நகராட்சியாக இருந்தது. [2] குர்த் மற்றும் காலன் என்ற சொற்கள் முகலாயர் காலத்திற்கு முந்தைய நிர்வாக சொற்களாகும். ஒரே பெயரில் இரண்டு பகுதிகளை வேறுபடுத்துகின்றன. குர்த் என்றால் "சிறியது" என்றும் கலான் என்றால் "பெரியது" என்பது பாரசீக மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
புள்ளிவிவரங்கள்
[தொகு]2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[3] உப்பல் கலானின் மக்கள் தொகை 118,259 என்ற அளவில் இருந்தது. இதில் ஆண்கள் 52% எனவும், பெண்கள் 48% எனவும் இருந்தனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 73% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 80%, பெண் கல்வியறிவு 66% ஆகும். ஊரின் மக்கள் தொகையில் 12% 6 வயதுக்குட்பட்டவர்கள்.
1991இல், இது 78,644 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. 10 ஆண்டுகளில் (1991-2001) இந்த பகுதியின் வளர்ச்சி விகிதம் சுமார் 56 சதவீதமாக இருந்தது.
மத இடம்
[தொகு]சொரூப் நகர் குடியிருப்பில் அமைந்துள்ள கரிகிரி வெங்கடேசுவரா சுவாமி கோயில் நன்கு அறியப்பட்ட மத இடங்களில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 30 November 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ "Greater Hyderabad Municipal Corporation". www.ghmc.gov.in. Archived from the original on 1 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.