உபேந்திர குமார்
உபேந்திர குமார் | |
---|---|
பிறப்பு | சூலை 18, 1941 சென்னை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
பிறப்பிடம் | ஒடிசா |
இறப்பு | 24 சனவரி 2002 பெங்களூர், இந்தியா | (அகவை 60)
இசை வடிவங்கள் | திரை இசை, மேடை நாடகம் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை இயக்குனர், இசைக்கலைஞர் |
இசைத்துறையில் | 1966–2002 |
உபேந்திர குமார் (Upendra Kumar) (18 சூலை 1941 - 24 சனவரி 2002) ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் முக்கியமாக கன்னடம் மற்றும் ஒடியா படங்களில் பணியாற்றினார். ராஜ்குமாருடனான வலுவான தொடர்புக்காக இவர் அறியப்பட்டார். மேலும் ராஜ்குமாரும், அவரது மகன்களும் நடித்த படங்களுக்காக இவரது தொழில் வாழ்க்கையின் சிறந்த பாடல்களை வழங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட 210 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
இவர், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள திகபஹந்தி என்ற ஊரைச் சேர்ந்தவர். [2] இவர் 1941இல் பிரித்தானிய இந்தியாவின் சென்னையில்]] தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை இலட்சுமண் சுவாமி ஒரு சோதிடர். இவர் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின்னர், தனது மாமா அப்பாராவ் உதவியுடன் இசையை நோக்கி நகர்ந்தார். இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசைக் கருவி, இந்திய நரம்பிசைக் கருவிகளில் கடுமையான பயிற்சி பெற்றார். இவர் இந்திய பாரம்பரிய இசை, ஒடியா இசை, சித்தார் ஆகியவற்றில் உத்கலா இசை மற்றும் நடனப் பள்ளியிலிருந்து இளநிலைப் பட்டம் பெற்றார். இவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும், இவரது சொந்த ஊர் ஒடிசாவின் எல்லையாக இருந்ததால் இவரால் ஒடியா மொழியைப் பேச முடியும். பட்டப்படிப்பு முடிந்ததும், வாய்ப்புகளைத் தேடி சென்னைக்குச் சென்றார். [3]
தொழில்[தொகு]
இயக்குனர் ஒய். ஆர். சுவாமி, 1966ஆம் ஆண்டில் வெளியான தனது கட்டாரி வீரா படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார். இப்படத்தில் ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் பாடல்கள் பிரபலமடைந்தன. [3]
ஒரு இசையமைப்பாளராக, இவர் கன்னடத் திரைப்பட ஒலிப்பதிவில் ஒடியா நாட்டுப்புற இசையை கலந்தார். சிப்பாய் ராமு (1972), பிரேமதா கனிகே (1976), ஷங்கர் குரு (1978), தர்மசரே (1979), ரவிச்சந்திரா (1980), காமனா பில்லு (1983), ரத சப்தமி (1986), நஞ்சுண்டி கல்யாணா (1989), ஹிருதயா ஹாதித்து (1991) ஜீவனா சைத்ரா (1992) போன்ற பிரபல படங்களுக்கு இசையமைத்தார். இவர் அடிக்கடி ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படங்களுக்கு பல பாடல்களை பின்னணி-பாடினார். சி. அஸ்வத் , மஞ்சுளா குருராஜ் [3] எஸ்பி Balasubrahmanyam போன்ற பிரபல பாடகர்களுடனும் இவர் பணியாற்ரியுள்ளார். திரைப்படம் அல்லாத பக்திப் பாடல்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். [4] ஜீவனா சைத்ரா படத்தில் இடம்பெற்ற "நாதமையா" பாடலுக்கு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை ராஜ்குமார் பெற்றார். [5] உபேந்திர குமார்-ராஜ்குமார் கலவையின் பெரும்பாலான பாடல்களுக்கு சி. உதயசங்கர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். [6]
இவரது இசையில் மாண்டலினும் சித்தாரும் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும் இவர் காஃபி இராகத்தை மிகவும் விரும்பினார். பிரேமதா கனிகே படத்தில் இடம்பெற்ற "இது யாரு பரேதே கதயோ" என்ற பாடல் இந்த இராகத்தை அடிப்படையாகக் கொண்டது.
இவர், கன்னடத் திரைப்பட நடிகை ஹெச். பி சரோஜாவின் சகோதரி ஹெச். பி கீதாவை மணந்தார். [3]
இறப்பு[தொகு]
உபேந்திர குமார் 24 சனவரி 2002 அன்று பெங்களூரில் மஞ்சள் காமாலை காரணமாக தனது 60 வயதில் இறந்தார்.
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Another composer bids goodbye". ourkarnataka.com.
- ↑ "Remembering Upendra Kumar". The New Indian Express. 24 July 2009. 12 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Srinivasa, Srikanth (3 February 2002). "Immortal in his melodies". Deccan Herald. 2 June 2002 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ramakrishnan, Deepa H. (26 September 2020). "Ever popular, the devotionals SPB sang". The Hindu (ஆங்கிலம்). 12 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Vijayasarathy, R. G. (17 April 2006). "The best songs of Rajkumar". rediff.com. 12 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Deepak, S. N. (23 April 2016). "His voice lives on". Deccan Herald (ஆங்கிலம்). 12 October 2020 அன்று பார்க்கப்பட்டது.