உபேந்திரகிஷோர் ராய் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபேந்திரகிஷோர் ராய் சௌத்ரி
உபேந்திரகிஷோர் ராய் சௌத்ரி
பிறப்பு(1863-05-12)12 மே 1863 [1]
மோஷுவா, கிசோர்கஞ்ச் மாவட்டம் வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது வங்காளதேசம்)
இறப்பு20 திசம்பர் 1915(1915-12-20) (அகவை 52)
கிரீடிக், பிரித்தானிய இந்தியா
(now in சார்க்கண்டு, இந்தியா)
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர், ஓவியர்
வாழ்க்கைத்
துணை
பிதுமுகி தேவி ( துவாரகநாத் கங்குலியின் மகளும் கடம்பினி கங்கூலியின் வளர்ப்பு மகள்)

உபேந்திரகிஷோர் ராய் சவுத்ரி (Upendrakishore Roy Chowdhury) (12 மே 1863 - 20 டிசம்பர் 1915) அல்லது காமதரஞ்சன் ராய் என்பவர் ஓர் பெங்காலி எழுத்தாளரும், ஓவியருமாவார். சோட்டோடர் ஷெரா பிகன் ரோச்சோனா ஷாங்க்கோலன் என்ற புத்தகத்தை இவர் எழுதினார். இவர், இந்தியாவின் பிரம்ம சீர்திருத்தவாதியான துவாரகநாத் கங்குலியின் மருமகன். இவர் ஒரு தொழில்முனைவோராகவும் இருந்தார். வண்ண அச்சிடலை வங்காளத்துக்கு அறிமுகப்படுத்திய முதல் நபர் இவர்தான். இவர், சந்தேஷ் என்ற முதல் வண்ணக் குழந்தைகள் பத்திரிகையை 1913இல் தொடங்கினார்.

வாழ்க்கை[தொகு]

தனது மனைவி, ஆறு குழந்தைகளுடன் ராய்.

உபேந்திரகிஷோர் ராய், 12 மே 1863 இல் வங்காளத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் ( இப்போது கிசோர்கஞ்ச் மாவட்டம்,வங்காளதேசம் ) மோஷுவா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இவர் தனது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை கொல்கத்தாவில் கழித்தார். இவர் 20 டிசம்பர் 1915 இல் தனது 52 வயதில் இறந்தார். [note 1] [2]

குடும்பம்[தொகு]

இவரது தந்தை காளிநாத் ராய் ஆங்கிலம், பாரசீக மொழிகளிலும், பாரம்பரிய இந்திய மற்றும் ஆங்கிலோ-இந்திய சட்ட அமைப்புகளிலும் நிபுணராக இருந்தார். பாரசீக மொழியில் எழுதப்பட்ட பழைய நிலப் பத்திரங்களை விளக்குவதற்கும், இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரித்தானிய சட்ட அமைப்பிலிருந்து சிறந்த ஒப்பந்தத்தைப் பெற நில உரிமையாளர்களுக்கு உதவுவதற்கும் அவர் ஒரு சிறந்த நிபுணராக இருந்தார். அவர் செல்வந்தராக இருந்ததால் இரண்டு யானைகளை வாங்க முடிந்தது.

உபேந்திரகிஷோரின் மூத்த மகள் சுகலதா ராவ் ஒரு சமூக சேவகரும், குழந்தைகள் புத்தக எழுத்தாளரும், அலோக் என்ற செய்தித்தாளின் ஆசிரியரும் ஆனார். அவர் ஷிஷு-ஓ-மெட்ரி மங்கல் கேந்திரோ (குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நலன்புரி மையம்) , ஒரிசா நாரி சேவா சங்கம் ஆகியவற்றை நிறுவினார். [3] பெங்காலி கவிஞரும், கதை எழுத்தாளருமான சுகுமார் ரே இவரது மூத்த மகனாவார்.

பணி[தொகு]

தெற்காசியாவில் முதன்முதலில் வண்ணத்த்தில் அச்சிடும் நவீன அச்சிடும் தயாரிப்புகளை உபேந்திரகிஷோர் அறிமுகப்படுத்தினார். தனது புத்தகங்களுக்கான விளக்கப்படங்களுக்கான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள இவர் பிரிட்டனில் இருந்து புத்தகங்கள், இரசாயனங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்தார். பின்னர், 1895ஆம் ஆண்டில், யு. ரே அண்ட் சன்ஸ் என்ற வணிகத்தை உருவாக்கினார். இப்பணிகள் குறித்த பல தொழில்நுட்பக் கட்டுரைகள் பிரிட்டனில் இருந்து வெளியிடப்பட்ட பென்ரோஸ் ஆண்டு தொகுதிகளில் வெளியிடப்பட்டன.[4][5][6]

குறிப்புகள்[தொகு]

  1. Modern Review gives 1862 as the year of his birth. The Satyajit Ray Society states it is 1863. Banglapedia says it is 10 May 1863.

மேற்கோள்கள்[தொகு]

  1. Raychowdhury, Hitendrakishore (1984). Upendrakishore O Moshua Ray Poribaarer Golposholpo. Firma KLM Private Limited. பக். 1. 
  2. "The Late Mr. U. Ray". Modern Review XIX (1): 103–105. January 1916. https://babel.hathitrust.org/cgi/pt?id=uc1.b2867428;view=1up;seq=131. 
  3. Sarker, Sushanta (2012). "Rao, Shukhalata". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Rao,_Shukhalata. 
  4. http://www.worldcat.org/title/essays-on-half-tone-photography-a-facsimile-of-the-essays-as-they-appeared-in-penroses-pictorial-annual/oclc/908703157&referer=brief_results
  5. "A man of primary colours". The Telegraph. https://www.telegraphindia.com/1130509/jsp/opinion/story_16873675.jsp. 
  6. url=http://streetsofcalcutta.com/absu-an-unique-photowalk/ பரணிடப்பட்டது 2018-01-08 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]