உபுட் குரங்கு காடு

உபுட் குரங்கு காடு (ஆங்கிலம்: Ubud Monkey Forest; இந்தோனேசியம்: Mandala Suci Wenara Wana) என்பது இந்தோனேசியா, பாலி, கியான்யார் பிராந்தியம், உபுட் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வனக் காப்பகம்; கோயில் வளாகம்; மற்றும் குரங்குகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயற்கைச் சரணாலயம் ஆகும்.[1]
உள்ளூர் பாலி மக்களால் இந்தக் குரங்குகள் புனிதமான உயிர்ப்பொருட்களாகக் கருதப்படுகிறது. இந்த குரங்குகளின் சரணாலயம், பாலினிய கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தக் குரங்குக் காடு 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் காடு ஆன்மீக சக்திகளின் இருப்பிடமாகவும்; மற்றும் பாதுகாவல் ஆவிகளின் புனித இடமாகவும் கருதப்படுகிறது.[2]
புனித விலங்குகளாகக் காணப்படும் குரங்குகள்; உயிர்த்தன்மை மற்றும் இயற்கைத் தன்மை ஆகிய இரண்டையும் அடையாளப் படுத்துகின்றன என்றும்; மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஒரு தனித்துவமான தொடர்பை வளர்க்கின்றன என்றும் பாலி மக்கள் நம்புகின்றனர்.[2]
பாலினிய நீண்ட வால் குரங்குகள்
[தொகு]
இந்தச் சரணாலயத்தில் சுமார் 1260 பாலினிய நீண்ட வால் மக்காவ் குரங்குகள் (Long-tailed Macaque Monkeys) வாழ்கின்றன. அவை 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:[3]
- கோயில் குழு - (Temple Group)
- செலாத்தான் குழு - (Selatan Group)
- புதிய வனக் குழு - (New Forest Group)
- மத்திய குழு - (Central Group)
- கிழக்கு குழு - (East Group)
- மிச்செலின் குழு - (Michelin Group)
- உத்தாரா குழு - (Utara Group)
- ஆசிரம குழு - (Ashram Group)
- அத்தாப் குழு - (Atap Group)
- கல்லறை குழு - (Cemetery Group)
வயதின் அடிப்படையிலும் குரங்குகள் பிரிக்கப்பட்டுள்ளன:
- 63 ஆண் குரங்குகள்
- 34 இளம் ஆண் குரங்குகள்
- 219 பெண் குரங்குகள்
- 29 இளம் பெண் குரங்குகள்
- 167 இளம் குட்டிகள் 1 (2–3 வயது)
- 118 இளம் குட்டிகள் 2 (1–2 வயது)
- 63 குட்டிகள் (5–12 மாதங்கள்)
- 56 பால் குடிக்கும் குட்டிகள்
பொது
[தொகு]உபுட் குரங்கு காடு, உபுட்டில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000–15,000 பார்வையாளர்கள் உபுட் குரங்கு காடுகளுக்கு வருகிறார்கள். உபுட் குரங்கு காடு 12.5 எக்டேர் காடுகளில் 186 வகையான தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 3 கோயில்களையும் கொண்டுள்ளது.[4]
- புரா தாலெம் அகோங் பத்தாங்தேகால் கோயில் (Pura Dalem Agung Padangtegal)
- புனித வசந்த கோயில் (Holy Spring Temple)
- பிரஜாபதி கோயில் (Prajapati Temple)
இந்தக் காடு பத்தாங்தேகால் சமூகத்திற்குச் சொந்தமானது; மற்றும் மண்டலா சூச்சி வெனாரா வன நிர்வாகத்தால் (Mandala Suci Wenara Wana Management) நிர்வகிக்கப்படுகிறது. புனித இடத்தைப் பாதுகாப்பதும், உபுட் குரங்கு காடுகளை ஒரு பன்னாட்டுச் சுற்றுலா தலமாக மேம்படுத்துவதும் நிர்வாகத்தின் நோக்கமாகும்.[4]
உள்ளூர் சமூகத்தின் ஆன்மீக வாழ்க்கையில் கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் பாலி மக்களின் கலை மரபில் குரங்கும் அதன் புராணங்களும் முக்கியமானவை என கருதப்படுகின்றன.
காட்சியகம்
[தொகு]- உபுட் குரங்கு காடு காட்சிப் படங்கள்
பொதுவகத்தில் உபுட் குரங்கு காடு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ubud, Bali, Indonesia - Inside The Sacred Monkey Forest Sanctuary - The Sacred Monkey Forest Sanctuary contains 27 acres of protected grounds". LADYHATTAN. 20 April 2017. Retrieved 7 March 2025.
- ↑ 2.0 2.1 "Monkey Forest Ubud holds a significant history intertwined with Balinese culture. Dating back to the 14th century, it has been regarded as a sacred place, housing spiritual forces and guardian spirits". Monkey Forest Ubud (in ஆங்கிலம்). Retrieved 7 March 2025.
- ↑ "Long-Tailed Macaque | Attractions". Monkey Forest Ubud (in ஆங்கிலம்). Retrieved 2023-11-13.
- ↑ 4.0 4.1 "Ubud Monkey Forest, this 28 acre nature reserve houses over 600 Crab-eating Macaaque (Macaca fascicularis) divided into four distinctive groups around the complex". Minority Nomad. Retrieved 7 March 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் உபுட் குரங்கு காடு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Tourism resource about the monkey forest, nature reserve and hindu temple complex in Ubud, Bali, Indonesia
- A wild-long tailed macaque monkey has adopted an abandoned kitten at Ubud's Monkey Forest in Bali
- Photographs of Bali and Monkey Forest in Ubud by Jonathan Flaum
- Ubud Monkey Forest FAQs and safety advice
- Ultimate guide to behaving and making friends with the monkey in Ubud, Bali
- Precautions To Take While Visiting Ubud Monkey Forest, Bali
- [1][2]
- Ubud Culture Tour
8°31′7.76″S 115°15′30.18″E / 8.5188222°S 115.2583833°E
- ↑ Rai, Made (August 19, 2016). "Ubud Tour - Wonderful Bali Tour". Wonderful Bali Tours (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2016-08-19.
- ↑ "Ubud Tour - Wonderful Bali Tour" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2016-08-19.