உள்ளடக்கத்துக்குச் செல்

உபுட்

ஆள்கூறுகள்: 8°30′24.75″S 115°15′44.49″E / 8.5068750°S 115.2623583°E / -8.5068750; 115.2623583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபுட்
Ubud
Hubut
உபுட் குரங்கு வனத் தெரு
உபுட் குரங்கு வனத் தெரு
உபுட் is located in இந்தோனேசியா
உபுட்
பாலி தீவில் உபுட் நகரம்
ஆள்கூறுகள்: 8°30′24.75″S 115°15′44.49″E / 8.5068750°S 115.2623583°E / -8.5068750; 115.2623583
நாடு இந்தோனேசியா
மாநிலம் பாலி
பிராந்தியம்கியான்யார் பிராந்தியம்
மாவட்டம்உபுட் மாவட்டம்
(Ubud District)
பரப்பளவு
 • மொத்தம்42.38 km2 (16.36 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்74,800
 • அடர்த்தி1,800/km2 (4,600/sq mi)
 [1]
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8

உபுட் (ஆங்கிலம்; இந்தோனேசியம்: Ubud; பாலினியம்: ᬳᬸᬩᬸᬤ᭄) என்பது இந்தோனேசியா, பாலி, கியான்யார் பிராந்தியத்தில் (Gianyar Regency); நெல் வயல்கள் மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகளின் மையத்தியில் அமைந்துள்ள ஒரு கலைப் பண்பாட்டு நகரம் ஆகும்.

சில நூற்றாண்டுகளாகக் கலைப் பண்பாட்டு மையமாகத் திகழும் இந்த நகரம், பெரிய அளவிலான சுற்றுலாத் துறையை உருவாக்கியுள்ளது. இந்த நகரம் மட்டும், தென்பசார் பெருநகரப் பகுதியின் (Greater Denpasar) வடக்குப் பகுதியை உருவாக்குகிறது. பாலியில் இந்தப் பகுதி சர்பகீதா (Sarbagita) என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாகப் பார்க்கும் போது, உபுட் என்பது ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இதை கெச்சமத்தான் (Kecamatan) என்று அழைக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உபுட் நகரத்தின் மக்கள்தொகை 74,800; அதன் பரப்பளவு 42.38 கிமீ2.[2] உபுட் தேசா எனும் கிராம மையப் பகுதி 11,971 மக்கள்தொகையையும் 6.76 கிமீ2 பரப்பளவையும் கொண்டுள்ளது,[1] ஒவ்வோர் ஆண்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெறுகிறது.[3]

உபுட் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதியானது, பெரும்பாலும் பண்ணைகள், நெற்பயிர் வயல்கள், வேளாண் வனவியல் தோட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் இடங்களால் ஆனது. 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, தென்பசார் மாநகரத்தைக் காட்டிலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உபுட் நகரத்திற்கு வருகை தந்துள்ளனர்.[4]

வரலாறு

[தொகு]
1912-இல் உபுட் சந்தைக் காட்சி
உபுட் அரண்மனையின் அரங்கு; 1647-இல் கட்டப்பட்டது
அரச முறை இறுதிச் சடங்கு; மற்றும் தகன விழா (2005)

எட்டாம் நூற்றாண்டின் புராணக்கதையின் வழியாக, ஜாவானிய பாதிரியார் ரிஷி மார்கண்டியா (Rsi Markandya) என்பவரைப் பற்றி தெரிய கூறுகிறது. அவர் உபுட் காம்புகான் பகுதியில், இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தியானம் செய்தார்.

தற்போது அந்த இடம் பாலி இந்துக்களுக்கு ஒரு புனிதமான இடமாக உள்ளது. பின்னர் அவர் உபுட் பள்ளத்தாக்கு தரையில் குனோங் லெபா கோயிலை (Gunung Lebah Temple) நிறுவினார். அந்த இடம் தற்போது ஒரு புனிதத் தலமாக உள்ளது.[5]

கியான்யார் மன்னர்

[தொகு]

இந்த நகரம் முதலில் மருத்துவ மூலிகைகள் மற்றும் தாவரங்களின் முக்கிய இடமாக இருந்தது; உபுட் என்ற பெயர் பாலினிய சொல்லான உபாட் (Ubad) என்பதிலிருந்து வந்தது.[5]

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உபுட் நகரம், பாலியின் தெற்கு மாநிலங்களில் மிகவும் சக்திவாய்ந்த கியான்யார் மன்னருக்கு (Gianyar Regency) விசுவாசமாக இருந்த நிலப்பிரபுக்களின் இடமாக மாறியது. இந்தப் பிரபுக்கள் சுக் (Suk) எனும் பாலினிய சத்திரிய சமூகப் பிரிவைச் (Balinese Kshatriya) சேர்ந்தவர்கள்; மற்றும் கிராமத்தின் உள்ளூர்க் கலைகளுக்கு முதன்மை ஆதரவாளர்களாகவும் இருந்தனர்.[5]

பாலி குண்டுவெடிப்புகள், 2002

[தொகு]

2002-ஆம் ஆண்டில், பயங்கரவாத குண்டுவெடிப்புகள் (2002 Bali Bombings) பாலி முழுவதும் சுற்றுலாத் துறையில் சரிவுகளை ஏற்படுத்தின. அவற்றில் இருந்து மீண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[6]

பாலி தீவின் முக்கியப் பொருளாதார உயிர்நாடியான சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் வகையில், உபுட் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் விழா எனும் எழுத்தாளர் விழா (Ubud Writers and Readers Festival) உருவாக்கப்பட்டது.

சாலைகள்

[தொகு]

உபுட் நகரத்தில் ஜாலான் ராயா உபுட் (Jalan Raya Ubud) என்பது முக்கியச் சாலையாக விளங்குகிறது. ஜாலான் ராயா என்றால் சாலை என்று பொருள்படும். இந்தச் சாலை நகர மையத்தின் வழியாக கிழக்கு-மேற்காகச் செல்கிறது.

குரங்கு காட்டுச் சாலை (Jalan Monkey Forest);[7] மற்றும் அனுமான் சாலை (Jalan Hanoman) ஆகிய இரண்டு நீண்ட சாலைகளும் உபுட் முதனமைச் சாலையில் இருந்து பிரிந்து தெற்கு நோக்கிச் செல்கின்றன.

இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்

[தொகு]

இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[8]

காட்சியகம்

[தொகு]
  • உபுட் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 2021.
  2. "How Ubud became the holistic heart of Asia". SBS. 2016-02-02. https://www.sbs.com.au/topics/life/health/article/2016/02/01/how-ubud-became-holistic-heart-asia. 
  3. "2017, KUNJUNGAN WISATAWAN KE GIANYAR CAPAI 3,8 JUTA". Tribunnews. 2018-04-19. http://www.balipost.com/news/2018/04/19/43324/2017,Kunjungan-Wisatawan-ke-Gianyar...html. 
  4. Postman, Alex. "Finding the Bali You Came For". Condé Nast Traveler (in ஆங்கிலம்). Retrieved 2019-10-30.
  5. 5.0 5.1 5.2 Picard (1995)
  6. "Ubud Food Festival 2019 to promote Indonesia's culinary identity". The Jakarta Post (in ஆங்கிலம்). Retrieved 2019-10-30.
  7. "2017, KUNJUNGAN WISATAWAN KE GIANYAR CAPAI 3,8 JUTA". Tribunnews. 2018-04-19. http://www.balipost.com/news/2018/04/19/43324/2017,Kunjungan-Wisatawan-ke-Gianyar...html. 
  8. "Undang-Undang Republik Indonesia Nomor 23 Tahun 2014 tentang Pemerintah Daerah". Law இல. 23 of 2014. House of Representatives.
  9. "Undang-Undang Republik Indonesia Nomor 32 Tahun 2004 tentang Pemerintah Daerah". Law இல. 32 of 2004. House of Representatives.

சான்றுகள்

[தொகு]
  • Picard, Kunang Helmi (1995) Artifacts and Early Foreign Influences. From Oey, Eric, ed. (1995). Bali. Singapore: Periplus Editions. pp. 130–133. ISBN 962-593-028-0.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபுட்&oldid=4222022" இலிருந்து மீள்விக்கப்பட்டது