உள்ளடக்கத்துக்குச் செல்

உபரிசர வசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபரிசர வசு
குழந்தைகள்பிரகத்திரன், பிரத்தியகிரகன், குசாம்பு, மாவெல்லன். யதுநபன், மத்ஸ்சயன்
நூல்கள்புராணங்கள், மகாபாரதம்
அரசமரபுசந்திர குலம்

உபரிசர வசு (Uparichara Vasu) (சமசுகிருதம்:|उपरिचरवसु), இந்து சமய புராணங்களில் கூறப்படும் சந்திர குல மன்னர் ஆவார்.[1]கிருதியின் மகனான உபரிசர வசு சேதி நாட்டை ஆண்டான். இந்தினின் நண்பனான உபரிசர வசு, விஷ்ணுவின் பரம பக்தன் என புராணங்கள் கூறுகிறது. [2]இவனது பெருமைகளை மகாபாரதம் விரிவாக கூறுகிறது.

பெயர்க்காரணம்

[தொகு]

மன்னர் உபரிசிர வசுவின் இயற்பெயர் வசு என்பதாகும். இந்திரனால் இம்மன்னருக்கு வானத்தில் செல்லும் தேர் வழங்கப்பட்டதால் இவனுக்கு உபரிசர வசு எனப்பெயராயிற்று.[3]

தொன்ம வரலாறு

[தொகு]

புராணங்கள்

[தொகு]

ஸ்கந்த புராணம் மற்றும் வாயு புராணங்களின் கூற்றுப்படி, உபரிசர வசு மிகவும் பக்தியுள்ள ஒரு மன்னர். அவர் வானத்தில் தனது தேரில் பறந்து செல்ல முடியும். வேதத்தில் அஜ எனும் யாகம் எவ்வாறு செய்வது என்பது குறித்து தேவர்கள் மற்றும் ரிஷிகள் இடையே ஒரு சர்ச்சை எழும்போது, அவர்கள் உபரிசர வசுவின் நடுவர் மன்றத்திற்குச் செல்ல முடிவு செய்தனர். மன்னர் உபரிசிர வசு மன்றத்தில் அஜ யாகத்தில் தானியங்களைப் பயன்படுத்தி செய்யப்பட வேண்டும் என்று முனிவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தேவர்களோ ஆடு போன்ற விலங்குகளைப் பயன்படுத்தி அஜ யாகம் செய்யப்பட வேண்டும் என்று தேவர்கள் வலியுறுத்துகிறார்கள். உபரிசிர வசு அகிம்சைக்கு எதிராக, தேவர்களுக்கு ஆதரவாகப் பேசியதால், கோபமுற்ற ரிஷிகள் உபரிசிர வசுவை பாதாள லோகத்தில் வீழக்கடவது எனச் சபித்தனர்.[4]விஷ்ணுவின் ஆணைப்படி, கருடன், உபரிசர வசுவை பாதாள லோகத்திருந்து மீட்டு சொர்க்கதிற்கு அழைத்துச் சென்றார்.

ஸ்கந்த புராணத்தின் கூற்றுப்படி, மன்னர் உபரிசர வசு, ஒரு முறை தன் முன்னோர்களின் மனதால் பிறந்த அச்சோதா என்ற மகளையும், அத்ரிகா என்ற அரம்பையைக் கண்டதால் தண்டிக்கப்பட்டார் என்று கூறுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் தந்தை மற்றும் மகளாகக் கருதுவதால், அவர்கள் பூமியில் பிறக்கும்படி பித்ருக்களால் சபிக்கப்படுகிறார்கள்.[5]

மகாபாரதம்

[தொகு]

உபரிசிர வசுவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த சுக்மதி எனும் ஆற்றை, கோலாகலம் எனும் மலை காம வசத்தால் நதியின் ஓட்டத்தை தடுத்து நின்றது. அந்த நதிப் பெண் சுக்மதி மன்னர் உபரிசர வசுவிடம் தனது பிரச்சனையை முறையிட்டது. உபரிசர வசு நதியின் ஒட்டத்தை தடுத்து நின்ற கோலாகம் மலையை இரண்டாகப் பிளக்கச் செய்து, நதியின் தடையற்ற ஓட்டத்திற்கு வழிவகுத்தான். மலையும், நதியும் ஒன்றிருந்த காலத்தில், சுக்மதி நதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தது. ஆண் குழந்தை வளர்ந்து மன்னர் உபரிசிர வசுவின் படைத்தலைவர் ஆனார். பெண் குழந்தை கிரிகாவை மன்னர் உபரிசர வசு மணந்து கொண்டார்.[6]

உபரிசர வசுவின் மனைவி கிரிகா, நீராடி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தாங்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு இது ஒரு நல்ல நேரம் என்று தனது கணவரிடம் தெரிவித்தார். அந்நேரத்தில் மன்னர் உபரிசிர வசுவின் பித்ருக்கள் சந்திக்கிறார்கள். அவர்கள் தாங்கள் உண்ண சில மான்களை வேட்டையாடி கொண்டு வருமாறு உபரிசிர வசுவை பணித்தனர்.

மன்னரும் தனது அழகான மனைவியைப் பற்றி நினைத்துக் கொண்டே வேட்டையாட காட்டிற்குச் செல்கிறார். காம உணர்வு மிகுந்து, விந்து வெளியேறிய போது, விந்துவை ஒரு இலையில் கட்டி ஒரு பருந்து மூலம் தனது மனைவியிடம் சேர்க்க பணிக்கிறார். பருந்து வானத்தில் செல்லும் போது, அதை மற்றொரு பருந்து தாக்குகிறது. மேலும் விந்து யமுனை நதியில் விழுகிறது. விந்துவை ஒரு மீன் விழுங்குகிறது. ஒரு மீனவர் அம்மீனை பிடித்து வயிற்றை வெட்டும்போது, உள்ளே ஒரு மனித ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையைக் காண்கிறார். குழந்தைகள் உபரிசார வாசுவிடம் கொண்டு வரப்படுகிறார்கள், அவர் ஆண் குழந்தையைத் தத்தெடுத்து, அவருக்கு மத்ஸ்சயன் என்று பெயரிடுகிறார். பெண் குழந்தை மீனவரால் தத்தெடுக்கப்பட்டு, மச்சகந்தி என்று பெயரிடப்படுகிறார்.[7][8][9][10]இந்த சத்தியவதிக்கும், பராசருக்குப் பிறந்தவரே வியாசர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vyasa's Mahabharatam (in ஆங்கிலம்). Academic Publishers. 2008. p. 43. ISBN 978-81-89781-68-2.
  2. Books, Kausiki (2021-10-24). Skanda Purana: Vaishnava Khanda: Vasudeva Mahatmya: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. p. 28.
  3. Bhaṭṭācārya, Tārānātha TarkaVācaspati (1873) [1962]. "उपरिचर" [Uparichara] (PDF). वाचस्पत्यम् (बृहत् संस्कृताभिधानम्) [Vācaspatyam: A Comprehensive Sanskrit Lexicon.]. The Chowkhamba Sanskrit Series Work No. 94 (in சமஸ்கிருதம்). Vol. 2. Varanasi: Caukhambā. p. 331. तुष्टेन शक्रेण तस्मै आकाशगं विमानं दत्तं तत्र चरणादुपरिचरनामेत्युक्तं
  4. Books, Kausiki (2021-10-24). Vayu Purana Part 1: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. p. 23.
  5. www.wisdomlib.org (2020-03-01). "Uparicara Vasu Attains Liberation [Chapter 7]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-12-26.
  6. Alf Hiltebeitel (2011). Dharma: Its Early History in Law, Religion, and Narrative. USA: Oxford University Press. pp. 354–355. ISBN 978-0195394238. Retrieved 2020-10-09.
  7. The Mahabharata: Volume 1 (in ஆங்கிலம்). Penguin UK. 2015-06-01. p. 88. ISBN 978-81-8475-388-2.
  8. Debroy, Bibek (2016-09-09). Harivamsha (in ஆங்கிலம்). Penguin UK. p. 439. ISBN 978-93-86057-91-4.
  9. உபரிசரன் (எ) வசு! | ஆதிபர்வம் - பகுதி 63அ
  10. சாபம் விலகிய மீன்! | ஆதிபர்வம் - பகுதி 63ஆ

வெளி இணைப்புகள்

[தொகு]
  • The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose, Bharata Press, Calcutta (1883–1896)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபரிசர_வசு&oldid=4410564" இலிருந்து மீள்விக்கப்பட்டது