உபரசங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1. துத்தம், பால்துத்தம் இவற்றைப் பொடி செய்து தனித்தனி முடிச்சு கட்டிச் சுண்ணாம்பு நீரில் தோலாந்திரமாக எரிக்கவும்.
2. கிருஷ்ண அப்பிரகம்: இதனை வேண்டிய அளவுக்குக் காடியில் அரைத்துத் தெளிய வைத்து இறுத்து பின்பு கழுநீரில் கழுவி 10க்கு 1 பங்குக் கொடிவேலி வேர் சோ்த்து அரைத்துக் குடுவையில் இட்டு வாய் மூடிச்சீலை செய்து புடமிடவும்.

3. வெள்ளை அப்பிரகம்: உலையில் பழுக்கக் காய்ச்சி பாலில் போட்டு ஆறிய பின் இதழ் இதழாகப் பிரித்துச் சிறுகீரைச்சாற்றில் 1 நாள் ஊறவைத்து எடுக்கவும்.

4. காந்தம் : வரகு வைக்கோலில் சேர்த்து எரித்தெடுக்கவும்.
5. கற்புர சிலாசத்து : கற்றாழைச்சாற்றில் 3 மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.
6. ஆமை ஓடு : நெருப்பு அனலில் சுட்டு எடுக்கவும்.
7. மான் கொம்பு : சிறு துண்டுகளாக நறுக்கிக் கோ நீரில் 3 நாள் ஊற வைக்கவும்.
8. சங்கு : பசு மோரில் 7 நாள் ஊற வைக்கவும்.
9. பு நாகம் : (மண் புழு) சட்டியில் போட்டு,பசும் பால் இட்டு 8 மணிநேரம் வைக்க மண்கக்கி விடும். நீரில் அலம்பி எடுக்கவும்.
10. பவளம் : எலுமிச்சம் பழச்சாற்றில் 1 நாள் வைத்து எடுக்கவும்.
11. அன்னபேதி : புது ஓட்டிலிட்டுச் சிவக்க வறுத்தெடுக்கவும்.
12. உவா் மண் : நல்ல நீர் விட்டுக் கரைத்துத் தெளிவை இறுத்து நீா் சுண்ட வெயிலில் உலர்த்தவும்.
13. பவளப்புற்று : ஆவின் பாலில் 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
14.காவிக்கல் : இளநீரில் அரைத்து கரைத்து வடித்து அகலப் பீங்கான் தட்டுகளில் வார்த்து வெயிலில் உலர்த்தவும்.
15. மயிலிறகு : சட்டியிலிட்டுக் கரியாகும்படி எரிக்கவும்.
16. கிளிஞ்சல் : உவர்மண் கரைத்த நீரில் 6 மணிநேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபரசங்கள்&oldid=2322458" இருந்து மீள்விக்கப்பட்டது