உபங்கி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபங்கி ஆற்றின் வடிநிலத்தைக் காட்டும் வரைபடம்
பாங்குயி நகரின் புறத்தே காணப்படும் உபங்கி ஆறு

உபங்கி ஆறு (The Ubangi River) (/juːˈbæŋɡi//ˈbæŋɡi/ ) என்பது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள காங்கோ ஆற்றின் வலக்கரையில் உள்ள மிகப் பெரிய துணை ஆறாகும். இது இம்போமௌ மற்றும் உலே ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் துவங்கி மேற்கு புறமாக ஓடி மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கும் காங்கோ மக்களாட்சிக் குடியரசிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகிறது. அடுத்தடுத்து இது தென் மேற்காக வளைந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரான பாங்குயி வழியாக ஓடி தெற்காக திரும்பி காங்கோவின் ஜனநாயக குடியரசுக்கும் காங்கோ குடியரசுக்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகிறது. இந்த உபங்கி ஆறு இறுதியாக லிரங்காவிலுள்ள காங்கோ ஆற்றோடு இணைகிறது.

உபங்கி் ஆற்றின் நீளம் 1,060 கி.மீ(660 மைல்). இந்த ஆறானது இதன் மிகப் பெரிய துணை ஆறான உலி ஆறோடு சேர்கிறது. இதன் மொத்த நீளம் 2,270 கிலோமீட்டர் (1410மைல்) ஆகும். இதன் ஆற்று வடிநிலம் அளவு 772,800 சதுர கி.மீ அல்லது 298,400 மைல்களாகும். இது பாங்குயி ஆற்றிலிருந்து விநாடிக்கு 800 கன மீட்டர் அல்லது 28,000 கன அடி முதல் விநாடிக்கு 11,000 கன மீட்டர் அல்லது 390,000 கன அடி வரை தண்ணீரை வெளியேற்றுகிறது. இதன் சராசரி நீர் வெளியேற்றம் 4,000 கன மீட்டர் அல்லது 140,000 கன அடியாகும்.[1]

உபங்கி ஆறு நீட்டிக்கப் பட்ட தீவுகள் மூலம் கிளைகளாகப் பிரிக்கப் படுகிறது சில இடங்களில் இவை வரையறுக்கப்பட்ட பாறைகள் மூலம் பாங்குயி போன்ற விரைவு நீரோட்டங்களை உருவாக்குகிறது. இது கடலோடு சங்கமிக்கும் இடத்தில் பெரும் மாற்றத்திற்குள்ளாகிறது. அங்கு காணப்படும் மணல் திட்டுகள் மூலம் அதிகமாகப் பிரிக்கப் படுகிறது. இவற்றின் சில கிளைகள் நீரோட்டங்கள் மூலம் மறிக்கப்படுகிறது. 16 டிகிரி கிழக்கு நிலநிரைக்கோட்டிலிருந்து உபங்கி ஆற்றிற்கு இடைப் பட்ட பகுதி தட்டையாகவும் ஈரப்பதமுள்ள சதுப்பு நிலப் பள்ளத் தாக்குகளாகவும் பிளவு பட்ட பகுதிகளாகவும் கிழக்கு மற்றும் தென் கிழக்கு மலைகளிலிருந்து படிப் படியாக காங்கோ ஆறு நோக்கி கீழே இறங்கும். இந்த பகுதியின் அதிகப் படியான இடங்கள் நில நடுக் கோட்டின் பொழில்களால் மூடப் பட்டுள்ளது மற்றும் சங்கா ஆற்றின் வடகிழக்கு மர்றும் தென்மேற்கு பகுதிகள் அவற்றின் வெள்ளத்தால் நிரந்தரமாக மூடப் பட்டுள்ளது. இந்த ஆறு கான்கோ ஆறோடு இர்பு என்ற கிராமத்தில் இர்பு கால்வாயின் வாய் பகுதியில் இணையும். ஏப்ரல் மாதக் கடைசியிலிருந்து ஜூன் மாத கடைசி வரை காங்கோ ஆறு உபங்கி ஆற்றின் நீரை தள்ளும். இதனால் இந்த ஆறு போக்கு வரத்திற்கு உதவியாக இருக்கும்[2]

இந்த ஆற்றின் கரை ஈரமான சேறு நிறைந்த சதுப்பு நிலங்களாகக் காணப் படுகிறது. மற்றப் பகுதிகளில் மழைக் காடுகளும் அவற்றில் அநேக விதமான் கவன விலங்குகள்ளும் காணப் படுகின்றன. இங்கு காணப்படும் கடின சூழல் காரணமாக மக்கள் நெருக்கம் இங்கு குறைவு. இந்த ஆற்றுப் பகுதியிலே வாழும் பழங்குடி மக்கள் ம்புடி ஆவர். இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இங்குள்ள நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்தனர் மற்றும் தங்கள் மேம்பட்ட வாழ்விற்காக மீன் பண்ணையையும் உருவாக்கி வாழ்ந்து வந்தனர். இப்பொழுதும் இந்த ஆற்றுக் கரையில் வாழும் பழங்குடியினர் பழங்காலத்தில் தங்கள் மூதாதையரால் உருவாக்கப் பட்ட ஆழமாக வேரூன்றிய பண்பாடுகளை மாற்ற மனதில்லாமல் தங்கள் மூதாதையரால் உருவாக்கப் பட்ட பாதையிலே நடந்து வாழ்ந்து வருகின்றனர். 1960களில் இங்கு உருவாக்கப் பட்ட நீர்மின்திறன் திட்டம் இன்னும் பணியில்தான் உள்ளது, இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆற்று வடிகால்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தும் ஒரு திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது இது நிறைவேறினால் இங்கு விவசாயம் மற்றும் மீன் பிடித்தல் மேம்படும். இந்த ஆற்றை மையமாகக் கொண்டு ஏற்றப் படும் திட்டங்கள் வெற்றி பெற்றால் இவை பெரிய புரட்சிகரமான மாற்றத்தை தென் ஆப்பிரிக்க நாடுகளில் உருவாக்கும். இந்த மாற்றங்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற தலைப்பிலிருந்து தொழிற் முன்னேற்றம் பெற்ற நாடுகள் என்று பெயர் பெறும். {{http://allafricafacts.com/river-ubangi/}}

இது காங்கோ ஆற்றோடு இணையும் போது பாங்குயி மற்றும் பிராசவில்லிக்கு இடையே படகு போக்குவரத்த்தின் நாடியான ஒரு இடத்தை இந்த ஆறு வழங்குகிறது.

இதன் உற்பத்தி மூலத்திலிருந்து பாங்குயிக்கு 100 கி.மீ(62மைல்) கீழே உபங்கி ஆறானது முழுவதுமாக காங்கோ ஆற்றில் தன்னை வெறுமை ஆக்கும் வரை மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கும் காங்கோ ஜனநாயக குடியரசுக்கும் எல்லையை நிர்ணயிக்கிறது. 1960 இல் உபங்கி ஆறிலிருந்து நீரை திசை மாற்றி சாரி ஆற்றிற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது. இந்த சாரி ஆறானது தனது நீர் முழுவதையும் சட் ஏரிக்குக் கொண்டு செல்லும். இத் திட்டத்தின் படி உபங்கி ஆற்றின் நீரைக் கொண்டு சட் ஏரியை புத்துயிர் பெறச் செய்யவும் அதன் மூலம் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடித் தொழிலையும் லட்சக் கணக்கான மத்திய ஆப்பிரிக்கர்களையும் ஷகிலன்களின் விவசாயத்தையும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆற்று வடி நிலங்களுக்கு இடையே போக்குவரத்தை உருவாக்கும் திட்டத்தினை நைஜீரிய பொறியாளர் ஜெ. உமோலு மற்றும் பின்ஃபிகாவில் உள்ள இத்தாலிய நிறுவனத்தின் மூலம் முன்மொழியப்பட்டது.[3][4][5][6][7]

சான்றுகள்[தொகு]

http://allafricafacts.com/river-ubangi/

  1. Bossche, J.P. vanden; G. M. Bernacsek (1990). Source Book for the Inland Fishery Resources of Africa, Volume 1. Food and Agriculture Organization of the United Nations. p. 338. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-5-102983-1.
  2. "Ubangi River | river, Africa", Encyclopedia Britannica (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-24
  3. "Journal of Environmental Hydrology, Vol. 7, 1999" (PDF).
  4. "Africa at a watershed: Africa is a parched continent. Three decades of grand plans to water its fields and fill its taps have failed. What next? Some experts say that water from equatorial Zaire could make the Sahel bloom. Others want to abandon such eng".[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Umolu, J. C.; 1990, Macro Perspectives for Nigeria’s Water Resources Planning, Proc. of the First Biennial National Hydrology Symposium, Maiduguri, Nigeria, pp. 218–262 (discussion of Ubangi-Lake Chad diversion schemes)
  6. The Changing Geography of Africa and the Middle East By Graham Chapman, Kathleen M. Baker, University of London School of Oriental and African Studies, 1992 Routledge.
  7. "Combating Climate Induced Water And Energy Deficiencies In West Central Africa (Ubangi - Lake Chad Inter-basin transfer)". Archived from the original on 2012-08-28. பார்க்கப்பட்ட நாள் 2018-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபங்கி_ஆறு&oldid=3545081" இலிருந்து மீள்விக்கப்பட்டது