உன்னிச் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தாவரவில் பெயர் லாண்ட்டானா காமிரா. வெர்பினேசி குடும்பத்தைச் சார்ந்தது.ஜமைக்காவைத் தாயகமாகக் கொண்டது. உன்னிச் செடி, கொடி போன்ற உயரமான செடியாகும். இலை எதிரிலை அடுக்கு அமைப்புடையது. மஞ்சரி தண்டு நுனி ஸ்பைக் மஞசரியாகும். மலர் முழுமையானவை. புல்லிவட்டம், சிறிய கிண்ணம் போன்றது. அல்லிவட்டம் ஐந்து அல்லிகள் இணைந்த ஈடுதடு வகையாகும். மகரந்ததாள் நான்கு அல்லி இணைந்தவை. மேல் மட்டச் சூல்பை கொண்டது. கனி சதைக்கனி ட்ரூப் எனப்பபடும். உள்ளோட்டுக் கனியாகும். விதை எண்டோஸ்பெர்ம் அற்றது. உன்னிப்பழம் உண்ணத்தக்கது. செடியின் பட்டைகள் திசுக்களைச் சுருங்கச் செடியின் பட்டைகள் திசுக்களைச் சுருங்கச் செய்வதால் கொப்புளம், கட்டி முதலியவற்றிற்குப் பயன்படுத்துவர். உடல் வலி போக்கவும் ஏற்றது. இலையின் கசாயம் முடக்குவாதம், மலேரியா காய்ச்சல் முதலியவற்றைக் குணப்படுத்தும். இச்செடியிலிருந்து கிடைக்கும் அல்காய்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். பகுதி ஒட்டுண்ணியான உன்னிச் செடி சந்தன மரத்திற்கு மிகவும் சிறந்த ஓம்புயிரித் தாவரம் ஆகும். இலைகளில் லான்ட்டடீன் எ என்னும் நச்சுப் பொருள் உள்ளது. இது இலைகளை உண்ணும் ஆடுகளின் நாடித் துடிப்பை அதிகப்படுத்தும்.

 அறிவியல் களஞ்சியம் தொகுதி ஐந்து பக்கம் 788 - 7990
 முதற்பதிப்பு - 1988
 மறுபதிப்பு - 2007

"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னிச்_செடி&oldid=2376575" இருந்து மீள்விக்கப்பட்டது