உன்னிகிருஷ்ணன் புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உன்னிகிருஷ்ணன் புதூர் (ஆங்கிலம்:Unnikrishnan Puthur) ( ஜூலை 15, 1933 - ஏப்ரல் 2, 2014) ஒரு மலையாள மொழி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமாவார். [1] உன்னிகிருஷ்ணன், சுமார் 700 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் 29 சிறுகதைத் தொகுப்புகள், 15 புதினங்கள், கவிதைகளின் தொகுப்பு மற்றும் சுயசரிதைகளை வெளியிட்டுள்ளார். பாலிக்கல்லு புதினத்திற்காக கேரள சாகித்ய அகாதமி விருது இவருக்கு 1968 இல் வழங்கப்பட்டது. அனுபவங்கள் நேர் ரெகக்கால் என்ற புதினத்திற்காக 2010ஆம் ஆண்டிடில் ஓடக்குழல் விருதைப் பெற்றார்.

வாழ்க்கை[தொகு]

இளமைப்பருவம்[தொகு]

உன்னிகிருஷ்ணன், கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்திலுள்ள, எங்கண்டியூர் கிராமத்தில், சுள்ளிபரம்பில் சங்குன்னி நாயர் மற்றும் புதூர் ஜானகி அம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். இவர், சாவக்காடு வாரியப் பள்ளியில் படித்தார். பாலக்காடு, அரசு விக்டோரியா கல்லூரியில், தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இணையாக இரண்டு ஆண்டுகள் செய்தித்தாள் நிருபராக பணியாற்றினார்.

மெற்கொண்ட பணிகள்[தொகு]

பின்னர் இவர் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கோயில் தேவஸ்வம் அலுவலகத்தில் ஒரு எழுத்தராக சேர்ந்தார். 1987 ஆம் ஆண்டில் குருவாயூர் தேவஸ்வம் நூலகத்தின் நிறுவனப் பிரிவின் தலைவராக ஓய்வு பெற்றார். இவர், ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும் சமதர்மவாதியாகவும் இருந்தார். கோயில் ஊழியர்களின் பிரதிநிதியாக கோயில் நிர்வாகக் குழுவிற்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.  

சாகித்ய பிரவர்தகா கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், கேரள சாகித்ய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும், கேரள சங்கீதா நாடக அகாடமியின் பொதுக்குழுவின் உறுப்பினராகவும், பக்தபிரியா என்றப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் நிறுவனர் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

   

இறப்பு[தொகு]

இவர் ஏப்ரல் 2, 2014 அன்று சாவக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். [1] இவர் சில காலமாக வயது மூப்பு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். [2] இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

எழுத்துப்பணி[தொகு]

உன்னிகிருஷ்ணன் புதூர் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவான சுவை கொண்ட நவீன சகாப்தத்தின் எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். அவரது படைப்புகள் ஜலசமாதி, தர்மசக்கரம், கஜராஜன் குருவாயூர் கேசவன், புதூரின்டே கதைகள், தாளவிரல், ஆகாசவாணி, குட்டசம்மதம், ஆத்மவிபூதி, ஆனப்பாகா, அம்ருதமதனம், கரையுண்ண கல்பாடுகள், நாஷ்டாபேட்டா பொன்னோணம், கம்சன், திலான் தாமசின்டே ஞானம், சுந்தரி சேரியம்மா மற்றும் கல்பகபூமாலா (கவிதைகளின் சேகரிப்பு) ஆகியவை அடங்கும்.

இவரது புதினங்கள் மற்றும் சிறுகதைகள், பிரபலமான குருவாயூர் கோயிலுக்கு கட்டுப்பட்ட சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களின் கதைகளை விவரிக்கின்றன, வெளியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்ட யாத்ரீக நகரத்தின் சலசலப்பில் அவை கவனிக்கப்படவில்லை. இவரது பாலிக்கல்லு மற்றும் ஆனப்பாகா போன்ற சிறுகதைகள் தான் பணக்கார கோயில்களுக்கு ஆடம்பரமான பணிகளைச் செய்வதன் மூலம், யானைப் பாகன்கள் மற்றும் கவர்ச்சியான பெண்கள் என ஒரு வாழ்க்கையை வாழ விதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. மேலும் இவர், 32 ஆண்டுகளாக பணியாற்றிய குருவாயூர் கோயிலைச் சுற்றியுள்ள சடங்குகளையும் வாழ்க்கையையும் நாழிகமணி கதையில் பதிவு செய்கிறார். பாலிக்கல்லு சிறுகதையும் இந்த அனுபவத்திலிருந்து வெளிப்பட்டதாகும்.

நிலப்பிரபுத்துவ சகாப்தத்தில் நாயர் தாராவதின் (மூதாதையர் வீடு) வளர்ச்சியையும் முறிவையும், இவரின் "ஆட்டுக்கட்டில் சிறுகதை ஆவணப்படுத்துகிறது. பஞ்சாரா மாவு வீணு, பாகம், ஓழிவுதினம், கோபுரவெளிச்சம், ஈரமுண்டும் நனைஞ்ச கணுக்காலும், நக்சத்திரகுஞ்சு, பாவக்கல்யாணம், மற்றும் கதிஞ்சூல் பிரசன்னம்" போன்ற சிறுகதைகள், மலையாள நாயர் பெண்களின் குடும்பச் சூழலில் எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றி உன்னிகிருஷ்ணன், ஒரு எளிய பாணியில் எழுதுகிறார். இவரது எழுத்துக்களில் கேசவதேவ் மற்றும் பொன்குன்னம் வர்கி ஆகியோரின் எதிரொலிகள் காணப்படுகிறது. மலையாள எழுத்தாளர் இராஜலட்சுமியைப் பற்றி புதூரின் மத்ருபூமி வார இதழில் எழுதப்பட்ட இவரது நினைவுக் குறிப்புகள் கேரள இலக்கிய வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைத் தூண்டின. [3]

எழுதிய புதினங்கள் மற்றும் சிறுகதைகள்[தொகு]

 • பாலிக்கல்லு
 • ஜலசமாதி
 • தர்மசக்கரம்
 • கஜராஜன் குருவாயூர் கேசவன்
 • புதூரின்டே கதைகள்
 • நாழிகமணி
 • தாளவிரல்
 • ஆகாசவானி
 • குட்டசம்மதம் ( ஒப்புதல் வாக்குமூலம் )
 • ஆத்மவிபூதி
 • ஆனப்பாகா
 • ஆட்டுக்கட்டில்
 • அம்ருதமதனம்
 • மறக்கணும் பொறுக்கணும்

குறிப்புகள்[தொகு]