உனாய் கணவாய்
உனாய் கணவாய் | |
---|---|
ஏற்றம் | 3,252 மீ (10,669 அடி)[1] |
அமைவிடம் | வர்தகு மாகாணம், ஆப்கானித்தான் |
ஆள்கூறுகள் | 34°28′01″N 68°19′44″E / 34.467°N 68.329°E |

உனாய் கணவாய் (Unai Pass) அல்லது ஓனாய் கணவாய் என்பது ஆப்கானித்தானின் வர்தகு மாகாணத்திலுள்ள[2] மலைப்பாதையாகும். காபுலின் தென்மேற்கில் உள்ள புவியியல் இருப்பிடம் காரணமாக இது முக்கியத்துவம் வாய்ந்தது. காபுல் ஆற்றின் மேல்பகுதியான கணவாய் வழியாக சர்சாஷ்மா ஆறு பாய்கிறது.[3] காபூல் ஆறு மற்றும் சர்சாஷ்மாவின் துணை ஆறான மைதான் ஆறு, சுமார் 3,300 மீட்டர்கள் (10,800 அடி) உயரத்தில் கணவாயில் எழுகிறது.[4]
இதன் முக்கியத்துவம் காரணமாக, இந்த கணவாய் ஆப்கானித்தானில் மோதலில் ஈடுபட்டதற்கான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1929 இல், முகம்மது மிர் பத் (1901-1964) என்பவர் அபிபுல்லா கலக்கானியின் படைகளை அந்த ஆண்டின் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தோற்கடித்த மூன்று தளபதிகளில் ஒருவர்.[5] 1979 வசந்த காலத்தில் சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கானிய பொதுவுடைமை ஆட்சிக்கு எதிரான போரின் போது முஜாஹிதீன் உனாய் கணவாயை கைப்பற்றினர்.[3] 1983 ஆம் ஆண்டில், கசாரா அல்-நஸ்ர் குழு சியாசங்கில் உள்ள அரகாத் இஸ்லாமியரையும், கணவாய்க்கு அருகிலுள்ள பகுதியையும் தாக்கியது. [6]
2008 ஆம் ஆண்டில், பொதுப்பணித்துறை அமைச்சகம் காபுல் நெடுஞ்சாலையின் 136 கிலோமீட்டர்களை மறுசீரமைக்கத் தொடங்கியது.[7] இத்தாலிய அரசாங்கத்தின் 36 மில்லியன் யூரோ நிதியுதவியுடன். திட்டத்தின் முதல் கட்டம், 2008 இல் 54 கிலோமீட்டர் நீளமுள்ள மண் சாலையை மைதான் சரில் தொடங்கி உனாய் கணவாய் நோக்கிச் சீரமைக்கத் தொடங்கியது.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ "Unai Pass, Afghanistan - Geographical Names, map, geographic coordinates". geographic.org. 26 September 2005. Retrieved 1 July 2021.
- ↑ "A Geography of Afghanistan". Omaha, Nebraska: Center for Afghanistan Studies, University of Nebraska. 1976. p. 37.
{{cite web}}
: Unknown parameter|authors=
ignored (help) - ↑ 3.0 3.1 "One Land, Two Rules (9): Delivering public services in insurgency-affected Jalrez district of Wardak province". Afghan Analysts Network. 16 December 2019. Retrieved 30 April 2020.
- ↑ "The Kabul Times Annual". Kabul Times Publishing Agency. 1970. p. 270.
- ↑ Adamec, Ludwig W. (2012). Historical Dictionary of Afghanistan. Scarecrow Press, Inc. p. 289. ISBN 9780810878150.
- ↑ Tanwir, Dr. M. Halim (2013). Afghanistan: History, Diplomacy and Journalism, Volume 2. p. 540. ISBN 9781479797394.
- ↑ "More than 600 vulnerable families in Maidan Wardak district receive food aid". United Nations Assistance Mission in Afghanistan. 8 February 2010. Retrieved 30 April 2020.
- ↑ "Job description". Devex.com. Retrieved 30 April 2020.