உனலாசுக்கா தீவு

ஆள்கூறுகள்: 53°40′24″N 166°38′54″W / 53.67333°N 166.64833°W / 53.67333; -166.64833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உனலாசுக்கா
Unalaska
உள்ளூர் பெயர்: Nawan-Alaxsxa[1]
தீவின் வரைபடம்
உனலாசுக்கா Unalaska is located in Alaska
உனலாசுக்கா Unalaska
உனலாசுக்கா
Unalaska
அலாசுக்காவில் உனலாசுக்காவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்அலூசியத் தீவு தீவுக்கூட்டம், அமெரிக்கா மற்றும் உருசியா
ஆள்கூறுகள்53°40′24″N 166°38′54″W / 53.67333°N 166.64833°W / 53.67333; -166.64833
தீவுக்கூட்டம்பொக்சு தீவுகள்
முக்கிய தீவுகள்உனலாசுக்கா
பரப்பளவு1,051 sq mi (2,720 km2)
நீளம்128 km (79.5 mi)
அகலம்56 km (34.8 mi)
உயர்ந்த ஏற்றம்6,680 ft (2,036 m)
உயர்ந்த புள்ளிமக்கூசின் மலை
நிர்வாகம்
ஐக்கிய அமெரிக்கா
மக்கள்
மக்கள்தொகை5,638
அடர்த்தி1.83 /km2 (4.74 /sq mi)

உனலாசுக்கா (Unalaska, Nawan-Alaxsxa,[1] உருசியம்: Унала́шка) என்பது அமெரிக்க மாநிலமான அலாசுக்காவில் அமைந்துள்ள ஓர் உயர் தீவு ஆகும். இது அலூசியன் தீவுகளில் பொக்சு தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. இத்தீவின் நிலப்பரப்பு 1,051 சதுர மைல்கள் (2,720 கிமீ2) ஆகும். இதன் நீளம் 79.4 மைல் (127.8 கிமீ), அகலம் 34.7 மைல் (55.8 கிமீ) ஆகும். இத்தீவின் நகரம் உனலாசுக்கா தீவின் ஒரு பகுதியையும், அயலில் உள்ள அமக்நாக் தீவின் முழுப் பகுதியையும் கொண்டுள்ளது. அமக்நாக் தீவில் இடச்சுத் துறைமுகம் அமைந்துள்ளது. உனலாசுக்கா தீவின் மக்கள்தொகை 2000 ஆம் ஆண்டு தகவலின்படி (அமக்நாக் தீவைத் தவிர்த்து) 1,759 ஆகும்.

உனலாசுக்கா தீவு பொக்சு தீவுகள், அலூசியன் தீவுகளில் இரண்டாவது பெரிய தீவு ஆகும். உனலாசுக்காவின் கடற்கரை ஏனைய பெரிய அலூசியன் தீவுகளை விட தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது, இங்கு ஏராளமான நுழைவாயில்களும், மூவலந்தீவுகளும் உள்ளன. இந்த ஒழுங்கற்ற கடற்கரை பீவர் கழிமுகம், உனலாசுக்கா விரிகுடா, மக்கூசின் விரிகுடா ஆகிய ஆழமான விரிகுடாக்களாலும், மற்றும் பல சிறிய விரிகுடாக்களாலும் உடைக்கப்பட்டுள்ளது. உனலாஸ்காவின் நிலப்பரப்பு சமதளமற்ற கரடுமுரடானதும், மலைகளால் மூடப்பட்டும் இருக்கும், அத்துடன் ஆண்டின் பெரும்பகுதியில், உயரமான பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும்.[2] உனலாசுக்காவின் மிக உயர்ந்த புள்ளி மக்கூசின் மலை செயற்பாட்டில் உள்ள ஓர் எரிமலை ஆகும்.

உனலாசுக்கா என்பது தீவின் அலூசிய மொழிப் பெயர் ஆகும். இப்பெயரின் தோற்றம் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன; பெரும்பாலும், இப்பெயர் உருசிய மொழிச் சொல்லான ஊனலாசுக்கா என்பதிலிருந்து உருவானது, இது முக்கிய நிலப்பகுதிக்கு அருகில் உள்ள நவன் அலாசுக்காசின் அலூட் மொழிச் சொல்லின் தழுவலாகும்.

வரலாறு[தொகு]

Cape Aiak, on the south coast of Unalaska Island in July

உனங்கன் அல்லது அலூட்டுகள் என அழைக்கப்படும் பூர்வீக உனலாசுக்க மக்கள், தீவில் குறைந்தது 10,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.[3] 1741 ஆம் ஆண்டு விட்டஸ் பெரிங் என்ற மேற்கத்தியரால் இத்தீவு முதன்முதலில் காணப்பட்டது.[4] 1759 அளவில், உனலாசுக்கா தீவில் குறைந்தது 3,000 அலூட்டுகள் வாழ்ந்தனர். உருசியக் குடியேற்றம் 1759 இல் ஆரம்பமானது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்குடியேற்றம் நான்கு வணிகக் கப்பல்களுடன் சேர்ந்து அலூட்டுகளால் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதல்களில் 162 உருசியக் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் 1764 இல் உருசியர்களால் மீட்கப்படும் வரை தங்களைத் தாங்களே பாதுகாக்க முடிந்தது. இந்த நிகழ்வு சுமார் 5,000 அலியூட்களின் உயிரைப் பறித்த பூர்வீக மக்களுக்கு எதிரான இரத்தக்களரிப் பழிவாங்கலைத் தூண்டியது. 1787 வாக்கில், பல அலூட் கடல் நாய் வேட்டைக்காரர்கள் உருசிய அமெரிக்க நிறுவனத்தால் அடிமைப்படுத்தப்பட்டனர். 1840 வாக்கில், 200 முதல் 400 அலியூட்டுகள் மட்டுமே இன்னும் தீவில் வாழ்ந்தனர்.[5]

1788 ஆம் ஆண்டு எசுட்டெபான் ஒசே மார்ட்டினெசு, கோன்சலோ லோபஸ் டி காரோ ஆகியோரின் பயணம் அலாசுக்காவின் கடற்கரையை உனலாசுக்கா தீவு வரை ஆய்வு செய்தது, இது எசுப்பானியா இதுவரை ஆய்வு செய்ததில் மிகத் தொலைவில் உள்ள மேற்குப் பகுதியைக் குறிக்கிறது.[6] இதே ஆண்டில், ஆங்கிலேய ஆய்வாளர் ஜேம்ஸ் குக் இத்தீவிற்கு வந்தார், இத்தீவின் பெயரை அவர் ஊனலாசுக்கா என்று பதிவு செய்தார்.[7]

1988 மே 31 அன்று மாஸ்கோவில், அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன், 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்கர்களும், உருசியர்களும் இத்தீவில் சந்தித்ததை ஆரம்பகால அமெரிக்க-உருசிய நட்பின் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார்.

2004 திசம்பர் 8 இல், மலேசியாவின் சரக்குக் கப்பல் செலென்தாங் ஆயு பெரும் எண்ணெய்க் கசிவால் இத்தீவில் மூழ்கியது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bergsland, K. (1994). Aleut Dictionary. Fairbanks: Alaska Native Language Center.
  2. "US Coast Pilot 9, Chapter 7, Aleutian Islands" (PDF). Archived from the original (PDF) on 2010-05-27. பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  3. "Unalaska".
  4. "Unalaska: The US Island Once Ruled by Russia". 26 July 2018.
  5. "Unalaska |".
  6. Hayes, Derek (1999). Historical Atlas of the Pacific Northwest: Maps of exploration and Discovery. Sasquatch Books. pp. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57061-215-3.
  7. Encyclopædia Britannica Third Edition, 1797 Volume 13 article Oonalashka, and Volume 5 article Cook, James.
  8. "Grounding of Malaysian-flag Bulk Carrier M/V Selendang Ayu on North Shore of Unalaska Island, Alaska" (PDF). NTSB. 26 September 2006. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உனலாசுக்கா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனலாசுக்கா_தீவு&oldid=3739606" இலிருந்து மீள்விக்கப்பட்டது