உந்துபொறி



உந்துபொறி (locomotive) அல்லது தொடருந்துப் பொறி ஒரு தொடர்வண்டிக்கு நகரும் ஆற்றலை வழங்குகின்ற ஓர் உந்து ஆகும். ஆங்கிலச் சொல்லான லோகோமோடிவ் என்பது இலத்தீன மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.[1] 19ஆம் நூற்றாண்டில் இயக்கப்பட்ட நிலைத்த நீராவி பொறிகளிலிருந்து நகரும் தன்மையுடைய இத்தகைய பொறிகளை வேறுபடுத்த பயன்படுத்தப்பட்டது.
உந்துபொறிக்கு தானாகவே ஏற்றிச் செல்லும் சுமை எதுவும் கிடையாது. இதன் ஒரே செயல்பாடு இருப்புப் பாதைகளில் தொடர்வண்டிகளை இழுத்துச் செல்வதாகும். மாறாக சில இருப்புப் பாதை வண்டிகள் சுமைகளை ஏற்றுவதோடு தங்களை தாங்களே இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன. இவை பொதுவாக உந்துபொறிகள் என அழைக்கப்படுவதில்லை; பல்லுறுப்பு தொடர்வண்டி, இயக்கி வண்டி அல்லது தண்டு தானுந்து எனப்படுகின்றன. இவை மாநகரப் போக்குவரத்திற்கும் அலுவலர் ஆய்வுகளுக்கும் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. சரக்குகளை இவை பொதுவாக ஏற்றிச்செல்வதில்லை.
வழமையாக, உந்துபொறிகள் தொடர்வண்டியை முன்னாலிருந்து இழுக்கின்றன. கூடுதல் பளுவைச் சுமக்க சரக்கத் தொடர்வண்டிகளில் இரண்டு உந்துபொறிகள் இணைக்கப்பட்டு முன்னால் உள்ளது இழுக்க பின்னால் உள்ளது தள்ள இயக்கப்படுகிறது. இவை இழு-தள்ளு வண்டிகள் எனப்படுகிறன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Locomotive". (etymology). Online Etymology Dictionary. Retrieved 2008-06-02.
வெளி இணைப்புகள்
[தொகு]- An engineer's guide from 1891
- Animated engines, Steam Locomotive பரணிடப்பட்டது 2008-10-10 at the வந்தவழி இயந்திரம்
- International Steam Locomotives பரணிடப்பட்டது 2010-02-18 at the வந்தவழி இயந்திரம்
- Turning a Locomotive into a Stationary Engine, Popular Science monthly, February 1919, page 72, Scanned by Google Books: http://books.google.com/books?id=7igDAAAAMBAJ&pg=PA72