உத்ரெக்ட் உடன்பாடு
உத்ரெக்ட்டில் ஏற்பட்ட அமைதி, நட்பு உடன்பாடுகள் | |
---|---|
1713இல் பெரிய பிரித்தானியாவிற்கும் எசுப்பானியாவிற்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் முதல் பதிப்பும் (இடது) இலத்தீனிலும் ஆங்கிலத்திலுமான பிந்தையப் பதிப்புகளும் | |
அமைப்பு | |
கையெழுத்திட்டது | 1713 |
இடம் | உத்ரெக்ட், ஐக்கிய மாகாணங்கள் |
கையெழுத்திட்டோர் | |
மொழிகள் | |
விக்கிமூலத்தில் முழு உரை | |
உத்ரெக்ட் உடன்பாடு (Treaty of Utrecht) எனவும் உத்ரெக்ட்டின் அமைதி (Peace of Utrecht) எனவும் அறியப்படுவது ஒற்றை ஆவணமாக இல்லாது தனித்தனியான அமைதி உடன்பாடுகளைக் குறிப்பிடுகின்றது; டச்சு நகரமான உத்ரெக்ட்டில் 1713ஆம் ஆண்டில் மார்ச்சு, ஏப்ரல் மாதங்களில் எசுப்பானிய மரபுரிமைப் போரில் ஈடுபட்ட பல ஐரோப்பிய அரசர்களிடையே இந்த உடன்பாடு ஏற்பட்டது. இவற்றில் எசுப்பானியா, பெரிய பிரித்தானியா, பிரான்சு, போர்த்துகல், சவாய் மற்றும் டச்சு குடியரசு முதன்மையானவர்களாவர். இந்த உடன்பாட்டால் மரபுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.
இந்த உடன்பாடுகள் ஒருபுறத்தில் பிரான்சின் பதினான்காம் லூயி, அவரது பேரன் எசுப்பானியாவின் பிலிப் V சார்பாளர்களுக்கும் மறுபுறத்தில் பெரிய பிரித்தானியாவின் ஆன், சார்தினியாவின் அமேடசு I, போர்த்துகல்லின் ஜான் V மற்றும் நெதர்லாந்தின் ஐக்கிய மாகாணங்களின் சார்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இந்த உடன்பாடுகளின்படி ஐரோப்பாவில் ஆதிக்க அரசியல் நடத்த விரும்பிய பிரான்சின் போர் முயற்சிகள் முடிவுக்கு வந்தன; தவிரவும் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.[1]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ R.R. Palmer, A History of the Modern World 2nd ed. 1961, p. 234.
வெளி இணைப்புகள்
[தொகு]- "The Treaties of Utrecht (1713)" Brief discussion and extracts of the various treaties on François Velde's Heraldica website, with particular focus on the renunciations and their later reconfirmations.
- Interpretation of parts of the treaty relating to Gibraltar www.gib-action.com/docs/utrecht.html