உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயில்
உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் காஞ்சிபுரம் நகரத்திற்கு தென்கிழக்கில் 27.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு நோக்கி அமைந்த இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவர் குழம்பேஸ்வரர்- அம்பாள் பிரம்மநாயகி எனப்படும் திருபுவன நாயகி ஆவார். கிபி 1133-1150 காலத்தில் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் குழப்பத்தைத் இக்கோயிலில் தீர்ந்ததாக தல புராணம் கூறுகிறது.
தங்கப் புதையல்
[தொகு]இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோயில் சிதிலமடைந்துள்ளது. எனவே அதனை இடித்து விட்டு, புதிய கோயிலை கட்டுவதற்கு நிலத்தை தோண்டும் போது ஒரு பெட்டி போன்ற அமைப்பில் தங்கப் புதையல் கிடைத்தது. அந்தப் புதையலில் 23 சிறிய தங்க சடை பில்லைகள், 7 பெரிய தங்க சடைபில்லைகள், 1 தஙக ஒட்டியாணம், 29 தங்க குண்டுமணிகள், 5 உடைந்த நிலையில் உள்ள தங்க ஆரங்கள், 1 சிவ பிறை, 3 தங்கத் தகடுகள் உள்ளிட்ட 565 கிராம் எடையுள்ள தங்க நகைகள் கிடைத்தது. அவற்றை வருவாய் துறையினர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த நகைகளில் பலவற்றில் செப்பு கலக்காத தூய தங்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.[1][2]
குடமுழுக்கு
[தொகு]பிப்ரவரி 2026ல் குழம்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்காக யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கைப்பற்றப்பட்ட புதையல் நகைகளை தொல்லியல் துறை ஆய்வு செய்ய நடவடிக்கை!
- ↑ உத்திரமேரூரில் உள்ள பழங்கால கோயிலில் தங்க புதையல் கண்டெடுப்பு... வருவாய்துறை, காவல்துறை விசாரணை!
- ↑ உத்திரமேரூர் ஸ்ரீ குழம்பேஸ்வரர் கோயில்
- ↑ உத்திரமேரூர் ஸ்ரீ குழம்பேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடக்கம்!