உள்ளடக்கத்துக்குச் செல்

உத்திரமேரூர் ஏரி

ஆள்கூறுகள்: 12°22′N 79°26′E / 12.37°N 79.44°E / 12.37; 79.44
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்திரமேரூர் ஏரி
அமைவிடம்உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்[1], தென்னிந்தியா
ஆள்கூறுகள்12°22′N 79°26′E / 12.37°N 79.44°E / 12.37; 79.44
வகைகுளம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு788 எக்டேர் (சுமார் 1947 ஏக்கர்கள்)
சராசரி ஆழம்2.5 மீட்டர் (8.202 அடி)

உத்திரமேரூர் ஏரி (Uthiramerur Lake) என்பது, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரின் வேடபாளையம் எனும் கிராமத்தின் அருகே பல்லவர் காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தடமாகும்.[2] உத்திரமேரூர் ஏரி (Uthiramerur Lake) என்பது, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரின் வேடபாளையம் எனும் கிராமத்தின் அருகே பல்லவர் காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தடமாகும்.[2]

பிறப் பெயர்கள்

[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியாக திகழும் இந்த ஏரியானது, பல்லவர் மன்னர்கள் ஆண்ட காலத்தில் (கி.பி. 715 முதல் 825 ஆம் ஆண்டுகளில்) வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு 'வைர மேக தடாகம்' என்ற பெயரும் உண்டு. உத்திரமேரூர்- மானாம்பதி சாலை இந்த உத்திரமேரூர் ஏரிக்கு குறுக்கே செல்வதால் 'பெரிய ஏரி', 'சித்தேரி' என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.[3]

அமைவிடம்

[தொகு]

பொதுவாக உத்திரமேரூர் ஏரி என்றும் மற்றும் வேதபாளையம் ஏரி என்றும் அழைக்கப்படும் இது, உத்திரமேரூர், வேடபாளையம் காட்டுப்பாக்கம், நீரடி, பூச்சேரி உள்ளிட்ட இந்த ஏரியின் சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களாகும். மேலும் குப்பந்தூர், மணித்தோட்டம், ஆங்கூர், வடவூர், நல்லூர், எஸ்.பி.சதம், பூர்ந்திகொல்லம், பட்டக்குளம், வல்லம்கொற்றை. மற்றும் தக்கநல்லூர் போன்ற கிராமங்களும் இந்த ஏரியை சுற்றியுள்ளன. இந்த ஏரி தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. புவியியல் ஒருங்கிணைப்புகள் அட்சரேகை: 12° 37'56.1” N; 12° 38'12.4” N; 12° 38'21.2” N; 12° 37'32.1” N மற்றும் தீர்க்கரேகை: 079° 44'27.8" E; 079° 44'32.5" E; 079° 44'33.3" E; 079° 43'22.7" E. சதுப்பு நிலம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல. இந்த நீர்த்தடம் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டலத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.[2]

தளத்தின் பண்புகள்

[தொகு]

உத்திரமேரூர் ஏரியின் பரப்பளவு - புவியிடங்காட்டியின் (GPS) ஆயத்தொலைவுகளின் அடிப்படையில், ஏரியின் பரப்பளவை 788 எக்டேர் (சுமார் 1947 ஏக்கர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏரி, 'குளம்' என்ற துணைப்பிரிவில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட (உள்நாட்டு) வகை நீர்த்தடத்தைச் சேர்ந்தது எனவும், இரண்டாம் நிலைத் தகவல்களின் அடிப்படையில், இந்த ஏரியின் சராசரி ஆழம் 2.5 மீட்டர்களாக உள்ளது எனவும் கருதப்படுகிறது. மேலும் இந்த ஏரியின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 29 முதல் 36 மீட்டர் வரை உள்ளது.[2]

நீர் நிலவரங்கள்

[தொகு]

இந்த ஈரநிலத்திற்கான நீரின் முக்கிய ஆதாரம், மழைப்பொழிவு மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து வழிந்து வரும் நீர் ஆகும். இந்த ஏரி பெரும்பாலும் மழைப்பொழிவு மற்றும் வழிந்தோடும் நீரைச் சார்ந்து இருப்பதால், இதில் உள்ள நீர் பெரும்பாலும் இடைப்பட்ட தன்மையுடையதாக உள்ளது. இந்த ஏரியில் இருந்து வரும் நீர், சுற்றியுள்ள வேளாண் நிலங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. மேலும் இந்த நீர் அப்பகுதியின் நிலத்தடி நீரை உயர்த்தவும், வழிந்தோடும் உபரி நீர் பாலாறு ஆற்றிலும் கலக்கிறது. நீரின் கார அமிலத்தன்மை (pH) காரத்தன்மை கொண்டதாகவும், அது 8.5 வரையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதிரி எடுக்கும் நேரத்தில் ஏரியில் உள்ள நன்னீரின் உப்புத்தன்மை 0.174 ppt ஆகப் பதிவு செய்யப்பட்டது. (0.174 ppt என்றால் ஒரு லிட்டர் (அல்லது கிலோகிராம்) தண்ணீரில் 0.174 கிராம் உப்பு மட்டுமே உள்ளது, இது மிகக் குறைந்த அளவு.) இந்த ஏரியில் மிதக்கும், நீரில் மூழ்கிய மற்றும் நீரில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் தாவரங்கள் மிகக் குறைவாகக் காணப்பட்டதால், இது மீசோட்ரோபிக் (Mesotrophic) நிலைக்கு நெருக்கமாக இருப்பது கண்டறியப்பட்டது. மீசோட்ரோபிக் என்பது ஒரு சுற்றுச்சூழல் நிலை, குறிப்பாக ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில், ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிரியல் உற்பத்தித்திறன் மிதமான அளவில் (இடைநிலையில்) இருப்பதைக் குறிக்கிறது). இந்த ஈரநிலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் வீட்டுக் கழிவுநீரையும், அருகிலுள்ள கிடங்குகளிலிருந்து வரும் சிறிய அளவிலான தொழிற்சாலைக் கழிவுகளையும் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இரா.ஜெயப்பிரகாஷ் (2023-08-05). "மழை வரும் முன்பு தூர்வாரப்படுமா? - காத்திருக்கும் உத்திரமேரூர் ஏரி". Hindu Tamil Thisai. Retrieved 2025-12-29.
  2. 2.0 2.1 2.2 2.3 "Criteria for wetland prioritization and frame work for wetland monitoring in the state of Tamil Nadu - Uthiramerur Lake - Page: 288" (PDF). tnswa.tn.gov.in (ஆங்கிலம்). 2022. Retrieved 2025-12-28.
  3. பல்லவர் காலத்தில் உத்திரமேரூரில் வெட்டப்பட்ட வைரமேக தடாகம் பற்றி தெரியுமா? - நியூஸ்18 தமிழ்நாடு - புதுப்பிக்கப்பட்டது: மார்ச்சு 12, 2023

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்திரமேரூர்_ஏரி&oldid=4432052" இலிருந்து மீள்விக்கப்பட்டது