உத்தராஞ்சல் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 30°19′19″N 78°01′36″E / 30.321915°N 78.026619°E / 30.321915; 78.026619
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தராஞ்சல் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைFor the excellence within "U"
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2003
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை “ஏ+” தரம்
வேந்தர்சிறீ ஜித்தேந்தர் ஜோசி
துணை வேந்தர்தரம் பூதீ[1]
அமைவிடம், ,
30°19′19″N 78°01′36″E / 30.321915°N 78.026619°E / 30.321915; 78.026619
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம், இந்திய வழக்குரைஞர் கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய மருந்தியல் குழுமம்
இணையதளம்https://uttaranchaluniversity.ac.in

உத்தராஞ்சல் பல்கலைக்கழகம் (Uttaranchal University), இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தேராதூனில், இந்தியத் தரைப்படை அகாதமிக்கு அருகில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் உத்தராகண்டம் மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்டது.[2][3] இது மாநிலப் பல்கலைக்கழகத்தின் சிறீ சுசீலா தேவி கல்வி அறக்கட்டளைச் சட்டம் மற்றும் AICTE உடன் இணைந்த பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 12(பி) ஆகியவற்றின் கீழ் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின்"ஏ+" தகுதியினைப் பெற்றுள்ளது.[4]

வரலாறு[தொகு]

சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளையான சுசீலா தேவி தொழில்சார் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தால் இப்பல்கலைக்கழகம் ஊக்குவிக்கப்படுகிறது. முதலில் இது தேராதூன் சட்டக் கல்லூரி துவங்கப்பட்டது. ஆனால் இது உத்தராஞ்சல் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது.

வளாகம்[தொகு]

உத்தராஞ்சல் பல்கலைக்கழகம் தூன் பள்ளத்தாக்கில் 170 ஏக்கர்கள் (69 ha) பரப்பளவில் அமைந்துள்ளது . இது உத்தரகாண்ட் பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பெரியது.

புகழ் மற்றும் தரவரிசை[தொகு]

இப்பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி, சட்டக் கல்லூரிகளுக்கான தரவரிசையில், இந்தியா டுடே 28வது இடத்தையும், தி வீக் 24வது இடத்தையும் வழங்கியுள்ளது.

உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

  • உத்தராஞ்சல் தொழில்நுட்ப நிறுவனம்
  • உத்தராஞ்சல் மேலாண்மை நிறுவனம்
  • சட்டக் கல்லூரி தேராதூன்
  • பயன்பாட்டு மற்றும் உயிர்அறிவியல் பள்ளி
  • வேளாண்மைப் பள்ளி
  • உத்தராஞ்சல் மருந்து அறிவியல் நிறுவனம்
  • லிபரல் கலைப் பள்ளி

வசதிகள்[தொகு]

பல்கலைக்கழகத்தில் ஆண், பெண் மாணவர்களுக்கு எனத் தனித்தனி விடுதி வசதி உள்ளது. பல்கலைக்கழகத்தில் மத்திய நூலகம் ஒன்றும் துறைகள் தோறும் நூலகங்களும் உள்ளன.

பல்கலைக்கழகத்தில் மத்திய நூலகம் மற்றும் துறை நூலகங்கள் உள்ளன. இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொழில்துறை தரநிலைகளின்படி வடிவமைக்கப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. சட்டக் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக பல்வேறு மாதிரி நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மென் திறன் வகுப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.

சட்ட சமூககங்கள்[தொகு]

சட்டக் கல்லூரி தேராதுன்/சட்டத் துறை- [5]

  • சட்ட உதவி மையம்
  • மாதிரி நீதிமன்றச் சமூகம்
  • விவாத சங்கம்
  • இளைஞர் நாடாளுமன்ற சங்கம்
  • வசுந்தரா - பசுமை சங்கம்
  • கலாச்சார சங்கம்
  • விளையாட்டு சங்கம்

உத்தராஞ்சல் தொழில்நுட்ப நிறுவனம்[6]

  • கணினி சங்கம்
  • உத்தராஞ்சல் பல்கலைக்கழக இயந்திரப் பொறியியல் குழுமம்
  • புவியியற்பியல் சமூகம்

உத்தராஞ்சல் மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம்[7]

  • நிதி குழுமம்
  • சந்தைப்படுத்தல் குழுமம்
  • கோடெக்ஸ் குழுமம்
  • மனித வள குழுமம்
  • வலைத்தள வடிவமைப்பு குழுமம்
  • பெருநிறுவன வள மையம்
  • உலகளாவிய மையம்
  • கலாச்சார மையம்
  • விளையாட்டுக் கழகம்
  • விருந்தோம்பல் மையம்
  • நிர்மான் மையம்

உத்தராஞ்சல் மருந்தியல் அறிவியல் நிறுவனம்[8]

  • மாணவர் சங்கம்
  • விளையாட்டுக் கழகம்
  • கலாச்சார குழுமம்

பயன்பாட்டு அறிவியல் மற்றும் உயிர் அறிவியல் பள்ளி[9]

  • யுரேகா: அறிவியல் குழுமம்
  • முடிவிலி மற்றும் அதற்கு அப்பால்
  • உணவு தொழில்நுட்ப குழுமம்

விவசாயப் பள்ளி- [10]

  • விரிவாக்க சேவை குழு
  • மாணவர் சங்கம்
  • கலாச்சார குழு
  • விளையாட்டுக் கழகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vice Chancellor's Message". Uttaranchal University. Archived from the original on 8 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 12 Jan 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Statutory Approvals".
  3. "UGC Approval".
  4. https://uttaranchaluniversity.ac.in/
  5. "Law College Dehradun".
  6. "Uttaranchal Institute of Technology". Archived from the original on 2022-02-20. பார்க்கப்பட்ட நாள் 2022-02-20.
  7. "Uttaranchal Institute of Management". Archived from the original on 2022-02-20. பார்க்கப்பட்ட நாள் 2022-02-20.
  8. "Uttaranchal Institute of Pharmaceutical Sciences".
  9. "School of Applied and Life Sciences".
  10. "School of Agriculture".

வெளி இணைப்புகள்[தொகு]