உத்தரப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர் | உ.த்தரப் பிரதேச கிராமப்புற மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (2005–2016) |
|---|---|
| குறிக்கோளுரை | sarve bhavantu sukhinaḥ sarve santu nirāmayāḥ |
| வகை | மாநிலப் பல்கலைக்கழகம் |
| உருவாக்கம் | 15 திசம்பர் 2005 |
| வேந்தர் | முதலமைச்சர் |
| துணை வேந்தர் | மருத்துவர் அஜய் சிங் |
| துறைத்தலைவர் | மருத்துவர் ஆதீசு குமார் |
கல்வி பணியாளர் | 226 |
| மாணவர்கள் | 3394 (2020)[1] |
| அமைவிடம் | சைபை, இட்டாவா மாவட்டம் , , India 26°57′39″N 78°57′38″E / 26.9608041°N 78.9606463°E |
| வளாகம் | நாட்டுப்புறம் |
| நிறங்கள் | |
| சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மருத்துவ ஆணையம், இந்தியப் பல் மருத்துவ மன்றம், இந்திய மருந்தியல் குழுமம், இந்திய செவிலிய மன்றம், சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் |
| இணையதளம் | www |
உத்தரப்பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Uttar Pradesh University of Medical Sciences) முன்னர் உ. பி. கிராமப்புற மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் இட்டாவா மாவட்டத்தில் சைபாயில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி பொதுப் பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது உ.த்தரப் பிரதேச கிராமப்புற மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (2005இல் நிறுவப்பட்டது) எனத் துவக்கப்பட்டு பின்னர் பெயர் மாற்றப்பட்டது.[3]
வரலாறு
[தொகு]2005ஆம் ஆண்டில், கான்பூரில் உள்ள சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி உ. பி. கிராமப்புற மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரப் பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள சைபை கிராமத்தில் நிறுவப்பட்டது. இது 15 திசம்பர் 2005 அன்று அறிவிக்கப்பட்ட உபிகிமஅநி & ஆ, சைபை சட்டம் 2005 முலம் நிறுவப்பட்டது. 2006இல் ஆண்டில் மாணவர் சேர்க்கைத் தொடங்கியது. 2011இல் முதுநிலை மருத்துவ கல்வித்திட்டமும், 2014இல் முதுநிலை பல் மருத்துவமும் தொடங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில் பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்புகளுடன் துணை மருத்துவம், செவிலியர் கல்லூரிகளும், 2015ஆம் ஆண்டில் இளநிலை பட்டம் படிப்புகளுடன் மருந்தியல் கல்லூரியும் தொடங்கப்பட்டன.
பிப்ரவரி 2015இல், உத்தரப்பிரதேச அரசு உ. பி. கிராமப்புற மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மேம்படுத்துவதன் மூலம் இடாவாவின் சைபாயில் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கியது. 4 பிப்ரவரி 2015 அன்று, மாநில சட்டமன்றம் "உத்தரப்பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சைபை, எடாவா மசோதா-2015" என்ற மசோதாவை நிறைவேற்றியது.[4] 2 மே 2016 அன்று இந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டு 5 சூன் 2016 அன்று பல்கலைக்கழகமாக மாறியது.[5]
பல்கலைக்கழகத்தில் பட்டம் நிறைவேற்றப்பட்டப் பிறகு, 2020ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புகள் தொடங்கப்பட்டன. 2023ஆம் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழகம் துணை மருத்துவ முநிகலை பட்டப்படிப்பைத் தொடங்கியது.[6][7]
2024ஆம் கல்வியாண்டில், பல்கலைக்கழகம் 4 சிறப்புத் திறன்களுடன் மருந்தகத்தில் முதுநிலைப் பட்டம் வழங்கப்படுகிறது.[8]
வழங்கப்படும் படிப்புகள்
[தொகு]இளநிலை படிப்புகள்
[தொகு]- இளநிலை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (MBBS)
- மருந்தியல் (B.Pharm)
- செவிலியம்
- மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்
- இயன்முறை மருத்துவம்
- படிமமாக்கத் தொழில்நுட்பம் மற்றும் நுட்பங்கள்
- பார்வை அளவையியல்[9]
முதுநிலை, சிறப்பு படிப்புகள்
[தொகு]சிறப்பு மருத்துவ படிப்புகளுடன் கூடிய முதுநிலை மருத்துவ படிப்புத் திட்டங்களையும் இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.[6] மருத்துவ முதுநிலை, முது நிலை அறுவையியலில் 112 இடங்களும், டி. என். பி. படிப்பில் 4 இடங்களும் மருத்துவ பீடத்தின் கீழ், எம். டி, பீரியடோண்டாலஜியில் 3 இடங்களும் பல் அறிவியல் பீடத்தின் கீழ் முதுநிலையில் 12 இடங்கள், பார்வை அளவியலில் 6 இடங்கள், முதுநிலை மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பத்தில் 6 இடங்களும் துணை மருத்துவ அறிவியல் பீடத்தின் 2 இடங்களும்.[7] முதுநிலை மருந்தியலில் 24 இடங்களும் உள்ளன.[8]
தேசிய தரவரிசை
[தொகு]இது 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த 125 மருந்தியல் கல்லூரிகளில் ஒன்றாகவும், மீண்டும் 2024ஆம் ஆண்டில் என். ஐ. ஆர். எஃப் ஆல் தரவரிசைப்படுத்தப்பட்டது.[10]
உத்தரப்பிரதேச அரசின் தரவரிசை முறையால் 'ஏ' என்ற மிக உயர்ந்த மதிப்பீட்டைப் பெற்ற இரண்டு மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் ஒன்றாகும்.[11]
வசதிகள்
[தொகு]
இப்பல்கலைக்கழகம் ஒரு முழுமையான மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி (முதுநிலை), மருத்துவ கல்லூரி, மருந்தியல் கல்லூரி, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 1050 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 150 படுக்கைகள் கொண்ட அதிர்ச்சி மற்றும் தீக்காய மையம் மற்றும் 528 படுக்கைகள் கொண்ட பெரும் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வருகிறது.[12][13][14]
750 கோடி செலவில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 300 படுக்கைகள் கொண்ட மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவ மருத்துவமனை உத்தரப்பிரதேச அரசால் நிறுவப்பட்டு வருகிறது.
கூட்டு முயற்சிகள்
[தொகு]- கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஊடுருவும் அல்லாத மருத்துவ சாதனங்களின் ஊக்குவிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்காக. வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தரத்தை மேம்படுத்துதல், தொடக்க நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பகிரப்பட்ட வளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது, ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் முக்கியமான சுகாதாரத் திட்டங்களில் கூட்டாக பங்கேற்றுவருகிறது.[15][16][17]
துணைவேந்தர்கள்
[தொகு]- அஜய் சிங் (5 ஆகத்து 2025-தற்போது வரை)
- பங்கஜ் குமார் ஜெயின் (6 திசம்பர் 2024-4 ஆகத்து 2025)[18]
- பிரபாத் குமார் சிங் (19 சனவரி 2022-5 திசம்பர் 2024)[19]
- இரமாகாந்த் யாதவ் (10 மே 2021-18 சனவரி 2022)[20][21]
- ராஜ் குமார் (1 சூன் 2018-9 மே 2021)[22][23]
- டி. பிரபாகர் (12 சூலை 2016-31 மே 2018)[24][25]
இணைவுக் கல்லூரிகள்
[தொகு]- மருத்துவக் கல்லூரி, 2005ஆம் ஆண்டில் உ. பி. கிராமின் ஆயுர்விக்ஞன் அவ்ம் அனுசந்தன் சன்ஸ்தான் (U.P. Rural Institute of Medical Sciences and Research ஆங்கிலத்தில்) என்ற பெயரில் நிறுவப்பட்டது. இது 2016 வரை சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.[26]
- பல் மருத்துவ கல்லூரி (முதுநிலை) 2014ஆம் ஆண்டில் 2 முதுநிலை இடங்களுடன் தொடங்கியது.[27]
- 2006ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டு 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட துணை மருத்துவ அறிவியல் மகாவித்யாலயா.[28]
- 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செவிலியர் கல்லூரி[29]
- சைபை மருந்தியல் கல்லூரி 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மற்ற கல்லூரிகளைப் போலல்லாமல், சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, இது 2015-16 கல்வியாண்டிற்கான உத்தரப் பிரதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.[30] இது உத்தரப்பிரதேச அரசால் இளநிலை மருந்தியல் படிப்பினை வழங்கும் நிதியுதவிப் பெறும் முதல் கல்லூரி ஆகும்.
பல்துறை ஆராய்ச்சி அலகு
[தொகு]2021ஆம் ஆண்டு நிலவரப்படி, பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மத்திய அரசால் நிறுவப்பட்ட 80 பலதரப்பட்ட ஆராய்ச்சி பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். முதன்மையாக தொற்றாத நோய்களில் ஆராய்ச்சியை மேற்கொள்ள இது பணிக்கப்பட்டுள்ளது.[31]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "सैफई मेडीकल यूनिवर्सिटी में मंत्री सुरेश खन्ना ने गेस्ट हाउस व बहुउद्देश्यीय हाल का किया उद्घाटन". யூடியூப். 6 January 2020.
- ↑ "School Detail". search.wdoms.org. Retrieved 27 September 2019.
- ↑ रिम्स सैफई बना आयुर्विज्ञान विश्वविद्यालय. अमर उजाला (in இந்தி). 6 June 2016.
- ↑ .
- ↑ सैफई मेडिकल यूनिवर्सिटी को गवर्नर का ओके. NBT (in இந்தி). 3 May 2016.
- ↑ 6.0 6.1 "मेडिकल यूनिवर्सिटी में एमसीएच कोर्स शुरू". Dainik Jagran (in இந்தி). Retrieved 2022-03-13.
- ↑ 7.0 7.1 "Information Brochure - Paramedical PG Entrance Test 2023 Academic session 2023-24" (PDF).
- ↑ 8.0 8.1 "UPUMS M.Pharm Admissions 2024: Applications Begin at upums.ac.in, Register By August 31". News18 (in ஆங்கிலம்). 2024-08-13. Retrieved 2024-10-19.
- ↑ "School Detail". search.wdoms.org. Retrieved 27 September 2019.
- ↑ "MoE, National Institute Ranking Framework (NIRF)".
- ↑ "Exam Cities". cdn.tcsion.com. Archived from the original on 2023-10-12. Retrieved 2023-09-18.
- ↑ "CM Yogi to inaugurate hospital in Saifai today". The Times of India. 6 March 2024. https://timesofindia.indiatimes.com/city/kanpur/cm-yogi-to-inaugurate-super-speciality-hospital-in-saifai/articleshow/108250286.cms.
- ↑ "CM Yogi inaugurates 500-bed Super Speciality Block at UP Medical Sciences University". 7 March 2024.
- ↑ "About UPUMS | Best Government Medical University in UP". www.upums.ac.in. Retrieved 2024-10-22.
- ↑ "joins forces with UPUMS for advancing healthcare". www.iitk.ac.in. Retrieved 2023-09-24.
- ↑ "IIT Kanpur, UPUMS to jointly advance healthcare". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-29. Retrieved 2023-09-05.
- ↑ "SIIC IIT Kanpur joins forces with Uttar Pradesh University of Medical Sciences for advancing healthcare". India Education | Latest Education News | Global Educational News | Recent Educational News (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-08-28. Retrieved 2023-08-29.
- ↑ https://www.livehindustan.com/uttar-pradesh/etawah-auraiya/story-saifai-medical-university-vice-chancellor-dr-prabhat-kumar-singh-s-term-ends-dr-p-k-jain-appointed-interim-vc-201733411772836.html
- ↑ "सैफई विश्वविद्यालय के नए कुलपति ने संभाला कार्यभार". Amar Ujala (in இந்தி). Retrieved 2022-01-20.
- ↑ "इटावा: शासन ने सैफई मेडिकल विश्वविद्यालय के कुलपति को छुट्टी पर भेजा, अबतक सामने आई ये बात". Amar Ujala (in இந்தி). Retrieved 2021-05-10.
- ↑ "Etawah News: छुट्टी पर भेजे गए सैफई मेडिकल यूनिवर्सिटी के VC, कोरोना प्रबंधन में नाकामी बनी वजह". News18 India (in இந்தி). 10 May 2021. Retrieved 2021-05-10.
- ↑ "Lucknow Samachar: प्रो. राजकुमार बने सैफई मेडिकल यूनिवर्सिटी के वीसी - pro. prince becomes the vc of saifai medical university". Navbharat Times (in இந்தி). 31 May 2018. Retrieved 27 September 2019.
- ↑ "यूपीयूएमएस के नए कुलपति ने कार्यभार संभाला". m.jagran.com (in இந்தி). Retrieved 27 September 2019.
- ↑ "उत्तर प्रदेश आयुर्विज्ञान विश्वविद्यालय के पहले कुलपति टी प्रभाकर". m.jagran.com (in இந்தி). Retrieved 27 September 2019.
- ↑ "Hindi News, Latest News in Hindi, Breaking News, हिन्दी समाचार". Dainik Bhaskar (in இந்தி). Retrieved 27 September 2019.
- ↑ "Affiliated colleges of in Etawah District". www.kanpuruniversity.org. Chhatrapati Shahu Ji Maharaj University, Kanpur. Archived from the original on 8 October 2016. Retrieved 12 April 2018.
- ↑ "College of Dentistry". www.upums.ac.in. Retrieved 24 June 2018.
- ↑ "Paramedical Vigyan Mahavidyalaya". www.upums.ac.in. Retrieved 24 June 2018.
- ↑ "College of Nursing". www.upums.ac.in. Retrieved 12 April 2018.
- ↑ "Pharmacy College". www.upums.ac.in. Archived from the original on 30 January 2019. Retrieved 24 June 2018.
- ↑ "Multidisciplinary Research Unit (MRU)". pib.gov.in. Retrieved 2024-01-10.