உத்தமணி புதர் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தமணி புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ரோர்செசுடசு
இனம்:
ரோ. உத்தமணி
இருசொற் பெயரீடு
ரோர்செசுடசு உத்தமணி
சக்காரியா மற்றும் பலர், 2011

உத்தமணி புதர் தவளை (Raorchestes uthamani-ரோர்செசுடசு உத்தமணி) என்பது இந்தியாவில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கவியில் காணப்படும் ரோர்செசுடசு பேரினத்தைச் சேர்ந்த தவளை சிற்றினமாகும்.[1] இரண்டு இயற்கை ஆர்வலர்களான பறவை புகைப்படக் கலைஞர் பி. கே.உத்தமன் மற்றும் துணை வனப் பாதுகாவலர் கே. வி. உத்தமன் ஆகியோரின் பெயரால் இந்த சிற்றினத்திற்குப் பெயரிடப்பட்டது. இத்தவளை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Frost, Darrel R. (2014). "Raorchestes uthamani Zachariah, Dinesh, Kunhikrishnan, Das, Raju, Radhakrishnan, Palot, and Kalesh, 2011". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Data related to Raorchestes uthamani at Wikispecies
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தமணி_புதர்_தவளை&oldid=3629892" இலிருந்து மீள்விக்கப்பட்டது