உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில்
பெயர்
பெயர்:உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:உத்தமசோழபுரம்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கரபுநாதர்
தாயார்:பெரியநாயகியம்மன்

கரபுரநாதர் கோயில் என்பது சேலம் மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். [1] இத்தலத்தின் மூலவர் கரபுநாதர், அம்பிகை பெரியநாயகியம்மன்.

சன்னதிகள்[தொகு]

இக்கோயிலில் கரடி சித்தருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கன்னி மூலை கணபதி, வள்ளி தெய்வானை முருகன், ஐயப்பன் போன்றோர் சன்னதிகள் உள்ளன. [2]

தலசிறப்பு[தொகு]

  • அங்கவை சங்கவை திருமணம் நடைபெற்ற தலம்
  • மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் கொடிகள் அர்த்த மண்டபத்தில் கல்தூணில் பதியப்பட்டுள்ளது,
  • இக்கோயிலில் ஔவையாருக்கு பெரிய சிலை அமைந்துள்ளது
  • குணசீலன் எனும் சிறுவனுக்காக மூலவர் சற்று சாய்ந்த நிலையில் அமைந்துள்ளார்.

தலவரலாறு[தொகு]

கரதூசனன் என்பவர் இராவணனின் சகோதரன் ஆவார். இவர் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தும் இறைவன் தரிசனம் தராததால், அக்னிபிரவேசம் செய்ய துணிந்தார். அப்போது அங்கு ஈசன் வெளிப்பட்டார். கரதூசன் பூசை செய்தமையால் சிவபெருமான் கரபுரநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 72
  2. ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 74